EPF எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் சுய விவரங்களில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு என்னென்ன ஆவணங்களை சான்றாக வழங்க வேண்டும் என்பது குறித்த முக்கியமான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை EPFO அறிவித்துள்ளது.
ஈபிஎஃப் தளத்தில் உறுப்பினர்களின் சுய விவரங்களில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மார்ச் 11ஆம் தேதி சுற்றறிக்கை மூலம் ஈபிஎஃப்ஓ வெளியிட்டுள்ளது.

இதன்படி விண்ணப்பதாரர் தந்தை அல்லது தாயின் விவரங்களில் மாற்றம் செய்ய, தந்தை அல்லது தாயின் பெயர் கொண்ட ஆதார் அட்டை, பான் கார்டு, தந்தை அல்லது தாயின் பெயரில் உள்ள 10ஆவது அல்லது 12ஆவது மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை சமர்ப்பணம் செய்து பெற்றோர் விவரங்களை மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன விவரங்களை மாற்ற முடியும்?: உறுப்பினரின் பெயர், பாலினம், பிறந்த தேதி ,தந்தை அல்லது தாயின் பெயர், உறவுமுறை திருமண நிலை, திட்டத்தில் சேர்ந்த தேதி, விலகும் தேதி ,விலகுவதற்கான காரணம் , ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களை ஒருவர் மாற்றிக் கொள்ளலாம்.
அனைத்து திருத்தங்களுக்கும் உரிய ஆவணங்களை சமர்ப்பணம் செய்வது அவசியமாகும். சிறிய திருத்தங்களுக்கு குறைந்தது இரண்டு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பெரிய அளவிலான மாற்றங்களுக்கு மூன்று ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி தந்தை மற்றும் தாயின் பெயர் மற்றும் உறவு முறை ஆகியவற்றில் கொண்டு வர வேண்டிய திருத்தங்களுக்கு, தந்தை அல்லது தாயின் பாஸ்போர்ட், ரேஷன் கார்டு பென்ஷன் கார்டு, பிறப்புச் சான்றிதழ் , திருமணச் சான்றிதழ் ,புகைப்படத்துடன் கூடிய மத்திய அல்லது மாநில அரசுகள் வழங்கிய சான்றிதழ் ஆகியவற்றை ஆவணங்களாக தாக்கல் செய்ய முடியும்.
பிறந்த தேதியில் மாற்றங்களை கொண்டு வர பிறப்புச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பிறந்த தேதி கொண்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஆதார், பாஸ்போர்ட், பான் அட்டை, பென்ஷன் பேமெண்ட் ஆர்டர் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.
பெயர் மற்றும் பாலின மாற்றங்களுக்கு ஆதார் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் அது தவிர பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், பேங்க் பாஸ்புக், பான் கார்டு ரேஷன் கார்டு ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
எப்படி மாற்றம் செய்வது?
படி 1: UAN/Password கொண்டு ஈபிஎஃப் தளத்தில் லாகின் செய்ய வேண்டும்
படி 2: “Manage>Modify Basic Details” என்பதை கிளிக் செய்யவும்
படி 3: என்ன விவரங்களை மாற்ற வேண்டுமோ அதனை உள்ளீடு செய்ய வேண்டும்
படி 4: ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்
அதிகாரிகள் இவற்றை சரிபார்த்து அங்கீகரிக்கும் போது நீங்கள் கோரிய படி விவரங்கள் மாற்றப்படும்.
ஈபிஎஃப்ஓ தளத்தில் உறுப்பினர்கள் தங்களின் சுய விவரங்களை எத்தனை முறை மாற்ற முடியும் என்பன உள்ளிட்ட விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மக்கள் தெரிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications