இன்றைய காலகட்டத்தில் நேரம் காலம் பார்க்காமல் பலரும் உழைப்பதை காண முடிகிறது. குடும்பம், வேலை, படிப்பு இஎம்ஐ செலுத்த வேண்டும், வீட்டை பார்த்துக் கொள்ள வேண்டும் என பல்வேறு பொறுப்புகளை போட்டு மனதில் திணித்துக் கொண்டு அதற்காக பணத்தை தேடி ஓடுகிறோம்.
இவ்வாறு நாம் ஓடி ஓடி உழைத்து சம்பாதிக்கக் கூடிய பணம் நமக்கு என்ன மாதிரியான வாழ்க்கையை கொடுக்கிறது நம்முடைய வாழ்க்கையை தரமானதாக மாற்றுகிறதா என்ற ஒரு கேள்வி எழுகிறது. இதற்கு தைரோகேர் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் வேலுமணி மிகச்சிறந்த ஒரு விளக்கத்தை தந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நம்முடைய வாழ்க்கையின் தரம் எப்படி இருக்கிறது என்பதை இரண்டு விதங்களில் நாம் கண்டறிந்து விட முடியும் எனக் கூறுகிறார் டாக்டர் வேலுமணி. இந்த இரண்டு முறைகளிலும் எது நமக்கு மகிழ்ச்சியை தரும் என்பதையும் அவர் விளக்கம் தந்தார். முதலில் Standard of living , இரண்டாவதாக Quality of life இந்த இரண்டிற்குமான வித்தியாசம் எது , எது இதில் தரமான வாழ்க்கை என கூறியுள்ளார்.
Standard of living என்பது மிகப்பெரிய வீட்டில் வசிப்பது. அனைத்து வசதிகளும் நிறைந்த வீட்டில் குடும்பத்துடன் வசிப்பது , பெரிய காரில் சென்று வருவது, நமக்கு பிடித்த இடங்களுக்கு குடும்பத்தினரோடு மகிழ்ச்சியுடன் சுற்றுலா சென்று வருவது, நண்பர்களோடு பிடித்த இடங்களுக்கு சென்று வருவது, குழந்தைகளை அதாவது மகனோ அல்லது மகளோ நாம் இருக்கும் பகுதியிலேயே பெரிய பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படிக்க வைப்பது. இது தான் Standard of living என கூறுகிறார்.
Quality of life உங்களுக்கு இஎம்ஐ செலுத்த வேண்டிய அளவுக்கு எந்த ஒரு கடனும் இல்லை, உங்களுடைய வருமானத்திற்கு உட்பட்டு வாழ்க்கையை வாழ்கிறீர்கள், கணவன் மனைவி இருவருமே தங்களுக்கென நேரத்தை செலவு செய்கிறீர்கள், தேவையில்லாமல் பணத்திற்காக ஓட வேண்டிய தேவை இல்லாமல் இருக்கிறீர்கள், உங்கள் குழந்தைகளுக்கு என அதிக நேரத்தை ஒதுக்கீடு செய்து அவர்களை அன்புடன் பராமரிக்கிறீர்கள் அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறீர்கள். இவ்வாறு இருக்கும் போது குழந்தைகள் மன உறுதி பெற்றவர்களாகவும் , வெற்றியாளர்களாகவும் மாறுகின்றனர் என கூறுகிறார்.
கோவையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த வேலுமணி இந்தியாவில் நோயறிதல் பரிசோதனை நிறுவனங்களுக்கு எல்லாம் முன்னோடியாக தைரோகேர் நிறுவனத்தை தொடங்கி வெற்றி அடைந்தார். ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் தைரோகேர் நிறுவனத்தை தொடங்கினார். இரத்த பரிசோதனை குறிப்பாக தைராய்டு சம்பந்தப்பட்ட ரத்த பரிசோதனைகளை லட்சக்கணக்கானவர்களுக்கு எளிமையாக கொண்டு சேர்த்த பெருமை தைரோகேர் நிறுவனத்தை சாரும். இவர் 2021 ஆம் ஆண்டு 4500 கோடி ரூபாய்க்கு தைரோகேர் நிறுவனத்தை விற்பனை செய்தார்.
அவ்வப்போது சமூகம் சார்ந்தும் , வாழ்க்கை சார்ந்தும் , தொழில் தொடங்கி நடத்துவது சார்ந்தும் இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் அனைவருக்கும் பாடமாக அமைகின்றன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications