யூபிஐ பேமென்ட் பெயிலியர் ஆதல், தவறான கணக்குகளுக்கு சென்றுவிடுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நீங்கள் பதற்றப்படாமல் உங்கள் வங்கிக்கு புகார் செய்வது முக்கியம். அத்துடன் NPCI என்ற தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுக்கும் எவ்வளவு சீக்கிரம் தகவல் தரவேண்டுமோ அவ்வளவு நல்லது.
ஒருங்கிணைந்த பேமெண்ட் இன்டர்பேஸ் எனும் Unified Payments Interface (UPI)- இப்போது மக்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டது. ஷாப்பிங் மால்களில் பொருட்களை வாங்கும்போது, பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்புவது, சின்னச்சின்ன மளிகைக் கடைகளில்கூட வாங்கும் பொருட்களுக்கு ஆன்லைன் மூலம் மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர்.

யூபிஐ மூலம் பணம் செலுத்துவது விரல் சொடுக்கும் நேரத்தில் எளிதாக முடிந்து விடுகிறது. எல்லா நிலைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு இந்த நல்ல பலன்களைத் தருகிறது. இருப்பினும் சில நேரங்களில் சில தொழில்நுட்பக் காரணங்களால் ஆன்லைன் பேமென்ட்கள் தோல்வி அடைந்து விடுகிறது அல்லது பாதியிலேயே நின்று விடுகிறது.
யூபிஐ பேமென்ட்கள் இதுபோன்று பல காரணங்களுக்காகத் தவறாகப் போய்விடுகின்றன, இதுபோன்ற சம்பவங்கள் நம்மில் பலருக்கு நேர்ந்திருக்கலாம். அதேநேரத்தில் நமது கணக்கில் இருந்து பணம் கழித்துக் கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் பணம் போய்ச்சேர வேண்டியவருக்கு போய் இருக்காது.
யூபிஐ பரிவர்த்தனைகள் பெயிலியர் ஆவதற்கான சில காரணங்கள்:
ஸ்லோ இன்டர்நெட்- பேமென்ட்கள் இதுபோன்று பெயிலியராகுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று உங்களது இன்டர்நெட் வேகம் குறைவாக இருப்பது. உங்களது மொபைல் போனில் இன்டர்நெட் சரியாக கனெக்ட் ஆகாமல் இருந்தால் பேமென்ட் பாதியிலேயே நின்று போகும் அல்லது பெயிலியராகி விடும்.
வங்கி சர்வர்கள் செயலிழப்பு- நீங்கள் பேமன்ட் செய்யும்போது உங்கள் வங்கியின் சர்வர்கள் அல்லது பணம் பெறுபவரின் வங்கி சர்வர்கள் செயல்படாமல் இருந்தால் சில பாப் அப்கள் வரலாம். இதனால் பேமென்ட்கள் ரத்தாகி விடும்.
தவறான பின்- ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு சரியான யூபிஐ பின் நம்பர்களை என்டர் செய்வது மிகவும் முக்கியம். அதுபோல் பயனாளர்கள் தவறான பின் நம்பர்களை அழுத்தியிருந்தால் பேமென்ட் பெயில் ஆகிவிடும். எப்போதும் சரியான பின் நம்பரை அழுத்துகின்றோமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
கணக்கில் பணம் இல்லாமை- பயனாளர்கள் சில நேரங்களில் தங்களது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லையென்பதை அறியாமல் போக வாய்ப்புள்ளது. அதுபோன்ற சமயங்களில் பணம் செலுத்த முடியாது. அப்படி செய்தால் பெயில் ஆகிவிடும். இந்த சங்கடத்தை தவிர்ப்பதற்காக எப்போதும் உங்களது வங்கி இருப்பை தெரிந்து கொள்வது அவசியமாகும்.
தினசரி லிமிட்டை தாண்டுதல்- யூபிஐ பேமென்ட்களுக்கு வங்கிகள் தினசரி லிமிட்டை நிர்ணயித்திருக்கலாம். அதுபோன்ற சமயங்களில் லிமிட்டை தாண்டி வாடிக்கையாளர்கள் பணத்தை அனுப்ப முயன்றால் பெயில் ஆகிவிடும்.
இப்போது யூபிஐ பேமென்ட் பெயில் ஆகக் கூடிய காரணங்கள் பற்றி அறிந்து கொண்டிருப்பீர்கள். இனி அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு நீங்கள் ஆளாக நேரிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? வாருங்கள் பார்க்கலாம்.
தினசரி லிமிட்டை சரிபாருங்கள்- நீங்கள் அடிக்கடி ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மேற்கொள்பவர் என்றால் உங்களது அன்றாட பேமென்ட் லிமிட்டை அவ்வப்போது செக் செய்து கொள்ளுங்கள். அப்படி லிமிட்டை தாண்டினால் நீங்கள் 24 மணிநேரம் காத்திருந்து அடுத்தநாள் முயற்சி செய்யுங்கள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளை இணையுங்கள்- ஒருவேளை உங்களது வங்கி சர்வர் எப்போதும் பிஸியாக இருந்தாலோ அல்லது தினசரி லிமிட்டை கடந்து விட்டாலோ நீங்கள் அதற்கென மாற்று வங்கி கணக்கை யூபிஐ ஐடியுடன் இணைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களது ஆன்லைன் பரிவர்த்தனைகளை தடையின்றி மேற்கொள்ளலாம்.
பணம் பெறுபவரின் வங்கி விவரத்தை செக் செய்யுங்கள்- யூபிஐ பேமென்ட்கள் பணம் பெறுபவர் வங்கி விவரங்கள் சரியாக இல்லாமல் போனாலோ அல்லது முழுவதும் இல்லாமலோ இருந்தால் பெயில் ஆகிவிடும். எனவே ஒரு முறைக்கு இருமுறைகள் பணம் செலுத்தும் வங்கி அக்கவுன்ட் நம்பர் மற்றும் ஐஎப்சி கோடுகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
சரியான யூபிஐ-ஐ என்டர் செய்யுங்கள்- நாம் பல்வேறு காரணங்களுக்காக பல பாஸ்வேர்டுகளை பயன்படுத்தலாம். சில சமயங்களில் எதற்கு எந்த பின்னை பயன்படுத்துவது என்பதை நினைவில் வைத்துக் கொள்வது சிரமமாகிவிடும்.
நமக்கிருக்கும் டென்ஷனில் திடீரென மறந்து போய் விடலாம். எனவை இதை கருத்தில் கொண்டு, ஒருவர் அடிக்கடி தவறான பின்னை உள்ளிடலாம். எனவே எப்போதும் சரியான பின்னை உள்ளிட்டால் பரிவர்த்தனைகள் சுமூகமாக இருக்கும். யாருக்கும் தெரியாமல் எதிலாவது பின் நம்பர்களை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
யூபிஐ பேமென்ட் பெயில் ஆகிவிட்டால் உங்களது வங்கிக்கு உடனடியாக தகவல் தருவது நல்லது. அத்துடன் யூபிஐ பேமென்டகளை நிர்வகிக்கும் தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுக்கும்-NPCI - தகவல் தந்து விடுங்கள்.
NPCI இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது பிரச்னைகளான தோல்வியடைந்த பேமென்ட்கள், பணம் கழிக்கப்பட்டு ஆனால் பணம் சேர வேண்டியவர்களுக்குப் போகாமல் இருப்பது, தவறான கணக்குகளுக்கு பணம் டிரான்ஸ்பர் ஆனது போன்றவற்றை புகார் செய்யலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications