Diwali ஷாப்பிங்: ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டிக்காதீங்க..!

தீபாவளி பண்டிகை என்றாலே புது துணி மட்டுமல்ல வீட்டு உபயோகப் பொருட்கள் , வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் வாங்கும் வழக்கம் இந்தியர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் பல்வேறு நிறுவனங்களும் பிராண்டுகளும் போட்டி போட்டுக் கொண்டு இந்த பண்டிகை கால தள்ளுபடிகளையும் சலுகைகளையும் வழங்குகின்றன.

தள்ளுபடி விற்பனை: அமேசான், பிளிப்கார்ட் போன்ற இகாமர்ஸ் தளங்களில் தொடங்கி பல்வேறு சில்லறை விற்பனை நிறுவனங்கள் வரை தீபாவளியை ஒட்டி இவ்வளவு ரூபாய் தள்ளுபடி, குறைந்த விலையில் வாஷிங் மெஷின் வாங்கலாம் என ஆசை வார்த்தைகளை கூறி பெருமளவில் விளம்பரம் செய்கின்றன. பண்டிகை காலத்தில் மக்கள் கைகளில் அதிக பணப்புழக்கம் இருக்கும் என்பதால் தங்களுடைய விற்பனை அதிகரிப்பதற்காக நிறுவனங்கள் கையாளும் ஒரு உத்தி தான் இந்த பண்டிகை கால தள்ளுபடி விற்பனை .

Diwali ஷாப்பிங்: ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டிக்காதீங்க..!

பண்டிகை கால சலுகை: ஆனால் இந்த பண்டிகை காலம்தான் நம்மை கடனாளியாக மாற்றும் இந்த விளம்பர இந்த ஆசை வார்த்தைகள் தான் கிரெடிட் ஸ்கோரையே நெகட்டிவ் நிலைக்கு கொண்டு செல்லும். பெரும்பாலான நிறுவனங்களின் விளம்பரங்களில் கட்டாயம் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு டிஸ்கவுண்ட் ,இஎம்ஐ, நோ காஸ்ட் இஎம்ஐ போன்ற வார்த்தைகளை நம்மால் பார்க்க முடிகிறது. அதாவது பொருளை வாங்குவதற்கு கையில் இப்போது பணம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை தான் நம் மனதில் விதைக்கின்றனர்.

கடன்கள்: இப்பொழுது வாங்கிவிட்டு பின்னர் பணம் செலுத்திக் கொள்ளலாம் என முதலில் நம்மை எப்படியாவது இந்த பொருளை வாங்க வைக்க வேண்டும் என்பதில் நிறுவனங்கள் குறியாக இருக்கின்றன . இந்த பண்டிகை காலத்தில் பெரும்பாலான மக்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது என்ற காரணத்திற்காகவே தேவையற்ற பொருட்களை எல்லாம் வாங்கி வைத்து விடுவார்கள். பின்னர் அடுத்த பண்டிகை காலம் வரை அந்த கடனையே திரும்பத் திரும்ப செலுத்திக் கொண்டிருப்பார்கள்.

எப்படி கிரெடிட் ஸ்கோரை பாதுகாப்பது: பொதுவாக நாம் இந்த பொருட்களை கிரெடிட் கார்டு அல்லது தனிநபர் கடன்கள் முறையில் வாங்குகிறோம் என்றால் அது நம்முடைய கிரெடிட் ஸ்கோரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாம் முதலில் உணர வேண்டும். உரிய நேரத்தில் பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பெருமளவில் பாதிக்கப்படும். எதிர்காலத்தில் ஒரு அவசர தேவைக்கு கூட உங்களுக்கு கடனே கிடைக்க முடியாத சூழல் கூட உண்டாகலாம். எனவே இந்த பண்டிகை கால தள்ளுபடி விற்பனைகளில் இருந்து உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

Diwali ஷாப்பிங்: ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டிக்காதீங்க..!

பட்டியல்: முதலில் உங்களுக்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படுகிறது என்பதை பட்டியலிட்டு கொள்வது நல்லது. கட்டாயம் எனக்கு இந்த பொருள் தேவை இந்த தள்ளுபடி விற்பனையில் நான் வாங்க போகிறேன் என ஒரு பட்டியலை தயார் செய்யுங்கள் . தள்ளுபடி விலையில் கிடைக்கிறது என்பதற்காகவே ஒரு பொருளை வாங்கக்கூடாது உங்களுக்கு கட்டாயம் தேவைப்படுகிறது என்றால் மட்டுமே வாங்க வேண்டும்.

பட்ஜெட்: என்னென்ன பொருள் வாங்க வேண்டும் என பட்டியலிட்ட பிறகு அதற்கு உங்களிடம் உள்ள பட்ஜெட் என்ன , உங்களுடைய வருமானம் எவ்வளவு ,போனஸ் தொகை எவ்வளவு வந்திருக்கிறது அதிலிருந்து எவ்வளவு பணத்தை இந்த பொருள் வாங்குவதற்காக கொடுக்க முடியும் என்பதை முதலில் கணக்கிட வேண்டும் .

விழாக்கால ஃபண்டு: ஒவ்வொரு ஆண்டும் கண்டிப்பாக பண்டிகை காலங்களில் இது போன்ற தள்ளுபடி விற்பனைகள் வருகின்றன என்பது நமக்கு தெரியும். எனவே அடுத்த ஆண்டு பண்டிகைக்கு இப்பொழுது முதலே ஒரு நிதியை சேமிக்கவும் அல்லது முதலீடு செய்யவும் தொடங்கி விட வேண்டும். அப்படி செய்தோம் என்றால் அந்த ஃபெஸ்டிவல் ஃபண்டை கொண்டு பண்டிகை காலத்தில் வரக்கூடிய தள்ளுபடி விற்பனையில் நமக்கு தேவையான பொருட்களை எளிதாக வாங்கிக் கொள்ள முடியும்.

கிரெடிட் கார்டுகள்: இது போன்ற தள்ளுபடி விற்பனைகளின் போது கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றில் ரிவார்டு பாயிண்டுகள் , இன்டெரெஸ்ட் ஃப்ரீ பீரியட் உள்ளிட்ட ஆப்ஷன்கள் கிடைக்கும். முதலில் அவற்றையெல்லாம் படித்து புரிந்து கொள்வது நல்லது. இதனால் நமக்கு லாபமா நஷ்டமா என கணக்கிட வேண்டும்.

கடன்: என்னிடம் பணம் இல்லை ஆனால் இந்த பொருள் தேவை எனவே பர்சனல் லோனுக்கு செல்ல நினைக்கிறேன் என்பவர்கள், பர்சனல் லோனுக்கு செல்வதற்கு முன்பாக வங்கி, வங்கி சாராத நிதி நிறுவனம் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள் எவ்வளவு வட்டி விகிதத்தில் கடன் வழங்குகின்றன, பிராசசிங் கட்டணம் எவ்வளவு ,அதனை திரும்ப செலுத்தும் காலம் எவ்வளவு ,உங்களுடைய வருமானம் என்ன அந்த வருமானத்தைக் கொண்ட அந்த கடனை செலுத்தி விட முடியுமா முன்கூட்டியே கடனை செலுத்தினால் கூடுதல் கட்டண வசூல் செய்வார்களா என்பதை எல்லாம் ஆய்வு செய்த பின்னரே உங்களுக்கான பர்சனல் லோன் தேர்வு செய்ய வேண்டும்.

பண்டிகைக்கு பின் ஆய்வு: பண்டிகை காலம் முடிந்து முடிந்தவுடன் நீங்கள் என்னென்ன பொருட்களை வாங்கினீர்கள் எதற்காக எவ்வளவு செலவு செய்தீர்கள் அதில் எது தேவையற்ற பொருள் என்பதை ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அடுத்த பண்டிகையின் போது இந்த தவறை செய்யாமல் இருக்க முடியும்.

கிரெடிட் ஸ்கோர்: ஒரு வேளை லோன் அல்லது கிரெடிட் கார்டில் பொருட்களை வாங்கி வந்தீர்கள் என்றால் அந்த பணத்தை சரியான முறையில் திரும்ப செலுத்துவது எப்படி என்பதை திட்டமிட வேண்டும் . சரியான நேரத்தில் கடனை திரும்ப செலுத்துகிறீர்கள் என்றால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்கும் எதிர்காலத்தில் ஒரு அவசர தேவைக்கு நீங்கள் கடன் வாங்க சென்றால் வங்கிகள் உங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடன் கொடுக்கும் . ஒருவேளை நீங்கள் பொருட்களை வாங்கிவிட்டு கடனை திரும்ப செலுத்தாமல் தவிர்க்கிறீர்கள் என்றால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் மோசமான நிலைக்கு சென்று விடும். பின்னர் ஒரு அவசர தேவை என்றால் கூட உங்களுக்கு கடன் கிடைப்பது சிக்கல் ஆகிவிடும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+