சௌகரியமாகவும் குறைந்த டிக்கெட்டிலும் பயணம் செய்யலாம் என்பதற்காகத்தான் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள் . மற்ற போக்குவரத்து முறைகளுடன் ஒப்பிடும்போது ரயில் பயணங்களில் நம்முடைய லக்கேஜ்களை பாதுகாப்பாகவும் சற்று கூடுதலாகவும் கொண்டு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
சில பயணிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான பொருட்களை ரயில்களில் லக்கேஜ் கொண்டு செல்கிறார்கள். ஆனால் திடீரென அதிகாரிகள் பரிசோதனை செய்து அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடையில் லக்கேஜ் கொண்டு செல்வதை கண்டறிந்தால் அபராதம் செலுத்த நேரிடும்.

ரயில்களில் குறிப்பிட்ட அளவு வரை தான் இலவசமாக லக்கேஜ்களை கொண்டு செல்ல வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது . பயணிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் லக்கேஜ் கொண்டு சென்றால் அதற்கு கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும் என ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். மக்களவையில் இது தொடர்பாக எழுத்துப்பூர்வ பதில் அளித்திருக்கும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் தற்போதைக்கு வகுப்பு வாரியாக ஒரு பயணி எவ்வளவு எடைக்கு இலவசமாக லக்கேஜ் கொண்டு செல்லலாம் என்பதற்கான வரம்புகள் இருக்கின்றன என குறிப்பிட்டு இருக்கிறார்.
இதன்படி இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்யும்போது ஒரு நபர் 35 கிலோ வரை இலவசமாக லக்கேஜ் கொண்டு செல்லலாம். அதற்கு மேல் கொண்டு சென்றால் அதிகபட்சம் 70 கிலோவுக்குள் கொண்டு செல்ல அனுமதி உண்டு. ஆனால் அந்த கூடுதல் எடைக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஸ்லீப்பர் வகுப்புகளில் பயணம் செய்யும் போது அதிகபட்சமாக 40 கிலோ வரை இலவசமாக லக்கேஜ் கொண்டு செல்ல முடியும் அதிகபட்சம் 80 கிலோ வரை எடுத்து செல்லலாம் இந்த கூடுதல் 40 கிலோவிற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

அதேபோல ஏசி 3 டயர் அல்லது சேர் கார்களில் பயணம் செய்யும்போது ஒரு பயணி 40 கிலோ வரை மட்டுமே லக்கேஜ் கொண்டு செல்ல வேண்டும். முதல் வகுப்பு மற்றும் ஏசி 2 டயரில் பயணம் செய்யும் பயணிகள் அதிகபட்சமாக 50 கிலோ வரை இலவசமாக லக்கேஜ் கொண்டு செல்லலாம் . இவர்கள் கூடுதலாக 50 கிலோ வரை கொண்டு செல்லலாம் ஆனால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் .
ஏசி முதல் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகள் அதிகபட்சமாக 70 கிலோ வரை இலவசமாக லக்கேஜ் கொண்டு செல்லலாம் . பயணிகள் இவ்வாறு அனுமதிக்கப்பட்ட இலவச அளவைவிட கூடுதலாக லக்கேஜ் கொண்டு சென்றால் அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் சாதாரண லக்கேஜ் கட்டணத்தை விட 1.5 மடங்கு கூடுதல் தொகையை அபராதமாக செலுத்த நேரிடும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார் .
அதேபோல பயணிகள் தங்களுடைய இருக்கைக்கு அருகே கொண்டு செல்லும் பெட்டிகளின் அளவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது .100 சென்டிமீட்டர் நீளம், 60 சென்டிமீட்டர் அகலம், 25 சென்டிமீட்டர் உயரம் என்ற அளவுக்கு மிகாமல் இந்த பெட்டிகள் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பெரியதாக இருக்கும் பெட்டிகளை பயணிகள் தாங்கள் பயணம் செய்யக்கூடிய பெட்டிக்குள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
இந்த பெரிய லக்கேஜ்களை முன்கூட்டியே பதிவு செய்து பிரேக் வேன் அல்லது பார்சல் வாகனங்கள் மூலமாக அனுப்ப முடியும் என அவர் கூறியிருக்கிறார். பயணிகள் இந்த விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications