இந்தியர்கள் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. பொதுவாக நீண்ட கால அடிப்படையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் எதிர்பார்த்ததை காட்டிலும் நல்ல வருமானத்தை ஈட்டலாம். பங்குச் சந்தை ஏறுமுகத்தில் இருக்கும் போது பெரும்பாலான முதலீட்டாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் முதலீடு செய்கின்றனர்.
அதேசமயம், பங்குச் சந்தை சரிவு காணும்போது, முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் மிகவும் தயங்குகின்றனர். ஆனால் பங்குச் சந்தை சரிவின்போது முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனமான ஒன்று. ஏனென்றால் பங்குச் சந்தை சரிவின்போது பல நல்ல பங்குகள் விலை மிகவும் குறைந்திருக்கும்.

இதனை, நல்ல வருமானம் பார்ப்பதற்கான நல்ல வாய்ப்பாக கருதி, பங்குச் சந்தை சரிவின் போது முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் பலரும் இந்த விஷயத்தை செய்வதில்லை. பங்குச் சந்தை சரிவின்போது முதலீடு செய்வதில் டாப் அப் உத்தி மிகவும் சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பங்குச் சந்தை சரிவின்போது ஒரே முறையில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதை காட்டிலும், பங்குச் சந்தைகளின் சரிவுகளின்போது, முதலீட்டை அதிகரிக்கும் டாப் அப்ஸ் உத்தி அணுகுமுறை அதிக ஆதாயங்களை கொண்டது. 2022ம் ஆண்டின் பங்குச் சந்தை சரிவின் போது இரு முதலீட்டாளர்கள் மேற்கொண்ட மாறுபட்ட முதலீட்டு உத்தியின் மூலம் இதனை தெரிந்து கொள்ளலாம்.
2022ம் ஆண்டு பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தபோது, முதலீட்டாளர் A என்பவர் தனது போர்ட்ஃபோலியோ மதிப்பில் 17 சதவீதம் சரிவை சந்தித்தார். அப்போது அவர் பயந்து போய் வெளியேறுவதற்கு பதிலாக, அவர் தொழில்முறை நிபுணரின் வழிகாட்டுதலின்கீழ் முதலீடு செய்தார். இதன் விளைவாக, 2024 அக்டோபர் முதல் 2025 பிப்ரவரி வரையிலான கடந்த 5 மாதங்களில் சவலான சந்தை பாதிப்புகள் இருந்தபோதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 7.22 சதவீதம் நீட்டிக்கப்பட்ட உள்வருவாய் விகிதத்தை (XIRR-Extended Internal Rate of Return) பராமரிக்கிறார். நீண்ட காலக் கண்ணோட்டத்துடன் (5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்) முதலீடு செய்வது சாதகமான பலன்களை தரும் என்பதை இது நிரூபிக்கிறது.(இந்த விஷயத்தில் இன்னும் 2 ஆண்டுகள் நடுத்தர காலமாகும்.)
முதலீட்டாளர் A முதலீடு செய்த அதேநேரத்தில் முதலீட்டாளர் B என்பவரும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். ஆனால் கொஞ்சம் மாறுபட்ட அணுகுமுறையை மேற்கொண்டார். பங்குச் சந்தைகளின் சரிவுகளின் போது முதலீட்டை அதிகரிக்கும் டாப்-அப்களை செய்தார். பங்குகள் விலை குறைவாக உள்ளதை பயன்படுத்தி கொள்ள, பல்வேறு கட்டங்களாக தனது முதலீட்டை தொடர்ந்து அதிகரித்து வந்தார். சந்தைகள் சரிந்தபோது, அதிகளவில் பங்குகளை வாங்கினார். இதனால் அவரது போர்ட்ஃபோலியோ மதிப்பு சரிவை 16.47 சதவீதத்துக்கு எதிராக வெறும் 8.62 சதவீதமாக கட்டுப்படுத்தினார்.
இதன் விளைவாக அவர் அபாயத்தை குறைத்து தனது நிகர லாபத்தை அதிகரிக்க முடிந்தது. தற்போதைய சந்தை நிலைமையிலும் கூட அவர் (B) முதலீட்டாளர் Aஐ விட (7.22 சதவீதம்) 8.95 சதவீத நீட்டிக்கப்பட்ட உள்வருவாய் விகிதத்தை கொண்டுள்ளார். கூடுதல் டாப் அப்கள் செய்யும்போது, சந்தை மீண்டு எழும்போது, சிறந்த இடர் சரிசெய்யப்பட்ட வருமானத்தை பெற உதவும் என்பதை இது காட்டுகிறது. நீண்ட கால முதலீட்டு திட்டத்துடன் இரு முதலீட்டாளர்களும் வெற்றி பெற்றனர். இந்த இரண்டு உத்திகளும் சாத்தியமானவை என்பதை நிரூபித்தது. இருப்பினும், முதலீட்டாளர் Aஐ விட முதலீட்டாளர் Bயின் டாப் அப்ஸ் உத்தி அதிக பலன்களை கொடுத்துள்ளது.
பங்குச் சந்தையின் ஒவ்வொரு சரிவின்போதும், முதலீட்டை அதிகரிக்கும் முதலீட்டாளர் Bயின் டாப் அப்ஸ் அணுகுமுறை, ஆபத்தை (நஷ்டத்தை) கட்டுப்படுத்துவதிலும், நிலையற்ற தன்மை அதிகரிப்பை நிர்வகிப்பதிலும் சிறந்து விளங்கியது. குறிப்பாக சந்தை நீண்ட காலத்துக்கு மீண்டு வருவதால் இது அதிக ஆல்பாவிற்கு (முதலீடு எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் தருவது) வழிவகுக்கும். ஆக, பங்குச் சந்தை சரிவுகளின்போது முதலீட்டை அதிகரிக்கும் டாப் அப் உத்தி சிறந்தது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பங்குச் சந்தைகளில் நாம் நீண்ட கால அடிப்படையில் மேற்கொள்ளும் ஒரு சிறு முதலீடு கூட நமக்கு அது பெரிய வருமானத்தை கொடுக்கும் என்பது நிஜம். இதற்கு உதாரணமாக டிசிபிஎல் பேக்கேஜிங் லிமிடெட் நிறுவன பங்கை நாம் சொல்லலாம். கடந்த 22 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 545 மடங்கு உயர்ந்துள்ளது. 2002 மார்ச் 13ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் ரூ.7.95ஆக இருந்த இந்நிறுவன பங்கின் விலை தற்போது ரூ.4,364 என்ற அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் இது இன்று ரூ.5.45 கோடியாக பெருகியிருக்கும்.
கடந்த செப்டம்பர் இறுதியில் இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. ஆனால் அதன் பிறகு கடந்த பிப்ரவரி வரையிலான 5 மாதங்களும் பங்குச் சந்தைகள் தொடர் சரிவை சந்தித்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் விலை உயர்வு, அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் அதிகளவில் பங்குகளை விற்றது, போர் பதற்றம் போன்ற பல்வேறு சர்வதேச நிலவரங்களால் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்கள் பலத்த நஷ்டத்தை சந்தித்தனர். 2025 பிப்ரவரி நிலவரப்படி, நிப்டி அதன் உச்சத்திலிருந்து 15 சதவீதம் வீழ்ச்சி கண்டு இருந்தது.
மிட்கேப் 100 இன்டெக்ஸ் சுமார் 21 சதவீதமும், ஸ்மால்கேப் 250 இன்டெக்ஸ் சுமார் 25 சதவீதம் குறைந்து இருந்தது. என்எஸ்இ 500 பங்குகளில் 81 சதவீதத்துக்கு அதிகமான பங்குகள் 20 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி கண்டது. என்எஸ்இ 500 பங்குகளில் 58 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகள் 30 சதவீதத்துக்கு மேல் சரிவு கண்டு இருந்தது. இந்த புள்ளிவிவரங்கள் கடந்த 5 மாதங்களிலும் பங்குச் சந்தைகளில் விற்பனை பெரிய அளவில் நடந்துள்ளதை வெளிப்படுத்துகின்றன. தொடர்ந்து 5 மாதங்களாக அடி மேல் அடி வாங்கி வந்த பங்குச் சந்தைகள் நடப்பு மார்ச் மாதத்தில் சிறிய மீட்சியை கண்டுள்ளன. குறிப்பாக கடந்த வாரத்தின் 5 வர்த்தக தினங்களிலும் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து ஏற்றத்தை மட்டுமே சந்தித்தன. இந்திய பங்குச் சந்தைகள் கடந்த வாரம் தலா 4 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications