இன்றைய டிஜிட்டல் உலகில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் UPI தளங்களைப் பயன்படுத்தி பணம் செலுத்தி வருகின்றனர். பணத்தை வைத்தே பணம் செலுத்தும் முறை இல்லாமல் போய்விட்டது என்றே சொல்லலாம். ஆனாலும் ஆன்லைன் பேமெண்ட் தளங்களில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் நெட்வொர்க் பிரச்சனை. நெட்வொர்க் சிக்கல் ஏற்படும் நேரத்தில் யுபிஐ மூலம் பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். இது போன்ற சூழ்நிலைகளில் யுபிஐ கட்டணங்களை ஆஃப்லைனிலும் செய்ய முடியும். இந்தப் பதிவில் ஆஃப்லைனில் எப்படி யுபிஐ பரிவர்த்தனை செய்வது என்பது குறித்து பார்ப்போம்.
பெரும்பாலான நேரங்களில் ஹோட்டல்களுக்கு செல்வது, டிக்கெட் பெறுவது என பல்வேறு விஷயங்களுக்காக பணம் செலவு செய்ய இருக்கையில், திடீரென நெட்வொர்க் வேகம் குறைந்துவிடும் அல்லது நெட்வொர்க் வேலை செய்யாமல் போய்விடும். இது போன்ற சூழ்நிலைகளில் இணைய வசதி இல்லாமல் யுபிஐ பரிவர்த்தனை செய்வதற்கான ஆப்ஷனை அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த ஆப்ஷன் இருப்பது பலருக்கும் தெரியாது. அதற்கு அதிகாரப்பூர்வ USSD கோடை பயன்படுத்த வேண்டும்.

நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, இந்தச் சேவையை தொடங்கி இருக்கிறது. இதைப் பயன்படுத்தி ஒருவர் எந்த வித இன்டர்நெட் வசதியும் இல்லாமல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். ஆன்லைன் பரிவர்த்தனையை போலவே பணம் அனுப்பலாம், பணம் பெறலாம், பேலன்ஸ் சரி செய்யலாம், யுபிஐ பின் நம்பரை மாற்றி அமைக்கலாம்.
இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ கட்டணம் செலுத்துவது எப்படி?:
ஸ்டெப் 1: அதற்கு முதலில் உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை பயன்படுத்த வேண்டும். *99# என்ற மொபைல் நம்பரை டயல் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வெவ்வேறு ஆப்ஷன்கள் உடன் கூடிய மெனு ஒன்று காண்பிக்கப்படும்.
ஸ்டெப் 2: பணம் அனுப்புதல், பணம் பெறுதல், பேலன்ஸ் விவரங்களைச் சரி பார்த்தல், நிலுவையில் உள்ள கோரிக்கைகள், யுபிஐ பின் நம்பரை மாற்றுதல் என பல்வேறு சேவைகளை செய்ய முடியும்.
ஸ்டெப் 3: பணம் அனுப்ப, 1-ஐ டைப் செய்து "Send" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: பின்னர் பணம் அனுப்பும் முறையை தேர்ந்தெடுங்கள். உதாரணமாக மொபைல் நம்பர், யுபிஐ ஐடி அல்லது நீங்கள் சேவ் செய்து வைத்த கான்டெக்ட் என விருப்பத்தை தேர்ந்தெடுத்து எவ்வளவு தொகை அனுப்ப இருக்கிறீர்களோ? அதை என்டர் செய்து "Send" என்பதை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டெப் 5: மொபைல் நம்பரை பயன்படுத்தி பணம் பரிமாற்றம் செய்ய தேர்வு செய்தால் நீங்கள் பணம் அனுப்புபவர் யுபிஐ கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் எவ்வளவு தொகையை அனுப்ப இருக்கிறீர்களோ அதை என்டர் செய்து "Send" என்பதை கிளிக் செய்யுங்கள். நீங்கள் விரும்பினால் பணம் செலுத்துவதற்கு ஏதேனும் குறிப்புகளையும் இணைத்து அனுப்பலாம்.
ஸ்டெப் 6: பரிவர்த்தனையை முடிப்பதற்கு யுபிஐ பின் நம்பரை என்டர் செய்யவும். இதன் மூலம் நெட்வொர்க் இல்லாமல் ஆஃப்லைனில் யுபிஐ பரிவர்த்தனை செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications