கூகுள் பே, போன்பே பயன்படுத்துபவரா நீங்க..? முதல்ல இதை படிங்க.. திரும்பும் பக்கமெல்லாம் மோசடி..!

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் என்பது இன்று சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் மூலம் சில நொடிகளில் பணம் அனுப்பலாம் என்பதால், சிறு கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை டிஜிட்டல் பரிமாற்றத்தையே அதிகம் ஆதரிக்கின்றனர்.

ஆனால் இந்த டிஜிட்டல் பேமெண்ட் வளர்ச்சியுடன் சைபர் குற்றங்களும் அதிகரித்துள்ளது. எந்த அளவுக்கு பேமெண்ட் துறையில் தொழில்நுட்பம் முன்னேறியுள்ளதோ அதே போல் மோடியாளர்களும் தற்போது Tech Savvy ஆக மாறியுள்ளனர். இதனால் பலரின் வங்கிக் கணக்குகள் காலியாகும் வகையில் மோடிகள் அதிகரித்துள்ளது.

கூகுள் பே, போன்பே பயன்படுத்துபவரா நீங்க..? முதல்ல இதை படிங்க.. திரும்பும் பக்கமெல்லாம் மோசடி..!

ஃபியூச்சர் க்ரைம் ரிசர்ச் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சமீப மாதங்களில் யுபிஐ தொடர்பான மோசடிகள் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மோசடிகள் பொதுவாக பிஷிங் லிங்க்ஸ், போலியான ரீபண்ட், மோசடி க்யூஆர் கோடுகள் போன்ற வழிகளில் நடக்கின்றன, இதனால் சாமானிய மக்களின் சேமிப்பு பாதிக்கப்படுகிறது.

சாமானிய மக்கள், குறிப்பாக சிறு நகரங்களில் வசிப்பவர்கள், இந்த மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர், ஏனெனில் மோடியாளர்கள் தொழில்நுட்ப வழிப்புணர்வு குறைவாக இருக்கும் மக்களை தான் குறிவைத்து இத்தகைய மோசடிகளை செய்து வருகின்றனர். பெரு நகரங்களில் இருக்கும் மக்கள் செய்திகள் வாயிலாகவோ அல்லது மற்றவர்களின் அறிவுரை அல்லது மற்றவர்களின் அனுபவம் மூலம் விழிப்புணர்வு பெற்று தப்பித்துவிடுகின்றனர்.

பொதுவான யுபிஐ மோசடி வகைகள்
யுபிஐ மோசடிகள் பல்வேறு வகையில் நிகழ்கின்றன, இதில் மிகவும் பொதுவாக ஆஃபர், தள்ளுபடி, புதிய ஆப், வருமான வரி நோட்டீஸ், KYC அப்டேட், ரேஷன் கார்டு அப்டேட், கேஷ்பேக் என அறிவித்து போலி லிங்க் அல்லது மோசடிக்காகவே உருவாக்கப்பட்ட APK பைல் மூலம் இத்தகைய திருட்டு நடக்கிறது.

இத்தகைய தகவல்கள் பெரும்பாலும் வாட்ஸ்அப் அல்லது மெசேஜ் வாயிலாக தான் ஒருவரின் போன்களுக்கு வருகிறது. இதை தாண்டி சமுக வலைத்தளத்தில் வரும் மெசேஜ் வாயிலாக இத்தகைய மோசடி லிங்க் வருவதும் வழக்கம். இதை கிளிக் செய்தால் உங்க பேஸ்புக், இன்ஸ்டா போன்றவற்றை ஹேக் செய்யப்பட்டு அதை பயன்படுத்தி உங்கள் நண்பர் வட்டாரத்தில் இத்தகைய மோசடிகள் நடக்கிறது.

இந்த நிலையில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் பயன்படுத்தும் போது உங்களை எப்படி உஷாராக செயல்பட வேண்டும் என்பதை முதலில் தெரிந்துக்கொண்டாலே, மோசடி செய்ய இடம் கொடுப்பதை தவிர்க்கலாம்.

யுபிஐ பின் ரொம்ப முக்கியம்
யுபிஐ பயன்படுத்தும் போது மிக முக்கியமான பாதுகாப்பு விதி, உங்கள் யுபிஐ பின்னை யாருடனும் பகிராமல் இருப்பதாகும். எந்த வங்கி, நிதி அமைப்பும் அல்லது அரசு அமைப்பும் உங்கள் பின் எண்ணை கேட்காது. குற்றவாளிகள் பெரும்பாலும் ரீபண்ட் அல்லது கேஒய்சி புதுப்பித்தல் என்ற பெயரில் அழைத்து, பின் எண்ணை கேட்டு ஏமாற்றுகின்றனர்.

யுபிஐ செயலில் எப்போதும், பின் எண்ணை என்டர் செய்தால் பணம் வெளியே செல்லும், உள்ளே வராது என்பது அடிப்படை விஷயம். இதை தெரிந்துக்கொண்டாலே யாரும் தேவையில்லாமல் பின் எண்ணை உள்ளிட மாட்டீர்கள். இது உங்கள் வங்கிக் கணக்கின் பூட்டின் சாவியைப் போன்றது, அதை யாருக்கும் கொடுக்கக் கூடாது.

போலி அல்லது மோசடி லிங்க்
ரீபண்ட் அல்லது ரிவார்ட் என்ற பெயரில் வரும் லிங்க-களை கிளிக் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இத்தகைய லிங்க்-கள், எஸ்எம்எஸ், ஈமெயில் அல்லது சமூக ஊடகங்கள் வழியாக வரலாம், இவை போனில் spyware நிறுவி, உங்கள் தகவல்களை திருடுகின்றன.

பல சம்பவங்களில், மக்கள் இதை அறியாமலேயே பல பண பரிமாற்றங்கள் நடக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்கு, தெரியாத நபர் அல்லது உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர் அனுப்பும் லிங்க்-களை திறக்காமல் இருப்பது அவசியம்.

க்யூஆர் கோடு ஸ்கேனிங்கில் கவனம்
கடை, வாகன நிறுத்துமிடம் அல்லது ஷாப்பிங் இடங்களில் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்வதற்கு முன், தொகை சரியா, பெறுநரின் பெயர் சரியா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும். குற்றவாளிகள் போலி ஸ்டிக்கர்களை ஒட்டி, பணத்தை தங்கள் கணக்குக்கு திருப்பிவிடுகின்றனர். இது போன்ற சிறிய கவனக்குறைவுகள் பெரிய இழப்புகளுக்கு வழிவகுக்கும்.

பரிமாற்ற வரம்பு அமைத்தல்
உங்கள் யுபிஐ செயலியில் தினசரி பரிமாற்ற வரம்பை (daily transaction limit) குறைத்து வைப்பது நல்லது. போன் அல்லது செயலி ஹேக் செய்யப்பட்டால், இந்த வரம்பு பெரிய இழப்புகளைத் தடுக்கும். இது எளிய ஆனால் சக்திவாய்ந்த பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

மோசடி போன் கால்
"உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படுகிறது", "உங்கள் கேஒய்சி தடை செய்யப்பட்டது", "நீங்கள் லாட்டரி வென்றுள்ளீர்கள்" அல்லது "நீங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளீர்கள்", "உங்கள் பெயரில் பார்சல் வந்துள்ளது" என்று கூறி யாரேனும் போன் கால் பயப்படாமல் அடுத்த நொடியே நம்பரை பிளாக் செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கவும்.

ஆப் டவுன்லோடு
எந்த ஒரு ஆப்-ஐயும் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து மட்டுமே டவுன்லோடு செய்ய வேண்டும். வாட்ஸ்அப்-ல் வரும் லிங்க் அல்லது APK பைல் மூலம் டவுன்லோடு செய்வதை முற்றிலும் தவிர்க்கவும்.

மோசடியை உடனடியாக புகாரளித்தல்
உங்கள் அனுமதியின்றி பணம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டால், உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு அழைக்கவும் அல்லது cybercrime.gov.in இல் புகார் அளிக்கவும். நீங்கள் விரைவாக புகார் அளிக்கும் பட்சத்தில், இந்த சந்தேகத்திற்குரிய பரிமாற்றங்களை முடக்கப்பட உதவும். உங்கள் பணத்தை காப்பாற்ற முடியும்.

விழிப்புணர்வே சிறந்த பாதுகாப்பு
டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் பாதுகாப்பானவை, ஆனால் விழிப்புணர்வு அதனினும் பாதுகாப்பானது. எப்போதும் எச்சரிக்கையுடன் இருங்கள். உங்கள் யுபிஐ பின், ஓடிபி, வங்கி விவரங்கள் போன்றவை தான் உங்கள் வங்கி கணக்கின் சாவி, அவற்றை யாருடனும் பகிராதீர்கள். இந்த எளிய விதிகளை பின்பற்றினால், யுபிஐ மூலம் நடக்கும் மோசடிகளில் இருந்து எளிதாக தப்பித்துக்கொள்ள முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+