உடல் ரீதியான மற்றும் சமூக ரீதியான சவால்களை எதிர்கொண்டு மாற்றுத்திறனாளிகள் பலர் வேலைக்கு செல்கின்றனர். அவர்களில் வருமான வரி வரம்புக்குள் வருபவர்களுக்கு மத்திய அரசு பிரத்யேகமான வரிச் சலுகைகளை வழங்குகிறது.
பிரிவு 80U: மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வரிச் சலுகைகளை வழங்கும் அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேகமாகவும் வரி விலக்கு தருகிறது. அதற்கான வரையறைகளை கொண்ட பிரிவு தான் வருமான வரிச் சட்டத்தின் 80U.

யாருக்கு இந்த சலுகை பொருந்தும்?
இந்தியாவில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் (மருத்துவர் சான்று பெற்றவர்)
குறைந்தபட்சம் 40% மாற்றுத்திறனாளி என மருத்துவ சான்று பெற்றிருந்தால் மட்டுமே பொருந்தும்
பார்வை மாற்றுத்திறனாளி
காது கேட்பதில் குறைபாடு
தொழு நோயிலிருந்து குணமடைந்தவர்
லோகோ மோட்டார் இயலாமை (தன்னிச்சையாக இயக்க முடியாதவர்)
மனவளர்ச்சி
குறைபாடு மனநோய்
இந்த குறைபாடு கொண்டவர்களுக்கு இந்த பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கிறது. இந்த பிரிவிலேயே தீவிர மாற்றுத்திறனாளி என குறிப்பிடுகிறார்கள். அதாவது 80% மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் உள்ளவர். உதாரணம் - ஆட்டிசம்
எவ்வளவு வரி விலக்கு?
40%க்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் ரூ. 75 ஆயிரம் வரை வரி விலக்கு பெற முடியும்
தீவிர மாற்றுத்திறனாளிகள் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை வரி விலக்கு கோரலாம்
என்னென்ன ஆவணங்கள் தேவை?
மாற்றுத்திறனாளிகள் இந்த பிரிவின் கீழ் வரி விலக்கு பெற எந்தவித ரசீதும் சமர்ப்பிக்க தேவையில்லை.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகள் வழங்கிய மாற்றுத்திறனாளிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்
இதை தவிர்த்து உங்கள் சிகிச்சைக்கு நீங்கள் செய்த செலவு தொடர்பான எந்தவித ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை
யார் வழங்கிய மருத்துவ சான்றிதழ் செல்லும்?
நரம்பியல் பிரிவில் எம்டி பயின்ற மருத்துவ நிபுணர்கள்
அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சையாளர்
அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவ அதிகாரி
பிரிவு 80Uக்கும், பிரிவு 80DDக்கும் இடையில் உள்ள வேறுபாடு:
பிரிவு 80U மாற்றுத்திறனாளிகள் வருமான வரி தாக்கல் செய்யும் நபராக இருந்தால் , அவர் தனக்காக மேற்கொண்ட சிகிச்சைக்கான செலவுகளை கணக்கு காட்டி வரி விலக்கு பெற உதவுகிறது.
பிரிவு 80DD, வருமான வரி தாக்கல் செய்யும் நபர் தன்னை சார்ந்திருக்கும் மாற்றுத்திறனாளிக்கு சிகிச்சை மேற்கொள்ள செய்த செலவுகளை கணக்கு காட்டி வரிச் சலுகை பெற உதவுகிறது.
ஒரே நபருக்காக இரண்டு பிரிவுகளின் கீழ் வரிச் சலுகை கோர முடியாது. அதாவது பூர்ணிமா என்பவர் மாற்றுத்திறனாளி. தனியார் துறையில் பணி செய்து வரும் அவர், தனது சிகிச்சைக்காக செய்த செலவுகளுக்கு பிரிவு 80U கீழ் வரிச் சலுகை பெறுகிறார். அதே வேளையில் அவருக்கு செலவு செய்ததாக கூறி அவரது தந்தையோ , சகோதரனோ அல்லது கணவனோ 80DD பிரிவில் வரிச் சலுகை பெற முடியாது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications