சென்னை: இந்தியாவில் தற்பொழுது எங்கு பார்த்தாலும் ஆன்லைன் பேமெண்ட் தான். சிறிய பெட்டிக்கடைகளில் கூட தற்போது QR குறியீடுகளைப் பார்க்க முடிகிறது. ஆன்லைன் பேமெண்ட் தளங்களான கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் அதிகப் புழக்கத்தில் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் நாட்டில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை சற்று குறைவு என்று தான் சொல்ல வேண்டும். காண்டாக்ட்லெஸ் முறைப்படி, ஆன்லைனில் பணம் செலுத்தி வருகின்றனர். பலரும் தங்களது மொபைல் போனில் கூகுள் பே செயலியை வைத்திருப்பீர்கள். அவ்வாறு இல்லாதவர்கள் கூகுள் பே செயலியை எப்படி உங்கள் ஸ்மார்ட் போனில் ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

உங்களது ஸ்மார்ட் போனில் எப்படி கூகுள் பே செயலியை ஆக்டிவேட் செய்வது?:
ஸ்டெப் 1: முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து, கூகுள் பே ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 2: அதன் பிறகு உங்கள் மொபைல் நம்பரை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 3: உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட் மூலமாக நீங்கள் கூகுள் பே ஆப்பில் உள்நுழையலாம்.
ஸ்டெப் 4: மற்றவர்கள் உங்களது கூகுள் பே அக்கவுண்ட் பயன்படுத்தாதவாறு, பின் நம்பரை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 5: அதன் பிறகு உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை என்டர் செய்து கொள்ளவும். தேவைப்பட்டால், நீங்கள் இரண்டு மூன்று கணக்குகள் கூட கூகுள் பே செயலியுடன் இணைக்க முடியும்.
ஸ்டெப் 6: உங்கள் வங்கி கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும்.
ஸ்டெப் 7: பிறகு உங்கள் வங்கி கணக்கு உறுதி செய்யப்பட்டவுடன், உங்கள் காண்டாக்ட்டில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும், நீங்கள் பணம் அனுப்பலாம். மேலும் கடைகளுக்கு சென்றால் அங்குள்ள QR குறியீட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
உங்களுடைய உறவினர்கள் யாரேனும் கூகுள் பே செயலியை வைத்திருந்தால், அவர்களிடம் இருந்து ரெபரல் லிங்க் பெற்று, கூகுள் பிளே செயலியை டவுன்லோட் செய்யும்போது, உங்களுக்கும் அவருக்கும் ரிவார்ட்கள் கிடைக்கும்.
கூகுள் பே செயலியை பயன்படுத்துவதால் உள்ள நன்மைகள்: EB பில் செலுத்த வரிசையில் நின்று செலுத்த வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கூகுள் பிளே செயலியின் மூலம் உங்களுடைய கன்ஸ்யூமர் நம்பரை என்டர் செய்து, வைத்துக் கொண்டால் அதன் மூலம் எளிதாக பில் செலுத்த முடியும்.
மேலும், ரீசார்ஜ் செய்ய நீங்கள் கடைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களது மொபைல் மூலம் எளிதாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். Sachet loan என்று சொல்லப்படுகிற லோன் வசதியையும் கூகுள் பே தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் சிறு வணிகம் செய்யும் தகுதியுள்ள நபர்கள் ரூ. 15,000 வரையிலான கடன்களைப் பெற முடியும். இந்தத் தொகையை, சிறிய மாதத் தவணையாக நீங்கள் திருப்பிச் செலுத்தலாம். கேஸ் சிலிண்டர் புக்கிங் போன்றவற்றை எளிதாக வீட்டில் இருந்தே செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications