சென்னை: Google Pay, PhonePe மற்றும் Paytm போன்ற யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) ஆப்கள், பணப் பரிவர்த்தனைகளை மக்கள் கையாளும் விதத்தை மாற்றியுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஆன்லைன் பேமெண்ட் தளங்கள் பணத்தைப் பரிமாற்றம் செய்வதற்கும், பில்களைச் செலுத்துவதற்கும், ரீசார்ஜ் செய்வதற்கும் வசதியான, விரைவான மற்றும் தடையற்ற வழியை வழங்குகின்றன. தற்போது இதுபோன்ற பேமெண்ட் தளங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் அங்கீகரிக்கப்படாத பணப்பரிவர்த்தனை மற்றும் மோசடிகளைத் தடுக்க, இந்த தளங்களில் உங்கள் தகவல்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது.
உங்கள் UPI பரிவர்த்தனைகளைப் பாதுகாக்க உதவும் சில அத்தியாவசிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. மல்டி ஃபேக்டர் ஆதண்டிகேஷன் (Multi Factor Authentication): உங்கள் UPI ஆப்களுக்கு ஒரு பின்னை மட்டும் போட்டு பாதுகாப்பதை விட இரண்டு அல்லது மூன்று பின் போட்டு வைக்கலாம். கைரேகை (fingerprint) அல்லது முக அங்கீகாரம் (facial recognition) போன்ற பயோமெட்ரிக் அங்கீகாரத்தையும் சேர்த்துப் பயன்படுத்துங்கள். இது கூடுதல் பாதுகாப்பாக இருக்கும்.
2. UPI பின்: ஸ்ட்ராங்கான UPI பின்னை உருவாக்கி, பிறந்தநாள் அல்லது மீண்டும் மீண்டும் வரும் இலக்கங்கள் போன்ற எளிதில் யூகிக்கக்கூடிய எண்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். பாதுகாப்பை உறுதிசெய்ய உங்கள் பின்னைத் தவறாமல் அப்டேட் செய்யவும்.
3. உங்கள் மொபைலைப் பாதுகாக்கவும்: ஸ்ட்ராங் பின் அல்லது பயோமெட்ரிக் லாக் மூலம் உங்கள் மொபைலை எப்போதும் லாக் செய்து வையுங்கள். உங்கள் தொலைபேசி தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ மோசடியாகப் பயன்படுத்தப்படுவதை இது தடுக்கிறது.
4. ஆன்டிவைரஸ்: உங்கள் கட்டண தகவலைத் திருடக்கூடிய தீங்கிழைக்கும் ஆன்டிவைரஸ் எதையும் பயன்படுத்த வேண்டாம்.
5. பரிவர்த்தனைகளை கவனமாக செயுங்கள்: பரிவர்த்தனை செய்வதற்கு முன், பெறுநரின் UPI ஐடியை எப்போதும் இருமுறை சரிபார்க்கவும். சிறிய தட்டச்சு பிழைகள் இருந்தாலும் கூட உங்கள் பணம் யாரோ ஒருவருடைய அக்கவுண்டுக்கு சென்று விழுந்துவிடும்.
6. பொது வைஃபை (Public Wifi) பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்: பாதுகாப்பான நெட்வொர்க்குகள் மூலம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் தகவல்களைத் திருட நினைக்கும் சைபர் குற்றவாளிகளுக்கு பொது வைஃபை ஒரு நல்ல ஸ்வீட் போல இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
7. வழக்கமான அப்டேட்கள்: உங்கள் UPI ஆப்ஸ்-ஐ தொடர்ந்து அப்டேட் செய்யவும். டெவலப்பர்கள் பாதுகாப்பு அம்சங்களைத் தொடர்ந்து இதுபோன்ற ஆன்லைன் பேமெண்ட் தளங்களில் மேம்படுத்துகின்றனர். எனவே வழக்கமான அப்டேட்கள், இதுபோன்ற மோசடிகளுக்கு ஒரு தீர்வாக இருக்கும்.
8. டிவைஸ் OS அப்டேட்கள்: அதேபோல உங்கள் டிவைஸ்-இன் OS அப்டேட்களை தொடர்ந்து கண்காணிங்கள். உங்களின் ஃபோனில் பாதுகாப்பை இது உறுதி செய்யும்.
9. வழக்கமான சோதனைகள்: அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை விரைவாகக் கண்டறிய உங்கள் பரிவர்த்தனை வரலாற்றை (Payment History) அடிக்கடி தெரிந்து கொள்ளவும்.
10. சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைப் புகாரளிக்கவும்: ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் அல்லது சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை நீங்கள் கவனித்தால், உடனடியாக உங்கள் வங்கிக்கும், UPI ஆப்ஸ் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கும் புகாரளிக்கவும்.
ஸ்ட்ராங் பாஸ்வேர்டுகள் மற்றும் சாஃப்ட்வேர் அப்டேட்கள் மூலம் உங்கள் சாதனத்தைப் பாதுகாப்பதன் மூலமும், அனுமதிகள் வழங்கும்போது எச்சரிக்கையாக இருப்பதன் மூலமும், Google Pay, PhonePe மற்றும் Paytm போன்ற UPI ஆப்-களில், உங்கள் கட்டணத் தகவலைப் பாதுகாக்கலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications