பலருக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை அளிக்கும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் சில விதிமுறைகளை நாம் பின்பற்றினால் எளிதாக 1 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டி விட முடியும். அது எப்படி என்பதை இந்த கட்டுரையில் நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
15 என்பது தான் அந்த மேஜிக் எண். இந்த எண் தான் நமக்கு எளிதாக 1 கோடி ரூபாய் இலக்கை எட்ட உதவ போகிறது. எதிர்காலத்திற்காக சேமிப்பவர்கள் இந்த ஃபார்முலாவை அடிப்படையாக கொண்டு முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதன்படி 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டி இருக்கும்.

15 * 15 *15 என்கிற மூன்று அளவீடுகளில் பிரித்து கணக்கீடு செய்து முதலீடு செய்ய வேண்டும் என்கின்றனர் முதலீட்டு நிபுணர்கள். நீங்கள் முதலீடு செய்யும் பணம், முதலீட்டின் காலம் , உங்களுக்கு கிடைக்கும் ஆண்டு லாப விகிதம் அனைத்துமே 15 என்ற எண்ணில் இருக்க போகிறது.
இந்த ஃபார்முலா அடிப்படையில் நீங்கள் மாதந்தோறும் 15,000 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். உங்களுடைய முதலீடு ஆண்டுதோறும் உங்களுக்கு 15 சதவிகிதம் லாபம் ஈட்டி தர வேண்டும். முதலீட்டை விடாமல் அடுத்த 15 ஆண்டுகளுக்கு தொடரும்போது எளிதாக ஒரு கோடி ரூபாய் என்ற நிதி தொகுப்பினை உங்களால் அடைந்த விட முடியும்.
இந்த முறையில் ஒருவர் 15 ஆண்டுகளில் செய்த மொத்த முதலீட்டின் அளவு 27 லட்சம் ரூபாய், உங்களுக்கு கிடைத்த லாபம் 73 லட்சம் ரூபாய், எனவே மொத்தமாக உங்கள் கையில் கிடைக்கும் தொகை ஒரு கோடி ரூபாய்.
இதைத்தான் காம்பவுண்டிங் மேஜிக் என முதலீட்டு நிபுணர்கள் அழைக்கின்றனர். எஸ்ஐபி உள்ளிட்ட வழிகளில் மாதந்தோறும் 15,000 ரூபாய் என முதலீடு செய்தால் , அந்த பணமானது காம்பவுண்டிங் முறையில் 15 ஆண்டுகளிலேயே உங்களுக்கு 1 கோடி ரூபாயாக வளர்ந்து விடும்.
எனவே முதலீடு என வரும் போது காம்பவுண்டிங் முறையில் லாபம் தரக்கூடிய முதலீடுகளை தேர்வு செய்வது தான் சிறந்தது. அதுதான பணவீக்கத்தை எதிர்கொள்ளும் வகையிலான லாபத்தை நமக்கு வழங்கும்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications