இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணங்களில் ஒன்றாக ஆதார் பயன்படுத்தப்படுகிறது. எங்கு சென்றாலும் நம்முடைய ஆதார் கார்டை தான் அடையாள சரிபார்ப்புக்கான ஆவணமாக கேட்கிறார்கள் .ஆதார் அட்டையை நாம் முகவரி அடையாளம் சான்றாகவும் புகைப்பட அடையாள சான்றாகவும் பயன்படுத்தி வருகிறோம்.
ஆதார் அட்டையில் நம்முடைய முகவரி மாற்றங்களை அப்டேட் செய்து வைத்துக் கொள்வது நல்லது. இல்லை என்றால் அரசின் நலத்திட்டங்கள் கூட நமக்கு கிடைக்காமல் போகலாம். முன்பெல்லாம் ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற வேண்டுமென்றால் இ சேவை மையத்திற்கு சென்று டோக்கன் வாங்கி ஒரு நாள் முழுவதும் காத்திருக்க வேண்டும். ஆனால் இனி அந்த ஒரு நிலை தேவையில்லை.

ஏனெனில் வீட்டில் இருந்தபடியே நாம் நம்முடைய ஆதார் கார்டில் நம்முடைய முகவரியை மாற்றிக் கொள்ள முடியும். அது எப்படி என்பதை நாம் தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு உங்களிடம் மொபைல் போனும் இன்டர்நெட் இணைப்பும் இருந்தாலே போதும். ஐந்து நிமிடங்களில் இந்த வேலை முடிந்து விடும்.
முதலில் உங்களுடைய போனில் அதிகாரபூர்வமான ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு கருவிகளுக்கு இந்த புதிய ஆதார் செயலி கிடைக்கிறது. டவுன்லோட் செய்தவுடன் அதில் உங்களுடைய ஆதார் நம்பர் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை உள்ளீடு செய்து லாகின் செய்ய வேண்டும்.
இதன் பின்னர் எம் பின் அல்லது பயோமெட்ரிக் செட் செய்ய வேண்டும் இஒது பாதுகாப்பு நோக்கங்களுக்காக கேட்கப்படுகிறது. இதனை அடுத்து மீண்டும் ஒருமுறை லாகின் செய்துவிட்டு Services என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் address update என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும்.அதனை தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கே உங்களுடைய முகவரியை எப்படி அப்டேட் செய்ய விரும்புகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்படும்.
அதாவது உங்களிடம் வேறு ஏதேனும் ஒரு அதிகாரப்பூர்வ அடையாள ஆவணம் இருக்கிறது அதில் இந்த புதிய முகவரி இருக்கிறது என்றால் அதை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் ஆதார் அட்டையில் இந்த புதிய முகவரி கொண்டு ஏற்கனவே அப்டேட் செய்திருக்கிறார்கள் என்றால் அதனை ஒரு ஆதாரமாக காட்டி நீங்கள் உங்களுடைய ஆதாரல் முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.
எந்த ஆவணத்தை ஆதாரமாக கொடுக்க போகிறீர்களோ அந்த ஆவணத்தை தெளிவான முறையில் ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டி இருக்கும். உங்களுடைய புதிய முகவரி தொடர்பான தகவல்களை தெளிவாக உள்ளிட வேண்டும். எழுத்துப்பிழை இல்லாமல் இருக்கிறதா என கவனிக்க வேண்டும். இதன் பின் உங்களின் முக அடையாள சரிபார்ப்பு நடக்கும். இதற்கு நீங்கள் கேமராவை ஆன் செய்ய வேண்டி இருக்கும். ஸ்கிரீனில் காட்டும் வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்.
இது முடிந்தவுடன் 75 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதனை செலுத்தி விட்டால் போதும். விண்ணப்பம் யுஐடிஏஐ அமைப்புக்கு சென்றுவிடும். உங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அடுத்த 15 நாட்களுக்குள் உங்களுடைய ஆதாரில் புதிய முகவரி அப்டேட் ஆகி இருக்கும். ஒருவேளை புதிய முகவரி அப்டேட் செய்யப்படவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன என்பதை எஸ்எம்எஸ் வாயிலாக பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பி வைத்து விடுவார்கள்.


Click it and Unblock the Notifications