யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) மூலம், பணப் பரிவர்த்தனை செய்வது எப்போதும் எளிதான ஒன்றாக இருக்காது. மற்றவர்களுக்கு பணம் அனுப்புதல், மற்றவர்களிடம் இருந்து பணத்தை பெறுதல், எலக்ட்ரிசிட்டி பில்களை செலுத்துதல் போன்ற பரிவர்த்தனைகளை UPI கொண்டு செய்ய முடியும். இந்த செயல்முறை எளிதானதாக இருந்தாலும், பயனர்கள் சில நேரங்களில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சில சமயம் வங்கி நெட் பேங்கிங் சேவைகளில் ஏற்படும் பிரச்சனைகள், தொழில்நுட்ப குறைபாடுகள் போன்ற சிக்கல்களை பயனர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த சிக்கல்களை நீங்கள் தீர்ப்பதற்கு UPI இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம். அதன் விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
UPI பயன்பாட்டில் உள்ள சிக்கல் குறித்த புகாரைப் பதிவு செய்வதற்கு முன், நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய பல்வேறு விதமான UPI சிக்கல்களைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

1. பின் நம்பரில் ஏற்படும் சிக்கல்கள்: சில நேரங்களில் தவறான UPI பின் நம்பர் காரணமாக உங்களுடைய பரிவர்த்தனை தடைபடலாம்.
2. செயலாக்க சிக்கல்கள்: பரிவர்த்தனைகள் எதுவும் செய்யாமலேயே பணம் கழிக்கப்படுதல், தவறான கணக்கிற்கு பணத்தை பரிவர்த்தனை செய்தல், நிராகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள், பரிவர்த்தனையின் வரம்புகளை மீறுதல் மேலும் பரிவர்த்தனையின் செயலாக்க தாமதம் ஆகிய சிக்கல்கள் இதில் அடங்கும்.
3. கணக்கு சிக்கல்கள்: உங்களுடைய அக்கவுண்ட்-ஐ நீக்குவது அல்லது மீண்டும் அவற்றை ஆட் செய்வது போன்ற செயல்களை செய்யும் போது சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
4. பிற சிக்கல்கள்: லாகின் செயல்முறை தோல்வி அடைதல், பதிவுச் சிக்கல்கள் அல்லது OTP பிழைகள் ஆகியவை இதில் அடங்கும்.
இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால், நீங்கள் NPCI இணையதளத்தில் புகார் அளிக்கலாம். உங்களது UPI பரிவர்த்தனைகளில் சிக்கல் இருந்தால், முதலில் நீங்கள் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தில் (NPCI) புகார் செய்யவேண்டும். தவறான பரிவர்த்தனைக்கு புகார் அளிக்க, கீழ்காணும் ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றவும்.
தவறான அக்கவுண்டுக்கு பணம் அனுப்பினால் எப்படி புகார் அளிப்பது?:
ஸ்டெப் 1: முதலில் அதிகாரப்பூர்வ NPCI இணையதளத்திற்குச் செல்லவேண்டும், அந்த இணையதளத்தில் "UPI" என்னும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஸ்டெப் 2: "UPI" பிரிவின் கீழ் "Dispute Redressal Mechanism" என்று கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3: அதில் "Complaint"என்ற பிரிவுக்கு கீழே "Transaction" எனும் விருப்பத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 4: அதில் "Nature of the Transaction" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 5: "Incorrectly transferred to another account" எனும் ஆப்ஷனை தேர்வுசெய்து, உங்கள் பிரச்சனையை பற்றி சுருக்கமான விளக்கத்தை அதில் வழங்க வேண்டும்.
ஸ்டெப் 6: அதில் பரிவர்த்தனை ஐடி, வங்கியின் பெயர், UPI ஐடி, தவறுதலாக செலுத்திய தொகை, பரிவர்த்தனை செய்த தேதி மற்றும் மெயில் ஐடி ஆகியவற்றை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 7: மேலும் உங்கள் UPI அக்கவுண்டுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை வழங்க வேண்டும்.
ஸ்டெப் 8: உங்கள் புகைப்படத்தைப் அதில் பதிவேற்ற வேண்டும்.
இறுதியாக நீங்கள் கொடுத்த அனைத்து விவரங்களும் துல்லியமாக உள்ளதா என ஒரு முறை உறுதி செய்து கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications