தமிழ்நாடு அரசு உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக தகுதி வாய்ந்த பெண்கள் புதிதாக மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. ஜூலை 15ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்கள் வாயிலாக லட்சக்கணக்கான பெண்கள் மகளிர் உரிமை தொகை வேண்டி புதிதாக விண்ணப்பம் செய்திருக்கின்றனர் .
உங்களுடன் ஸ்டாலின் முகாம் வாயிலாக மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்கு 45 நாட்களுக்குள் முடிவு தெரிந்து விடும் என இதற்கு முன்பு அரசு தெரிவித்திருந்தது. ஆனால் ஜூலை 15ஆம் தேதி விண்ணப்பம் செய்த பலருக்கும் இதுவரை தங்களுடைய விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிய வரவில்லை . மகளிர் உரிமை தொகை அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பெண்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிவதற்கான வசதி நீக்கப்பட்டுள்ளதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு அரசு உங்களுடன் ஸ்டாலின் முகாம் வாயிலாக மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவை வேண்டி விண்ணப்பம் செய்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலையை அறிவதற்கான ஒரு புதிய வசதியை கொண்டு வந்திருக்கிறது . தமிழ்நாட்டில் தற்போது மூன்றாம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அரசு துறை சார்ந்த சேவைகளையும் மக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் இந்த முகாம்கள் வாயிலாகவே பெற்றுக் கொள்ளலாம் .
நவம்பர் மாதம் வரை இந்த முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் வாயிலாக மகளிர் உரிமை தொகை மட்டும் இல்லாமல் ஜாதி சான்று, பட்டா மாற்றம் ,பென்ஷன் , மருத்துவ காப்பீடு அட்டை என பல்வேறு சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். ஏற்கனவே இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் வாயிலாக மகளிர் உரிமை தொகை மற்றும் பிற சேவைகளுக்காக விண்ணப்பம் தந்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலையை அறிவதற்கு புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

உங்களுடன் ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ungaludanstalin.tn.gov.in/index.php இந்த பக்கத்திற்கு செல்ல வேண்டும் . அதில் தற்போது முகப்பு பக்கத்திலேயே புதிதாக தங்களின் மனுவின் நிலையை அறிய என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை கிளிக் செய்தால் முதலமைச்சரின் முகவரி https://cmhelpline.tnega.org/portal/en/home என்ற பக்கம் பக்கத்திற்கு செல்லும் அதில் sign up என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உங்களுடைய பெயர் மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை கொடுக்க வேண்டும்.
இதனை அடுத்து லாகின் செய்து track grievances என்பதை கிளிக் செய்ய வேண்டும். உங்களின் மொபைல் எண்ணை கொடுத்தால் அந்த எண்ணின் கீழ் நீங்கள் கொடுத்த மனுக்களின் பட்டியலும் அவற்றின் நிலையும் காட்டிவிடும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா பரிசீலனையில் இருக்கிறதா என்ற விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பம் செய்தவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை இந்த இணையதளம் சென்று லாகின் செய்து தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications