ஒரு சராசரி குடிமகனின் மூன்று முக்கிய அடிப்படைகளில் ஒன்று வசிப்பதற்கான வீடு. ஒருவர் வீடு வாங்குவதற்கான மொத்த பணத்தையும் சேமித்த பின்னர் வீடு வாங்க யோசித்தால், அவரால் கண்டிப்பாக வீடு வாங்க இயலாது. எனவே தான் நாம் அனைவரும் வீடு வாங்க, வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வசதிகளைப் பயன்படுத்தி வருகின்றோம்.
வங்கிகளும் மக்களுக்கு மிகவும் தாராளமாக வீட்டுக் கடன்களை வழங்குகின்றன. எனினும் அடிக்கடி மாறும் வட்டி விகிதம், வீட்டுக் கடன் வாங்கியவர்களின் தூக்கத்தைக் கெடுத்து விடுகின்றது.
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.5% ஆக அறிவித்தது. ரெப்போ வட்டி என்பது வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் வட்டி விகிதமாகும். ரெப்போ வட்டி விகதம் அதிகரித்ததன் காரணமாக, பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கக் கூடும்.
வீட்டுக் கடன்
வீட்டுக் கடனில் நிலையான வட்டி விகிதம் அல்லது மாறும் வட்டி விகிதங்கள், மொத்த கடன் தொகையைத் திருப்பிச் செழுத்தும் காலம், கடன் தொகையை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப திருப்பிச் செலுத்தும் வசதி உட்படப் பல்வேறு விருப்பங்களைத் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.
இவை அனைத்தும் தனிப்பட்ட கடனாளிகளின் தேவைகளைப் பூர்த்திச் செய்யவே வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே இவற்றை நமது நன்மைக்குப் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமாகும்.
நிபுணர் காட்டும் வழி
வீட்டுக் கடனுக்கான வட்டி விகித உயர்வை யாராலும் தடுக்கவும் முடியாது. ரெப்போ விகித உயர்வுக்கு ஏற்ப வங்கிகள் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தை அதிகரிக்கும். ஆனால் ஒவ்வொரு வாடிக்கையாளரை பொருத்து EMI-யை அதிகரிக்கும் அல்லது கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை அதிகரிக்கும். இதைப் பொதுவாக வங்கிகளே செய்துவிடும், ஆனால் சில நேரத்தில் சில வங்கியில் வாடிக்கையாளர் கோரிக்கையின் பெயரில் செய்யப்படும்.
ஈஎம்ஐ-யை குறைக்க வழிகள்
ஆனால் ஹோம் லோனுக்கான ஈஎம்ஐ-யை குறைக்க வேறு சில வழிகளும் இருக்கின்றன எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் EMIகளின் தொகையைக் குறைக்கச் சில பல வழிகளைப் பின்பற்றலாம் என இத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஓவர் டிராஃப்ட் வசதி
ஓவர் டிராஃப்ட் வசதியுடன் கூடிய வீட்டுக் கடனைத் தேர்வு செய்யவும், இத்தகைய கடனில் EMI-க்கான வட்டி விகிதம் ~0.50% முதல் 0.75% வரை சற்று அதிகமாக இருந்தாலும், வட்டியைச் சேமிக்க வாடிக்கையாளர்களுக்கு இந்த வீட்டு கடன் ஒரு அருமையான வசதியை வழங்குகின்றாது. இந்தக் கணக்கில் கையில் இருக்கும் உபரி பணத்தை விருப்பப்படி கடன் கணக்கில் செலுத்தலாம். வீட்டுக் கடன்களின் வட்டி விகிதங்கள் சேமிப்புக் கணக்கு விகிதங்களை விட அதிகமாக இருப்பதால், இந்தக் கடன் கணக்கில் சேமிக்கும் தொகைக்குக் கூடுதல் வட்டியும் நன்மையும் கிடைக்கும்.
வட்டி விகித சுழற்சி
வட்டி விகித சுழற்சியைச் சரிபார்க்கவும்: வட்டி விகிதம் தற்போது உச்சத்தில் இருக்கிறது. மேலும் இது அடுத்து வரும் வருடங்களில் கண்டிப்பாகக் குறையும் என எதிர்பார்க்கபடுகின்றது. எனவே அடுத்து வரும் வருடங்களில் மத்திய ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்கும் பொழுது, அந்த வட்டிக் குறைப்பு தன்னுடைய வீட்டுக் கடன் கணக்கிற்கும் வழங்கப்படுகின்றதா என்பதை வாடிக்கையாளர்கள் கண்டிப்பாகச் சரி பார்க்க வேண்டும்.
உபரி நிதி
அதிகப்படியான உபரி நிதியிலிருந்து முன்கூட்டியே செலுத்துதல், உங்களுக்கு ஊக்கத்தொகைகள் அல்லது போனஸ் அல்லது உபரி பணப்புழக்கம் ஆகியவற்றில் இருந்து ஏதேனும் எதிர்பாராத வரவு கிடைத்தால் அவற்றை வீட்டுக் கடன் கணக்கில் முன்கூட்டியே செலுத்தி உங்களுடைய EMI ஐ குறைக்கலாம்.
மறு பேச்சுவார்த்தை மற்றும் மறு நிதியுதவி உத்தி
வீட்டுக் கடன் வழங்கும் பிற வங்கிகள் / எஃப்ஐக்கள் ஆகியவற்றின் பல்வேறு சலுகைகள் மற்றும் வட்டி விகிதங்களை அடிக்கடி கவனிப்பது மிகவும் நல்லது. உங்களுடைய கணக்கை விட அவர்களுடைய சலுகைகள் லாபம் அளிப்பதாகத் தோன்றினால், தயங்காமல் உங்களுடைய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள். அவர்கள் உங்களுடைய எதிர்பார்ப்புக்கேற்ப செயல்படாத பட்சத்தில் பிற நிதி நிறுவனங்களைத் தேர்வு செய்து மறுநிதியளிப்பு செய்வதன் மூலம் உங்களுடைய ஈஎம்ஐ-யை குறைக்கலாம்.
அதிகபட்ச தவணைக்காலத்தை தேர்வுசெய்க:
உங்களூடைய வயதிற்கேற்ப அதிகபட்ச கடன் காலவரையறையைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இது கண்டிப்பாக உங்களுடைய மாதாந்திர EMI சுமையைக் குறைக்கும். 25 முதல் 30 வருட காலத்திற்கான EMI என்பது 15 முதல் 20 ஆண்டுகளுக்கான EMI ஐ விடக் கணிசமாகக் குறைவாகவே இருக்கும். உபரி நிதி கிடைக்கும் பொழுது வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்தும் வசதி வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் நடைமுறையில் இருக்கும். அதை அப்பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதிகமான கிரெடிட் ஸ்கோரை பராமரித்தல்:
கடனளிப்பவரிடமிருந்து சிறந்த வட்டி விகிதத்தைப் பெறுவதை உறுதி செய்வதற்காக அனைத்துக் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு பில்களை முறையாகத் திருப்பிச் செலுத்துவதை நாம் வாடிக்கையாகக் கொள்ள வேண்டும். இது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை கண்டிப்பாக உயர்த்தும். அதிக கிரெடிட் ஸ்கோருக்கு குறைந்த வட்டி விகிதம் கண்டிப்பாகக் கிடைக்கும்.
கடனை திரும்பச் செலுத்தும் காலம்
தற்போது வீட்டுக் கடன் வாங்குபவர்கள், தங்களுடைய வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் போது, கடன் வழங்குபவரின் ஒப்புதலுடன், EMI அதிகரிப்பு அல்லது திரும்பச் செலுத்தும் காலத்தை அதிகரிப்பது போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வுசெய்யலாம். ஒருவர் கடனை திரும்பச் செலுத்தும் காலத்தை அதிகரித்தால், அவருக்கு அதிகமான வட்டிச் செலவு ஏற்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
வட்டிச் செலவில் சேமிப்பு
தற்போது வீட்டுக் கடன் வாங்கியவர்கள் போதுமான உபரி நிதிகளைப் பயன்படுத்தித் தங்கள் வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்தலாம். அவ்வாறு செலுத்தும் பொழுது வீட்டுக் கடன் விகிதங்களின் தாக்கம் கண்டிப்பாகக் குறையும். ஒருவர் தன்னுடைய கடனை முன்கூட்டியே திரும்பச் செலுத்தும் பொழுது, கடனை திரும்பச் செலுத்தும் காலத்தைக் குறைத்து வட்டிச் செலவில் அதிகச் சேமிப்பை உருவாக்க இயலும்.
வங்கியை மாற்றுதல்
ஏற்கனவே வீட்டுக் கடன்களைப் பெற்றவர்கள், சிறிது காலத்திற்குத் தங்களுடைய கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க வேண்டும். அதன் பின்னர் தங்களுடைய வீட்டுக் கடன் கணக்கை மற்றொரு நிதி நிறுவனத்திற்குக் குறைந்த வட்டி விகிதத்தில் பரிமாற்றிக் கொள்ளலாம். வாடிக்கையாளரின் மேம்பட்ட கிரெடிட் ஸ்கோர், அவர்களுக்கு ஏற்கனவே உள்ள வட்டி விகிதத்தை விடக் குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களைப் பெற வழி வகுக்கும். இதன் மூலம் அவர்களின் மொத்த வட்டிச் செலவை கணிசமாகக் குறைக்கலாம்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications