இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு பிடித்தமான பயணமாக ரயில் பயணங்கள் தான் இருக்கின்றன . குறிப்பாக சாமானிய மக்களை பொருத்தவரை குடும்பத்தினரோடு ஓரிடத்திற்கு சென்று வருவதற்கு குறைந்த கட்டணத்தில் சௌகரியமான பயணத்தை அளிப்பவை ரயில்கள்தான்.
கிறிஸ்துமஸ் விடுமுறை , புத்தாண்டு ,பொங்கல் என அடுத்த மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக விடுமுறைகள் வர இருக்கின்றன. எனவே பெரும்பாலான மக்கள் பண்டிகைகளை கொண்டாடுவதற்காகவும் விடுமுறையை கழிப்பதற்காகவும் பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்வார்கள்.

தற்போது ரயில்களில் டிக்கெட் எடுக்கும் போது ஐஆர்சிடிசி செயலியில் ஆதார் எண்ணை இணைத்து சரிபார்க்கப்பட்டிருப்பது கட்டாயம். அப்படி இருந்தால் தான் டிக்கெட்டே முன்பதிவு செய்ய முடியும். இத்தகைய சூழலில் குழந்தைகளுடன் ரயில்களில் பயணம் செய்யும்போது ஐஆர்சிடிசி- யின் குழந்தைகளுக்கான டிக்கெட் பாலிசி குறித்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
வழக்கமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரயில் பயணங்களின் போது டிக்கெட் தேவை இல்லை. எனவே பெற்றோர் மற்றும் பெரியவர்கள் டிக்கெட் இல்லாமலேயே 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ரயில்களில் அழைத்து செல்லலாம். ஆனால் அவ்வாறு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து செல்லும் போது அவர்களுக்கு என தனி இருக்கையோ அல்லது பெர்த்தோ கிடைக்காது.
ஒரு வேளை என்னுடைய குழந்தைக்கு 5 வயதுக்குள் தான் ஆகிறது ஆனால் தனியாக இருக்கை வேண்டும் என்றால் பெரியவர்களுக்கான கட்டணத்தில் டிக்கெட் எடுத்து கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவுரை வழங்குகிறது. எனவே குழந்தைக்கு தனி இருக்கை வேண்டும் என்றால் தனியாக டிக்கெட் எடுத்து கொள்ள வேண்டும்.
அதே போல 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரயில் பயணங்களின் போது குழந்தைகள் கட்டணத்தில் டிக்கெட் எடுக்கப்பட வேண்டும். அப்படி அரை டிக்கெட் எடுத்திருந்தாலும் உங்களின் குழந்தைகளுக்கு தனியாக பெர்த் கிடைக்காது. எனவே குழந்தைக்கு தனியாக பெர்த் வேண்டும் என்றால் பெரியவர்களுக்கான டிக்கெட் எடுக்க வேண்டும்.
அதாவது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாக இருந்தாலும் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாக இருந்தாலும் அவர்களுக்கு தனி இருக்கையும் பெர்த்தும் வேண்டும் என்றால் பெரியவர்களுக்கான டிக்கெட்டை வாங்கியாக வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் பெரியவர்களைப் போலவே முழு டிக்கெட் கட்டணத்தை செலுத்தி ஆக வேண்டும்.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தையை அழைத்து சென்று அவர்களுக்கு தனி சீட்டு வேண்டும் என்ற பெற்றோர் கோர முடியாது அப்படி வேண்டும் என்றால் தனி டிக்கெட் எடுக்க வேண்டும். ஒரு வேளை இந்த விதியை மீறினால் அபராதம் கூட செலுத்த நேரிடலாம் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications