சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் தமிழக அரசு தங்களின் பிரதான திட்டங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களில் அதிக அளவிலான பயனாளர்களை இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை தொடங்கி இருக்கிறது .
உங்களுடன் ஸ்டாலின் முகாம்: தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களும் அன்றாடம் அணுகும் அரசு துறைகளில் சேவைகள் மற்றும் திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை தொடங்கி இருக்கிறது. ஜூலை 15ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் வரை இந்த முகாம்கள் நடைபெற இருக்கின்றன . நேற்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் முகாமை தொடங்கி வைத்தார்.

10,000 முகாம்கள்: மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டு இருக்கிறது. இந்த முகாம்களில் ஜாதி சான்றிதழ் பெறுவது ,பட்டா மாற்றம் செய்வது ,பென்ஷன் தொடர்பான மாற்றங்கள், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்வது, மருத்துவ காப்பீடு அட்டை பெறுவது, ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்வது, ரேஷன் அட்டையில் மாற்றங்களை மேற்கொள்வது என பல்வேறு சேவைகளையும் மக்கள் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
பிரத்தியேக இணையதளம்: அரசு அலுவலகங்களுக்கு சென்று மக்கள் அலைய வேண்டிய அவசியம் கிடையாது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி நகர் புறங்களில் 13 துறைகள் சம்பந்தப்பட்ட 43 சேவைகளும் கிராமப்புறங்களில் 15 துறைகள் சம்பந்தப்பட்ட 46 சேவைகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு எந்தெந்த பகுதியில் முகாம்கள் நடைபெறுகின்றன இந்த முகாம்களில் என்னென்ன சேவைகளை பெறலாம் என்பன உள்ளிட்ட விவரங்களை மக்கள் எளிமையாக தெரிந்து கொள்வதற்காக அரசு உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் ஒரு பிரத்தியேக இணையதளத்தையே தொடங்கி இருக்கிறது.

உங்க ஊரில் முகாம் எப்போது?: https://ungaludanstalin.tn.gov.in/index.php என்ற இணையதளத்திற்கு சென்று மக்கள் தங்களுடைய மாவட்டத்தில் அன்றைய தேதியில் எந்தெந்த பகுதிகளில் முகாம்கள் நடைபெறுகின்றன என்ற விவரங்களை எளிமையாக தெரிந்து கொள்ள முடியும். மக்கள் இந்த இணையதளத்திற்கு சென்று முகாம் விவரங்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் மாவட்ட வாரியாக அந்த தேதியில் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் முகாம்கள் நடைபெறுகின்றன , எந்த இடத்தில் முகாம் நடத்தப்படுகிறது என்பன உள்ளிட்ட விவரங்கள் பிடிஎஃப் முறையில் காட்டும்.
முகாமில் என்னென்ன சேவைகள் கிடைக்கும்?: பொதுமக்கள் அவற்றை தெரிந்து கொண்டு தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு அரசு சேவைகளை பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முகாமில் மக்கள் எந்தெந்த துறை சார்ந்த சேவைகளை பெற முடியும் என்ற விவரங்களும் அதில் விரிவாக பதிவிடப்பட்டிருக்கின்றன. இது தவிர அரசு தன்னார்வலர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் தொடர்பான விழிப்புணர்வு கையேட்டையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications