மத்திய அரசின் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் மூலம் உங்களது மகளின் திருமணம், உயர் கல்வி, பிஸ்னஸ் திட்டத்தை எளிதாகத் திட்டமிட்டு நடத்தலாம். இந்த திட்டத்தின் மூலம் உங்களது எதிர்காலச் செலவை மிகவும் குறைக்கலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் இரண்டு குழந்தை பெற்ற பெற்றோருக்கு உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாகும். பெண்களின் எதிர்கால நன்மையை முன்னிட்டு இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மத்திய வருவாய் வகுப்பினருக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாகும்.

இந்தத் திட்டத்தில் ஒரு குடும்பத்தில் இரண்டு அக்கவுன்ட்களை பெற்றோர் தொடங்கலாம். ஒன்று முதல் 10 வயதிலான பெண் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் இந்தத் திட்டத்தை தொடங்கலாம். இரட்டைக் குழந்தை அல்லது அதற்கு மேல் பிறந்தால் இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று குழந்தைகள் பலனைப் பெறலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் 8 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் சேமிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் சேமிப்புத் தொகை அதன் அசலில் சேர்க்கப்படும். 21 ஆண்டுகள் கழித்து இந்தத் தொகை முதிர்ச்சி அடையும். 15 ஆண்டுகள் நிறையும் வரை முதலீடு பெறப்படும்.
ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்தை பெற்றோர் முதலீடு செய்தால் அதிகபட்சமாக ரூ.67.3 லட்சத்தை பெற்றோர் பெறலாம். 15 ஆண்டுக்கு ரூ. 8 சதவீதம் வட்டிக்கு ரூ.1.5 லட்சம் ஆண்டுக்கு சேமித்தால் இது சாத்தியமாகும். வட்டிவிகிதத்தைப் பொருத்து முதிர்ச்சித் தொகை கூடவோ குறையவோ செய்யும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்துக்கான வட்டித் தொகையான 8 சதவீதம் என்பது வருங்காலத்தில் அதிகரிக்கலாம். அப்போது அந்த வட்டி விகிதத்துக்கு ஏற்ப முதிர்ச்சித் தொகையும் அதிகரிக்கும். வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை. அரிதான வேளையில் குறைந்தால் அதற்கு ஏற்ப முதிர்ச்சி தொகையும் சற்று குறையும்.
ஆனால் இதுபோன்ற திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு எப்போதும் குறைப்பதில்லை. இது சமூக அக்கறை காரணமாகத் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
ரூ.50 லட்சம் முதிர்ச்சித் தொகையைப் பெறுவதற்கு ஆண்டுக்கு ரூ.1,11,370 ரூபாய் சேமிக்க வேண்டும். அதாவது தினசரி 305.1 ரூபாய். அத்துடன் வட்டி விகிதம் 8 சதவீதமாக நீடிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications