சென்னை: இந்தியாவில் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது .பிறந்த குழந்தைகள் தொடங்கி அனைவருக்கும் முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது.
பால் ஆதார் அட்டை: ஆதார் அட்டை கொண்டுதான் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற முடியும். பெரியோர்கள் மட்டுமல்ல குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை பெற்று வைத்திருப்பது கட்டாயம் . ஏனெனில் உங்கள் குழந்தையை பள்ளியில் சேர்ப்பது, உங்கள் குழந்தை பெயரில் அரசின் நலத்திட்டங்களை பெறுவது , உங்கள் குழந்தையின் பெயரை ரேஷன் அட்டையில் சேர்ப்பது என அனைத்திற்குமே ஆதார் அட்டை என்பது கட்டாயம் .

எப்படி எடுப்பது: இந்தியாவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. உங்களுக்கு அண்மையில் தான் குழந்தை பிறந்துள்ளது அல்லது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை இருக்கிறது ஆனால் இதுவரை ஆதார் அட்டை எடுக்கவில்லை என்றால் அது எப்படி என்பதை நாம் விரிவாக பார்க்கலாம்.
இ சேவை மையம்: குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பெறுவதற்கு உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய ஆதார் இ சேவை மையத்திற்கு செல்ல வேண்டும் . அங்கு இருந்து மட்டுமே குழந்தைகளுக்கான ஆதார் அட்டைக்கு விண்ணப்பம் செய்ய முடியும். நம் பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து இ சேவை மையங்களிலும் இந்த சேவை கிடைக்காது . குறிப்பிட்ட சில இ சேவை மையங்களுக்கு மட்டும் தான் அரசுஇந்த அனுமதியை வழங்கியிருக்கிறது.
பெற்றோரின் ஆதார் அட்டை: குழந்தைக்கு ஆதார் அட்டை விண்ணப்பம் செய்ய செல்லும் பெற்றோரில் யாரேனும் ஒருவருடைய ஆதார் அட்டையை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் விவரங்களான கைவிரல் ரேகை, கருவிழி ஆகியவற்றை சேகரிக்க முடியாது என்பதால் பெற்றோரின் ஆதார் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு தான் குழந்தைக்கான ஆதார் அட்டை என்பது வழங்கப்படும்.
பிறப்பு சான்றிதழ்: உங்கள் குழந்தைக்கு ஆதார் அட்டை பெறுவதற்காக செல்லும் போது பெற்றோரில் ஒருவரின் ஆதார் அட்டையை கொண்டு செல்ல வேண்டும். அங்கே அதன் அடிப்படையில் குழந்தைக்கான முகவரி உள்ளிட்ட விவரங்கள் பூர்த்தி செய்யப்படும். குழந்தையின் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் கொண்டு செல்லப்பட வேண்டும். அதில் பெயர் தெளிவாக பிழையில்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் அந்த பெயர் தான் ஆதாரிலும் இடம் பெறும்.
60- 90 நாட்களில் ஆதார் அட்டை: இ சேவை ,மையத்தில் குழந்தைக்கான பால் ஆதார் அட்டைக்கு விண்ணப்பம் செய்து குழந்தையின் புகைப்படத்தையும் எடுத்துக்கொள்வார்கள். இதனை அடுத்து acknowledgement slip என்பதை வழங்குவார்கள். அதில் இருக்கும் குறிப்பு எண்ணை கொண்டு குழந்தைக்கான ஆதார் அட்டை கிடைக்கப்பெற்றதா இல்லையா என்ற விவரத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் விண்ணப்பம் செய்த 60 முதல் 90 நாட்களுக்குள் UIDAI அமைப்பு முகவரிக்கே அஞ்சலில் ஆதார் அட்டையை அனுப்பிவிடும். அதற்கு முன்னரே உங்களுக்கு அட்டை தேவைப்பட்டால் இ சேவை மையத்திற்கு சென்று பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.
பயோமெட்ரிக் அப்டேட்:குழந்தைக்கு 5 வயது முடிந்த உடன் பயோமெட்ரிக் தரவுகளை புதுப்பித்து கொண்டு ஆதார் அட்டையில் அப்டேட் செய்துவிடுவது நல்லது. இல்லை என்றால் ஆதார் அட்டையே செயலிழக்க கூடும் என்பதை பெற்றோர் நினைவில் கொள்வது நல்லது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications