சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான படிவங்களை வருமானவரித்துறை வெளியிட்டு இருக்கிறது . சம்பளதாரர்கள் பலரும் தங்களுடைய வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யும் நடைமுறைகளை தொடங்கி இருக்கின்றனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.
அதில் முக்கியமானது வாடகைக்கு குடியிருப்பவர்கள் தங்களுடைய வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை குறிப்பிட வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய சம்பளத்தில் அடிப்படை சம்பளம் மட்டும் இல்லாமல் வீட்டு வாடகை அலொவென்சையும் வழங்குகின்றன. நமக்கு இந்த வீட்டு வாடகை அலொவென்சுக்கும் வருமான வரி விலக்கு கிடைக்கிறது.

நாம் வேலை செய்யும் நிறுவனங்களிடம் வீட்டு வாடகைக்கான ரசீதை வழங்க வேண்டும். ஒரு நிதியாண்டில் நாம் செலுத்தக்கூடிய வாடகை மொத்த மதிப்பு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் நம் வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை குறிப்பிட்டு ரசீதினை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நம் வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை குறிப்பிடத் தவறினால் நமக்கு வீட்டு வாடகைக்கான அலொவென்சுக்கு கிடைக்க வேண்டிய வருமான வரி விலக்கு கிடைக்காமல் போகலாம்.
ஒரு நிதியாண்டில் நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வீட்டு வாடகை செலுத்தி இருக்கிறீர்கள் ,உங்களுடைய சம்பளத்தில் House Rent Allowance என ஒரு பிரிவு தனியாக இருக்கிறது என்றால் நீங்கள் கட்டாயமாக உங்கள் வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை குறிப்பிட்டு வீட்டு வாடகைக்கான ரசீதையும் சமர்ப்பித்தாக வேண்டும். அந்த ரசீதில் வீட்டு உரிமையாளரின் கையெழுத்து இடம்பெற்றிருக்க வேண்டும்.
வருமான வரி விலக்கு பெற வேண்டும் என்பதற்காக வீட்டு வாடகையை தவறாக குறிப்பிட்டு போலியான பான் எண்களை உள்ளிடுவதை சிலர் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர் . இவ்வாறு போலியான பான் எண்ணை வழங்கினால் வருமான வரி துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் என்பதோடு மட்டுமில்லாமல் வீட்டு வாடகைக்காக வழங்கப்படக் கூடிய வருமான வரி விலக்கும் முழுவதுமாக நீக்கப்படும்.
பழைய வரி நடைமுறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மட்டுமே வீட்டு வாடகை அலொவென்சுக்கு வாடகை ரசீதை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நீங்கள் பழைய வரி நடைமுறையை பின்பற்றுகிறீர்கள் என்றால் வீட்டு வாடகை வருமான வரி விலக்கு பெறுவதற்கு வாடகை ரசீதை சமர்ப்பிக்க வேண்டும். புதிய வரி நடைமுறையை பின்பற்றுபவர்களுக்கு இந்த விலக்கு இல்லை என்பதால் அவர்கள் இதை பற்றி கவலைப்பட தேவையில்லை.
ஒரு வேளை வீட்டு வாடகை மாதம் 50,000 ரூபாய்க்கு மேல் இருக்கிறது என்றால் வாடகையில் 10 சதவீத தொகையை டிடிஎஸ்-ஆக கழித்து நீங்கள் வீட்டு உரிமையாளரின் பெயரில் வருமான வரி துறையிடம் டெபாசிட் செய்ய வேண்டும். உங்களுடைய வீட்டு உரிமையாளர் பின்னர் அதனை வருமானவரித் துறையிடமிருந்து கணக்கு காட்டி பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த ஆண்டு வருமானவரி படிவத்தில் வீட்டு வாடகை தொடர்பான விவரங்களை குறிப்பிடும் போது பின்வரும் விவரங்களை சேர்க்க வேண்டும்.
1. வேலை செய்யும் இடம்
2. உங்களுக்கு கிடைத்த வீட்டு வாடகை அலொவென்ஸ்
3. உண்மையில் நீங்கள் செலுத்திய வாடகை
4. ஊதிய விவரங்கள்
5. அடிப்படை சம்பளம்
மேலே கூறிய இந்த விவரங்களை சமர்ப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு படிவத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications