சென்னை: மியூச்சுவல் ஃபண்டு என்பது முதலீட்டாளர்களின் பணத்தை சேகரித்து, அதனை பல்வேறு பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் பிற பத்திரங்களில் முதலீடு செய்யும் ஒரு முதலீட்டு முறையாகும். மியூச்சுவல் ஃபண்டுகளை வைத்திருக்க முதலீட்டாளர்களுக்கு பல்வேறு முறைகள் உள்ளன. இந்தப் பதிவில் மியூச்சுவல் ஃபண்டுகளை வைத்திருக்கும் முக்கியமான முறைகளைப் பற்றிப் பார்ப்போம்.
சிங்கிள் ஹோல்டிங் (Single Holding): சிங்கிள் ஹோல்டிங் என்ற முறையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஒருவருக்கே சொந்தமானது. தனி நபர்களுக்கு இது மிகவும் எளிமையான முறை. இதில், மியூச்சுவல் ஃபண்டு யூனிட்டுகள் ஒருவரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்படும். மியூச்சுவல் ஃபண்டு கணக்கை பராமரிப்பதற்கும், பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கும் ஒருவர் மட்டுமே அங்கீகாரம் பெற்றிருப்பார்கள்.

கூட்டு கணக்கை வைத்திருத்தல் (Joint Holding): கூட்டு கணக்கை வைத்திருப்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிநபர்கள் மியூச்சுவல் ஃபண்டு கணக்கை ஒன்றாக சேர்ந்து வைத்திருப்பதைக் குறிக்கிறது. எந்தவொரு பரிவர்த்தனைகள் அல்லது மாற்றங்கள் செய்யும்போது, உங்களுடன் கூட்டு கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்தும் அனுமதித் தேவைப்படுகிறது.
இந்த முறையின் மூலம், கூட்டு கணக்கை வைத்திருப்பவர்களும் கணக்கை நிர்வகிக்கலாம். அனைத்து பரிவர்த்தனைகளுக்கு பொதுவாக அனைத்து தரப்பினரிடமிருந்தும் கையொப்பங்கள் அல்லது அங்கீகாரம் தேவைப்படுகிறது. கூட்டு கணக்கு திருமணம் ஆன தம்பதிகள், வணிகப் பங்காளிகள் அல்லது கூட்டு முதலீட்டை நிர்வகிக்க விரும்பும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்றது.
Either or survivor: இந்த முறையைப் பயன்படுத்தி, மியூச்சுவல் ஃபண்ட் கணக்கை இருவர் வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவர் இறந்துவிட்டால், மற்றொருவர் எந்தவித அனுமதியும் இன்றி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இது தம்பதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்ற முறையாக உள்ளது.
பின்குறிப்புகள்: சிங்கிள் ஹோல்டிங் முறையைப் பயன்படுத்தும் முதலீட்டாளர் இறந்துவிட்டால், வாரிசுதாரர்கள் அந்த நிதியைப் பெறுவதற்கு உயில் அல்லது பிற சட்டப்பூர்வ ஆவணங்களை வழங்க வேண்டும். இது, சற்று நேரம் எடுக்கும் ஒரு செயல்முறையாக இருக்கலாம்.
கூட்டு கணக்கு வைத்திருக்கும் பட்ச்சத்தில், ஒருவர் இறந்துவிட்டால், எஞ்சியிருக்கும் மற்றொருவர் முழுக் கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், அவர்களுக்குள் தகராறுகள் ஏற்பட்டால் இந்த செயல்முறையும் சிக்கலாகிவிடும்.
மூன்றாவது முறையில், ஒருவர் இறந்துவிட்டால், எஞ்சியிருப்பவர் கணக்கின் முழுக் கட்டுப்பாட்டையும் பெற்றுக் கொள்ளலாம்.மியூச்சுவல் ஃபண்டில் நிதிகளை பராமரிக்கும் முறைகளைத் தெரிந்து கொண்டால், நமக்கு எது மிகவும் பொருத்தமானது என்பதைத் தேர்வு செய்து, நிதி மேலாண்மையை சிறப்பாகச் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications