நீங்கள் எந்த மொபைல் நெட்வொர்க்கிற்கும் போர்ட் செய்யும் முன் சில விஷயங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது. உங்கள் தற்போதைய நெட்வொர்க்கில் இருந்து நீங்கள் மற்றொரு நெட்வொர்க்கிற்கு போர்ட் செய்வதற்கு முன் சில சோதனைகளைச் செய்ய வேண்டும். எனவே நீங்கள் ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு போர்ட் செய்வதற்கு முன் பின்வரும் ஐந்து முக்கிய விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.
1) உங்கள் போர்ட்டின் நெட்வொர்க் கவரேஜை அறிந்து கொள்ளுங்கள்: நீங்கள் எந்த டெலிகாம் நெட்வொர்க்கிற்கும் போர்ட் செய்வதற்கு முன், அந்த நெட்வொர்க் கவரேஜ் உங்கள் பகுதியில் நன்றாக உள்ளதா? என்பதை சரிபார்க்கவும். உங்கள் பகுதியில் வலுவான சிக்னல் இருந்தால் மட்டுமே டேட்டா வேகம் மற்றும் அழைப்பு தரத்தை பெற முடியும். ஆனால் சில தொலைதூர பகுதிகளில் சிக்னல் குறைவாக இருக்கும் மற்றும் நெட்வொர்க் கவரேஜ் தோல்வியடையும்.

2) திட்டம் மற்றும் நன்மைகளை ஒப்பிடுங்கள்:உங்கள் தற்போதைய நெட்வொர்க் மற்றும் போர்ட்டட் நெட்வொர்க்கிற்கு இடையே உள்ள திட்டங்களையும் நன்மைகளையும் ஒப்பிட்டு பாருங்கள். ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்டு திட்டங்களின் விலை மற்றும் பலன்களை ஒப்பிடுங்கள். அவற்றில் OTT சந்தா, அன்லிமிடெட் கால்ஸ், டேட்டா பேக் உள்ளதா என சரிபார்க்கவும்.
உங்கள் தற்போதைய தொலைத்தொடர்பு நிறுவனத்தை விட சிறந்த பிளான்கள் இருந்தால் மட்டுமே நெட்வொர்க்கை போர்ட் செய்ய முடிவு செய்யுங்கள்.
3) போர்டிங் செயல்முறை மற்றும் எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்:எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் போர்ட்டிங் பொதுவாக சில மணிநேரங்கள் முதல் ஏழு நாட்கள் வரை ஆகும். இது அந்தந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களில் மாறுபடும். எனவே இதில் நீங்கள் தற்காலிக பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே போர்டிங் செயல்முறை எடுக்கும் நேரம் உங்களுக்குத் தெரிந்தால், அதுவரை உங்கள் பழைய நெட்வோர்க்கை செயலில் வைத்திருக்கலாம்.
4) நீங்கள் போர்டிங்கிற்கு தகுதியானவரா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள்:உங்கள் எண்ணை எந்த நெட்வொர்க்கிற்கும் போர்ட் செய்வதற்கு முன் நீங்கள் சிம் வாங்கி குறைந்தது 90 நாட்களுக்கு நீங்கள் செயலில் இருக்க வேண்டும். மேலும் தற்போதுள்ள நெட்வொர்க் ஆபரேட்டருடன் நிலுவையில் உள்ள நிலுவை எதுவும் இருக்கக்கூடாது. போர்டிங்கிற்காக அடையாள சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
5) போர்டிங் கட்டணங்கள் மற்றும் சிம் செயல்படுத்தும் செயல்முறையை அறிந்து கொள்ளுங்கள்:பொதுவாக ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு போர்ட் செய்ய 19 ரூபாய் செலவாகும். ஆனால் ஏர்டெல் போன்ற சில நெட்வொர்க்குகள் தங்கள் விளம்பரத்திற்காக இலவசமாக போர்ட் செய்கின்றன. நீங்கள் போர்ட் செயல்முறைகளை செய்த பின் புதிய சிம் கார்டைப் பெறுவீர்கள். மேலும் சில மணிநேரங்களில் புதிய சிம் செயல்படுத்தல் வெற்றிகரமாக நடைபெறும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications