இந்தியாவில் மூலை முடுக்கெங்கும் யுபிஐ செயலி பயன்பாடு என்பது அதிகரித்து இருக்கிறது. எளிமையாகவும், துரிதமாகவும் ஒரு நபரின் வங்கி கணக்கில் இருந்து மற்றொரு நபரின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப யுபிஐ செயலிகள் பெரிய அளவில் உதவுகின்றன. ஒரு சிறிய பூக்கடைக்கு சென்று நாம் பொருட்களை வாங்கினாலும் சரி அல்லது ஆன்லைனில் மிகப்பெரிய ஷாப்பிங் மேற்கொண்டாலும் சரி எங்கு பார்த்தாலும் யுபிஐ மூலமாக கட்டணம் செலுத்துவதும் கட்டணம் பெறுவதும் எளிமையானதாக மாறியிருக்கிறது.
சில சமயங்களில் பணம் அனுப்பும்போது தவறுதலான மொபைல் எண்ணிற்கோ அல்லது வங்கி கணக்கிற்கோ பணம் அனுப்பி விட வாய்ப்புள்ளது. அதே சமயம் ஒரு பூஜ்ஜியம் கூடுதலாக தெரியாமல் டைப் செய்துவிட்டால் கூட 100 ரூபாய் என்பது 1000 ரூபாய் ஆகி விடும். இவ்வாறு யுபிஐ மூலம் தவறுதலாக அனுப்பப்பட்ட பணத்தை எப்படி திரும்ப பெறுவது என்பது குறித்து நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பணத்தை அனுப்புவதற்கு முன்பு நீங்கள் உள்ளிட்ட யுபிஐ ஐடி அல்லது மொபைல் எண் ஆகியவை சரியா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்ப்பது அவசியம். அதே போல கியூஆர் கோடினை ஸ்கேன் செய்யும் போது சம்பந்தப்பட்ட நபரின் யுபிஐ ஐடி காட்டும் ஒருமுறை அவர்களிடம் அதனை உறுதி செய்து கொள்வது நல்லது.
முதலில் ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு முறை தவறாக பணம் அனுப்பிவிட்டால் அந்த பரிவர்த்தனையை reverse செய்ய முடியாது. பணம் அனுப்பிய உடனே அந்த கணக்கிற்கு பணம் போய்விடும். முதலில் நீங்கள் செய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு தவறுதலாக பணம் அனுப்பியது குறித்து எடுத்துரைத்து பணத்தை திரும்ப பெறலாம்.
அவர் தர மறுக்கிறார் அல்லது அவ்வாறு தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் நாம் புகார் அளித்து நம் பணத்தை திரும்ப பெற வாய்ப்புள்ளது. எந்த யுபிஐ செயலியில் பணம் அனுப்பினீர்களோ அந்த செயலிக்கு சென்று குறிப்பிட்ட அந்த transactionஐ தேர்வு செய்யுங்கள். அதில் having an issue or complaint என்ற ஆப்ஷன் காட்டும். ஒவ்வொரு செயலிக்கும் இது மாறும்.இதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
உதாரணமாக ஜிபே என்றால் get help என்பதை கிளிக் செய்து புகார் அளிக்கலாம் அல்லது call, chat என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கஸ்டமர் கேரினை தொடர்பு கொண்டு புகார் தரலாம். இது சரிப்பட்டு வராது என்பவர்கள் சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொள்ளலாம். இதற்கு நீங்கள் எந்த வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்பினீர்களோ அந்த வங்கிக்கு நேரடியாக செல்லலாம் அல்லது ஆன்லைனில் புகார் வழங்கலாம்.
வங்கி வழியாக புகார் அளிக்கும் போது அந்த யுபிஐ பரிவர்த்தனைக்கான ஐடி, நீங்கள் பணம் அனுப்பிய அந்த நம்பர் அல்லது யுபிஐ அல்லது அக்கவுண்ட் நம்பர், பரிவர்த்தனை நிகழ்ந்த தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு புகார் தர முடியும். வங்கி சார்பில் உங்களின் புகாரை ஆய்வு செய்து பதில் தருவார்கள்.
வங்கியிலும், யுபிஐ செயலி என இரண்டிலும் உங்களுடைய புகாருக்கு பதில் கிடைக்கவில்லை என்றால் என்பிசிஐ-ன் கஸ்டமர் கேர் போர்ட்டலில் புகார் தரலாம். https://www.npci.org.in என்ற இணையதளத்தில் பரிவர்த்தனை ஐடி, தேதி, நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு புகார் தந்து நிவாரணம் பெறலாம்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications