எஸ்ஐபி என்பது சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் ஆகும். அதாவது திட்டமிட்டு சேமிக்கும் முதலீடு திட்டமாகும். இந்த திட்டம் மியூச்சுவல் பண்டுகள் மூலமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இப்படி எஸ்ஐபி வாயிலாக மியூச்சுவல் பண்டு முதலீடுகளைச் செய்வது முதலீட்டாளர்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்கிறது.
எஸ்ஐபிகள் நெகிழ்வான முதலீட்டு கால திட்டங்கள், கூட்டுத்தொகையை வழங்குகின்றன. அவை தினசரி, வாராந்திர, மாதாந்திர, காலாண்டு மற்றும் அரையாண்டு திட்டங்கள் என முதலீட்டாளர்களின் வசதிக்கேற்ப முதலீடு செய்யும் வாய்ப்பை அளிக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமித்து, முதிர்ச்சித் தொகையை அடைவதற்கு முதலீட்டாளருக்கு வழி வகுக்கிறது.

எஸ்ஐபியின் கீழ் ஒருவர் ரூ.10,000 மாதாந்திர முதலீடு செய்வதன் மூலம், ரூ.3.52 கோடி வரை முதிர்ச்சித் தொகையை பெற முடியும். 100 ரூபாய் என்ற ஒரு சிறிய தொகையுடன் கூட இந்த முதலீட்டைத் தொடங்கலாம்.
எஸ்ஐபியில் தினசரி, வாராந்திர, மாதாந்திர அடிப்படையில் முதலீடு செய்யும் வசதி இருப்பதால் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப திட்ட முதிர்ச்சி காலத்தை தேர்வு செய்து குறிப்பிட்ட தொகையைப் பெறலாம். எஸ்ஐபி முதலீட்டின் முக்கிய நன்மைகளில் ஒன்று, இது உங்களுக்கு கூட்டுத்தொகையின் பலனைத் தருகிறது. இதை காம்பவுண்டிங் என்கின்றனர்.
அதாவது ஒரு வருட இறுதியில் சேரும் உங்கள் வருமானம் அடுத்த ஆண்டுக்கான அசல் தொகையாக மாறும். இப்படி ரூ.10000 என்ற மாதாந்திர முதலீடு 20, 25 மற்றும் 30 ஆண்டுகளில் 12 சதவீத வருமானம் அடிப்படையில் கணக்கிட்டால் முறையே ரூ. 1 கோடி, ரூ. 1.9 கோடி, ரூ. 3.5 கோடியைக் குவிக்க உதவும்.
உங்கள் மியூச்சவல் பண்ட் முதலீடுகள், கணக்கீடுகளுக்குச் செல்வதற்கு முன், எஸ்ஐபி முதலீட்டின் சில நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள். எஸ்ஐபியில் செய்யப்படும் முதலீடுகள் பங்குச்சந்தையில் பங்குகளாக வாங்கப்படும். அந்த பங்கின் மதிப்பை NAV என அழைக்கப்படுகிறது.
என்ஏவி என்பது பங்கின் நிகர சொத்து மதிப்பு விகிதம் ஆகும். இந்த மதிப்பு பங்குச் சந்தை மாற்றங்களைப் பொறுத்து ஒவ்வொரு நாளும் மாறும். இதனால் உங்கள் முதலீட்டு சுழற்சியின்படி வெவ்வேறு கட்டணங்களில் அதே என்ஏவியை வாங்க நேரும். எ.கா., ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதியென்ற நிலையான முதலீட்டுத் தேதியுடன் கூடிய மாதாந்திர எஸ்ஐபியை நீங்கள் தேர்வுசெய்திருந்தால், ஒவ்வொரு முதலீட்டுச் சுழற்சிக்கும் எஸ்ஐபி விகிதம் மாறுபடும். அதாவது நீங்கள் சந்தை ஏற்ற இறக்கமாக இருக்கும்போது அதிக எஸ்ஐபிகளை வாங்குவீர்கள்.
ஸ்திரமான சந்தையில் குறைவான எஸ்பிகளை வாங்குவீர்கள். உங்கள் வருவாய் சுழற்சிக்கு ஏற்ப முதலீடு செய்வதில் நெகிழ்வுத்தன்மை எஸ்ஐபி முதலீட்டின் மற்றொரு நன்மையாகும். உங்கள் பரஸ்பர நிதி நிறுவனத்துக்குத் தெரிவித்த பிறகு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எஸ்ஐபிகளை நிறுத்திக் கொள்ளலாம்.
எஸ்ஐபி முதலீடு கூட்டுத்தொகையை வழங்குகிறது, எனவே நீங்கள் முதலீட்டை எவ்வளவு காலம் செய்கிறீர்களோ அவ்வளவு வேகமாக உங்கள் முதிர்ச்சித் தொகை அதிகரிக்கும். எ.கா., நீங்கள் 20, 25 மற்றும் 30 ஆண்டுகளுக்கு ஒரு மாதத்துக்கு ரூ. 5,000 முதலீடு செய்து, 12 சதவீத வருடாந்திர வருமானத்தைப் பெற்றால், நீங்கள் முறையே ரூ. 50 லட்சம், 95 லட்சம் மற்றும் 1.76 கோடியை அடையலாம்.
Story written by : I. Jayachandran


Click it and Unblock the Notifications