சென்னை: சிஸ்டெமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) முதலீடு, காலப்போக்கில் தங்கள் செல்வத்தை சீராக வளர்க்க விரும்பும் தனிநபர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. SIP என்பது மியூச்சுவல் ஃபண்ட்ஸின் மூலம் வழங்கப்படும் ஒரு வகை முதலீடாகும். இதனைப் பயன்படுத்தி ஒருவர் சிறு தொகையை தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். சான்றாக ரூ.500 அல்லது ரூ. 1000 போன்ற தொகையில் இருந்து தவணையாகச் செலுத்த முடியும். இது ஒரு தொடர் வைப்பு போன்றது. சந்தை ஏற்ற இறக்கங்கள் போன்ற எதனையும் கருத்தில் கொள்ளாமல் சீராக செயல்படுவதால் SIP, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. அதிக ரிட்டர்ன்களைப் பெற ஆரம்ப கட்டத்தில் இருந்து முதலீடு செய்ய தொடங்க வேண்டும்.
அனைவர்க்கும் வயதான காலத்தில் உதவ ஒரு தொகை தேவை. இதற்கான உங்களது விருப்பத்தை SIP முதலீடுகள் பூர்த்தி செய்யும். SIP money rule ஆன 25/2/5/35 பின்பற்றினாலே போதுமானது. இந்த ஃபார்முலாவை பின்பற்றினால் சிறந்த லாபம் பெறலாம். சரி, அது என்ன ரூல் என்பதைப் பற்றி பார்ப்போம்.

அந்த ஃபார்முலாவின் படி, முதல் 25 என்பது வயதை குறிக்கிறது. நாம் 25 வயது முதலே முதலீடு செய்ய தொடங்க வேண்டும். அடுத்த எண் 2 என்பது குறைந்த பட்ச முதலீடாக ரூ. 2000த்தில் இருந்து தொடங்கலாம். எண் 5 என்பது ஒவ்வொரு வருடமும் 5% அதிகம் சேர்த்து முதலீடு செய்வதைக் குறிக்கிறது. 35 என்பது SIP ஐ தொடர்ந்து 35 வருடங்கள் சேமிக்க வேண்டும் என்பதாகும்.
இதன்படி நீங்கள் ரூ.2000 முதல் 25 ஆண்டுகளுக்கு SIP ஐ தொடங்கும்போது, நீங்கள் ஒரு வருடத்திற்கு பின் ரூ.2000+100 சேர்த்து ரூ. 2100 ஆக செலுத்த வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வருடமும் 5 % சேர்ந்துக் கொண்டே செல்ல வேண்டும். உதாரணமாக, SIP தொடங்கும்போது முதலில் ரூ.2000 எனில், மறு வருடம் ரூ.2100(ரூ.2000த்தில் 5% சேர்க்க வேண்டும்), அதற்கு அடுத்த ஆண்டு ரூ.2205 என அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அந்த ஃபார்முலாவின் படி 35 வருடங்களை தாண்டும் போது, நீங்கள் 60 வயதை நிறைவு பெற்று இருப்பீர்கள்.
முதலீடு செய்த தொகையை கால்குலேட் செய்து பார்த்தால் நீங்கள் மொத்தமாக ரூ. 21,67,68 முதலீடு செய்திருப்பீர்கள். SIP இன் சராசரி வருமானம் 12%. அப்போது உங்களின் 35 கால முதலீட்டிற்கு ரூ.1,77,71,532 வட்டி கிடைக்கும். வட்டியும் அசலும் ஒன்று சேர ரூ. 1,99,39,220 கிடைக்கும். எனவே உங்களுடைய 60 ஆம் வயதில் நீங்கள் கிட்டத்தட்ட ரூ.2 கோடி இருக்கும். எனவே, உங்களின் சுய விருபத்தில் தக்க ஆலோசனையுடன் முதலீடு செய்யவும்.


Click it and Unblock the Notifications