நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டையின் மேம்பட்ட பதிப்பான PAN 2.0 ஐ அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதில் அதிகப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் QR கோடு இடம்பெற்றுள்ளது. இந்த சிறப்பம்சம் ஏற்கனவே 2017-18 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட கார்டுகளில் QR குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பலர் இன்னும் இந்த அம்சம்கள் இல்லாமல் பழைய கார்டுகளை வைத்திருக்கிறார்கள்.
எனவே இதனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு தற்போது பான் 2.0 என்ற பான் அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பான் 2.0 ஆனது இந்த பான் அட்டை பயன்பாடு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு நிதி மற்றும் அடையாளம் தொடர்பான பரிவர்த்தனைகளுக்கான சரிபார்ப்பை எளிதாக்குகிறது.

PAN 2.0 இல் புதிதாக என்ன இருக்கிறது?: புதுப்பிக்கப்பட்ட பான் கார்டில் கியூஆர் குறியீடு உள்ளது. இது அட்டைதாரரின் புகைப்படம், கையொப்பம், பெயர், பெற்றோரின் பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற முக்கிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இதனை பாதுகாப்பாகவும் சரிபார்க்க அனுமதிக்கிறது. நிதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, கியூஆர் குறியீட்டை ஒரு பிரத்யேக சாதனத்தைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்யலாம். இது பான் ஆங்கிகார செயல்முறையை எளிமையாக்கும். இந்த புதிய கியூஆர் அம்சம் கொண்ட பான் கார்டுகள் வெளியானாலும், பழைய கியூஆர் கோடு இல்லாத பான் கார்டுகள் செல்லுபடியாகும். அனைவரும் கியூஆர் கொண்ட பான் கார்டுக்கு மாற வேண்டிய அவசியமில்லை.
QR குறியீட்டுடன் பான்-க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது: இந்த புதிய அம்சம் கொண்ட பான் 2.0 வெளியிடப்படுவதற்கு முன், பான் அட்டை பெற விண்ணப்பிப்பவர்கள் கியூஆர் குறியீட்டைக் கொண்ட மேம்படுத்தப்பட்ட PAN 1.0 க்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு செய்ய, விண்ணப்பதாரர்கள் தங்கள் பான் விவரங்கள், பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். இதற்காக NSDL அல்லது UTIITSL ஆகிய இரண்டு அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த விணப்பத்தில் விண்ணப்பதாரர்கள் கியூஆர் குறியீடு கொண்ட ePAN, QR குறியீட்டுடன் கூடிய பிசிகல் பான் கார்டுகளை விண்ணப்பிக்கலாம்
விண்ணப்ப செலவுகள்: கியூஆர் கொண்ட ePAN கடந்த மாதத்திற்குள் வழங்கப்பட்டிருந்தால் அது முற்றிலும் இலவசம். அதுவே ஏற்கனவே உள்ள பழைய பான்களுக்கு ரூ.8.26 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கியூஆர் குறியீட்டுடன் கூடிய பிசிகல் பான் கார்டு விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 50 வசூலிக்கப்படும்.
விண்ணப்ப செயல்முறை: NSDL அல்லது UTIITSL இணையதளங்களுக்குச் சென்று உங்கள் விவரங்களை உள்ளிடவும். கியூஆர் குறியீட்டுடன் புதுப்பிக்கப்பட்ட ePAN அல்லது பிசிகல் பான் கார்டைப் பெறுவதற்கான வழிகாட்டிகள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.


Click it and Unblock the Notifications