உங்க வண்டிக்கு ஃபேன்சி நம்பர் வேணுமா ? தமிழ்நாட்டுல ரூல்ஸ் மாத்திட்டாங்க.. இனி இது தான் நடைமுறை..

சென்னை: தங்களுடைய வாகனங்களுக்கு ஃபேன்சி நம்பர்களை வாங்கி பயன்படுத்துவதில் சிலர் ஆர்வம் காட்டுவார்கள். அது அவர்களின் ராசியான எண்ணாக இருக்கலாம் அல்லது அவர்கள் பிறந்த தேதியை குறிப்பிடும் எண்ணாக இருக்கலாம் , எளிமையாக நினைவில் கொள்ளும் எண்ணாக இருக்கலாம். இதற்காக பல லட்சங்களை செலவு செய்யும் நபர்கள் கூட உண்டு.

ஃபேன்சி எண்: தமிழ்நாட்டில் இவ்வாறு வாகனங்களுக்கான ஃபேன்சி எண்களை வாங்குவதற்கு தற்போது ஒரு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விதிமுறைகளை தமிழக அரசு விரிவாக வெளியிட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் நாம் இருசக்கர வாகனம், கார், வேன், ஜீப், லாரி போன்ற வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பதிவு எண்ணை பெற வேண்டும் . இதில் ஃபேன்சி எண்களை வாங்குவதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது.

உங்க வண்டிக்கு ஃபேன்சி நம்பர் வேணுமா ? தமிழ்நாட்டுல ரூல்ஸ் மாத்திட்டாங்க.. இனி இது தான் நடைமுறை..

ஏல நடைமுறை அறிமுகம்: இனி வாகனங்களுக்கான ஃபேன்சி எண்களை ஏல நடைமுறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு ஒரு புதிய நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து புதிய வரைவு விதிகளை அரசு வெளியிட்டு இருக்கிறது. தமிழக அரசின் உள்துறை செயலர் ராஜ்குமார் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் https://fancy.parivahan.gov.in/fancy/faces/public/login.xhtml என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து ஃபேன்சி எண்களை தேர்வு செய்து ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவு கட்டணம் ரூ.2,000: இந்த ஏலத்துக்கான நுழைவு கட்டணமாக 2 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் பெற்று செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் 48 மணி நேரத்திற்குள் பணத்தை செலுத்த வேண்டும் எனவும் 30 நாட்களுக்குள் வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஒருவேளை இவ்வாறு ஃபேன்சி எண் பெற்றவர்கள் 30 நாட்களுக்குள் தங்கள் வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து பதிவு செய்யவில்லை என்றால் அந்த எண் ரத்து செய்யப்பட்டு பொது ஏலத்துக்கு விடப்படும் என கூறியிருக்கிறார்.

அரசுக்கு வருவாய்: ஏற்கனவே கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் எல்லாம் இதுபோன்ற ஃபேன்சி எண்களுக்கான ஏல நடைமுறை அமலில் இருக்கிறது. தற்போது தமிழ்நாடு அரசும் இதனை கொண்டு வந்திருக்கிறது இதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஒரு கணிசமான தொகை வருவாயாக கிடைக்கும் . அதாவது ஏலம் முறை என வரும்போது அதிக விலை கொடுப்பவர்களுக்கு அந்த ஃபேன்சி எண் ஏலத்தில் கிடைத்த விடும். இதற்கான நுழைவு கட்டணம் 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

எப்படி ஏலம் எடுப்பது: இந்த ஏல நடைமுறையில் கலந்து கொண்டு ஃபேன்சி எண் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். முதலில் https://fancy.parivahan.gov.in/fancy/faces/public/login.xhtml என்ற பரிவாஹன் தளத்தில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொண்டு லாகின் செய்ய வேண்டும். இதனை அடுத்து உங்களுக்கு சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் மூன்று பிரிவுகளில் ஃபேன்சி எண் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும், அதில் சூப்பர் ஃபேன்சி (0001, 1111) , செமி ஃபேன்சி (1000, 5000) மற்றும் ரன்னிங் ஃபேன்சி( அடுத்த 1000 எண்கள்) என மூன்று விருப்பங்கள் காட்டப்படும்.

ஃபேன்சி எண் ஏலம்: இதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து எந்த எண் வேண்டுமோ அதற்கான ஆன்லைன் ஏலத்தில் கலந்து கொள்ள கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட தேதியில் காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இந்த ஏலம் என்பது நடத்தப்படும். வங்கிகள் எப்படி ஆன்லைனில் சொத்துக்களை ஏலம் விடுகிறதோ அதுபோல இந்த ஏலமும் நடைபெறும். 2000 ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாய் வரை ஒரு ஃபேன்சி எண்ணுக்கான ஏல தொகை இருக்கும். இது போட்டியை பொறுத்து மாறும். விண்ணப்பம் செய்பவர்களுக்கு முன் கூட்டியே ஏல தேதி அறிவிக்கப்படும், அவர்கள் ஆன்லைனில் பங்கேற்று ஏலத்தொகையை குறிப்பிடலாம். கடந்த வாரம் கூட சட்டீஸ்கர் மாநிலத்தில் 0001 என்ற ஃபேன்சி எண் 36 லட்சத்திற்கு ஏலம் போனது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+