தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆகியவை கூட்டணியோடு பலம் காண்கின்றன. அதே வேளையில் சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்-இன் தமிழக வெற்றி கழகம் ஆகியவை தனித்து நிற்கின்றன.
விஜயின் தமிழக வெற்றி கழகம் களம் காணும் முதல் சட்டமன்ற தேர்தல் இது. விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் களம் காண்கிறார். இதனை அடுத்து தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையம் வாக்களிக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. தேர்தலில் வாக்களிக்கு செல்லும் ஒவ்வொருவும் பூத் ஸ்லிப்பை (Booth Slip) கொண்டு செல்வது கட்டாயம்.

வாக்குப்பதிவுக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் சார்பாக வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பூத் ஸ்லிப்பில் உங்களுடைய வாக்குச்சாவடி எங்கே அமைந்திருக்கிறது , உங்களுக்கான பகுதி எண் மற்றும் வரிசை எண் என்ன என்பன போன்ற அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். வாக்களிக்க செல்வபவர்கள் இதனை வைத்திருக்க வேண்டும்.
என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது, ஆனால் பூத் ஸ்லிப் வரவில்லை, நான் வெளியூரில் தங்கி இருக்கிறேன் தேர்தல் நாளன்றுதான் சொந்த ஊருக்கு செல்வேன் என்பவர்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவே தங்களுக்கான பூத் ஸ்லிப்பை டவுன்லோடு செய்து கொள்ள முடியும். அது எப்படி என்பதை தற்போது நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான https://electoralsearch.eci.gov.in/-க்கு செல்லவும். இங்கே
search by epic,
search by details,
search by mobile என மூன்று ஆப்ஷன்கள் இருக்கும்.
இதில் search by epic என்பதை கிளிக் செய்து உங்களின் மொழியை தேர்வு செய்ய வேண்டும்.
இதனை அடுத்து உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கக்கூடிய epic எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும். கேப்சா கோடினை உள்ளிட்டு search கொடுக்க வேண்டும்.
ஒரு வேளை epic நம்பர் இல்லை என்றால் பெயர், பிறந்த தேதி, தொகுதி உள்ளிட்ட விவரங்களை உள்ளிட வேண்டும். இதன் பின்னர் கேப்சா கோடினை உள்ளிட்டு search கொடுக்க வேண்டும்.
உங்களிடம் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்த மொபைல் எண் இருந்தால் அந்த எண்ணை உள்ளிட்டும் பெயரை கண்டுபிடிக்கலாம். இதன் பின்னர் உங்களுடைய முழுமையான வாக்காளர் விவரங்கள் அதில் காட்டும். இதனை எடுத்து action என்பதை கிளிக் செய்து view details என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதில் உங்களின் பூத் ஸ்லிப் காட்டும். அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Voter Helpline என்ற தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செயலியை மொபலியில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். அதில் search your name in electoral role என்பதை கிளிக் செய்து உங்களுடைய epic நம்பரை உள்ளிட வேண்டும். இதில் உங்களின் பூத் ஸ்லிப் டவுன்லோடு செய்யலாம்.
தேர்தலில் வாக்களிக்க பூத் ஸ்லிப் மட்டுமே போதாது. அத்துடன் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஒரு புகைப்பட அடையாள ஆவணத்தை கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் வாக்களிக்க முடியும்.


Click it and Unblock the Notifications