தமிழ்நாடு அரசின் சுகாதார துறையில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் எனப்படும் எம்ஆர்பி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் கிரேடு 2 பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்திருக்கிறது.
தற்காலிக அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என தெரிவித்திருக்கும் எம்ஆர்பி யாரெல்லாம் இதற்கு விண்ணப்பம் செய்யலாம், கல்வி தகுதி என்ன, சம்பளம் எவ்வளவு என்பன உள்ளிட்ட தகவல்களையும் வெளியிட்டிருக்கிறது.

சம்பளம் எவ்வளவு: எம்ஆர்பி வெளியிட்டு இருக்கக்கூடிய நோட்டிஃபிகேஷனில் பே மேட்ரிக்ஸ் லெவல் 8இன் கீழ் ஹெல்த் இன்ஸ்பெக்டர் கிரேடு 2 பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 19 ,500 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 71 , 900 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது . மொத்தம் 1429 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது. ஆண்கள் மட்டுமே இதில் விண்ணப்பம் செய்யலாம்.
பணியிடங்கள்: பொதுப் பிரிவில் 426 பேருக்கும், பிற்படுத்தப்பட்ட பிரிவில் 364 பேருக்கும் வேலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட பிரிவில் இஸ்லாமியர்களுக்கு 48 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கு 275 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. எஸ்சி பிரிவினருக்கு 250 பணியிடங்களும் எஸ்சி பிரிவிலேயே அருந்ததியினர் பிரிவை சேர்ந்தவர்களுக்கு 48 பணியிடங்களும் எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களுக்கு 24 பணியிடங்களும் என மொத்தமாக 1429 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன .
வயது வரம்பு என்ன?: இந்த பணிகளுக்கு பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்பவர்கள் பதினாறும் 16ஆம் தேதிகள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவர்களுக்கு கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் தான் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது . குறைந்தபட்சம் 18 வயதில் இருந்து அதிகபட்சம் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
கல்வி தகுதி என்ன: கல்வி தகுதி என பார்க்கும்போது 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ,அதில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை கட்டாயம் படித்திருக்க வேண்டும். அதேபோல பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை ஒரு பாடமாக பயின்று இருக்க வேண்டும். பொது சுகாதார இயக்குனரகத்தின் இரண்டு ஆண்டுகளுக்கான மல்டி பர்ப்பஸ் ஹெல்த் வொர்க்கர் அல்லது ஹெல்த் இன்ஸ்பெக்டர் அல்லது சானிட்டரி இன்ஸ்பெக்டர் படிப்பை முடித்ததற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு: இவர்களுக்கு 50 மதிப்பெண்களுக்கு தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு நடத்தப்படும் .அடுத்ததாக கணினி அடிப்படையில் எழுத்து தேர்வு நடத்தப்படும் இது இரண்டு மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தகவல்களை https://tnmrbhi25.onlineregistrationform.org/MRBHI/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications