சென்னை: வங்கிகளில் வழங்கப்படும் டெபாசிட் திட்டங்களை விட அதிக லாபம் தருவதால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தற்போது இந்தியாவில் பிரபலம் அடைந்து வருகின்றன. வழக்கமாக நீண்டகால முறையில் செல்வத்தை உருவாக்க ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதை நாம் காண்கிறோம். சில வங்கிகள் ஃபிக்ஸடு டெபாசிட்களிலும் கூட சிறந்த வட்டி வழங்குகின்றன. அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் ஃபிக்ஸடு டெபாசிட்களில் நாம் செய்யும் முதலீடு எப்போது இரண்டு மடங்கு ஆகும் என தெரிந்து கொள்ளலாம்.
முதலீட்டாளர்கள் விதி 72 மற்றும் விதி 144 ஆகியவை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். நீங்கள் செய்யக்கூடிய முதலீடு எத்தனை ஆண்டுகளில் 2 மடங்காகும் மற்றும் 3 மடங்காகும் என்பதை கணக்கிடுவதற்காகவே இந்த விதிகள் பயன்படுத்தப்படுகின்றன. மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது ஃபிக்ஸடு டெபாசிட்டுகளில் நீங்கள் செய்யக்கூடிய முதலீடு எத்தனை ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் என்பதை அறிந்து கொள்ள உதவுவதுதான் விதி 72 . நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த விதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதற்கான சூத்திரம் T = 72 / R என்பது ஆகும். இதில் R என்பது Rate of Return in % மற்றும் T என்பது Time in years ஆகும். அதேபோல தான் விதி 144. உங்களுடைய முதலீட்டு தொகை எப்பொழுது மும்முடங்காகும் என்பதை அறிந்து கொள்வதற்கு உதவுகிறது. அதற்கான சூத்திரம் இது T = 144 / R .
உதாரணமாக நீங்கள் 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்து ஃபிக்ஸடு டெபாசிட் திட்டத்தில் 7 சதவிகித வட்டியில் முதலீடு செய்திருந்தால் உங்களது தொகை 10 ஆண்டுகள் 3 மாதங்கள் என்ற கால அளவில் இரண்டு மடங்காகும், அதுவே 20 ஆண்டுகள் 7 மாதங்கள் என்ற கால அளவில் மும்மடங்காகும்.
ஒருவேளை நீங்கள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து இருந்தால், அதன் ஆண்டு வருமானம் 12 சதவீதமாக வைத்துக் கொண்டால், உங்களுடைய முதலீடு 6 ஆண்டுகளிலேயே இரண்டு மடங்காகவும் 12 ஆண்டுகளில் மூன்று மடங்காகவும் அதிகரிக்கும்.
இந்த சூத்திரங்களை பயன்படுத்தி உங்கள் முதலீடு எப்பொழுது இரட்டிப்பாகும் என்பதை எளிதாக கணக்கிட்டு அதன் அடிப்படையில் முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்தால் நீங்கள் நிதி இலக்குகளை அடைவதற்கு உதவியாக இருக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications