வீட்டில் இருந்தபடியே வங்கி சேவையை பெறலாம்.. எஸ்பிஐ அசத்தல் திட்டம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வங்கி துறையில் பற்பல தொழில் நுட்ப வசதிகள் வந்து கொண்டே உள்ளன. இவை வங்கி சேவைகளை அடுத்த கட்ட லெவலுக்கு எடுத்து செல்ல உதவுகின்றன. ஒரு காலத்தில் வங்கிகளுக்கு சென்று, கால்கடுக்க பல மணி நேரம் காத்திருந்து நமக்கு தேவையான வசதிகளை பெற்று வந்தோம். ஆனால் இன்று அப்படியில்லை உள்ளங்கையில் உலகம் என்பதை நிரூபிக்கும் விதமாக, பற்பல சேவைகளையும் ஸ்மார்ட்போன் மூலமாகவே பெற முடிகிறது.

சாதாரணமாக உள்ளூர் டீக்கடைகளில் கூட யுபிஐ சிஸ்டம் வந்து விட்டது. கொரோனாவின் வருகைக்கு பிறகு பற்பலவும் மாறியுள்ளது எனலாம். குறிப்பாக வங்கி துறையில் பற்பல சாதகமான மாற்றங்கள் வந்துள்ளன.

ரெசசன் கன்பார்ம்.. போட்டி போட்டுக் கொண்டு கணிப்பினை வெளியிடும் IMF, உலக வங்கி..! ரெசசன் கன்பார்ம்.. போட்டி போட்டுக் கொண்டு கணிப்பினை வெளியிடும் IMF, உலக வங்கி..!

சில நிமிடங்களில் சேவை

சில நிமிடங்களில் சேவை

முன்பெல்லாம் மணிக்கணக்கில் சென்று காத்திருக்க வேண்டிய சேவைக்கு, இன்று சில நிமிடங்களில் ஆன்லைனிலேயே பெரும் வசதிகள் வந்துவிட்டன. உதாரணத்திற்கு உங்களது வங்கி ஸ்டேட்மெண்ட் வேண்டுமெனில் வங்கிக்கு, அக்கவுண்ட் ஹோல்டர் நேரடியாக சென்று, கடிதம் எழுதிக் கொடுத்தால் அதன் பிறகு அதனை சரிபார்த்து விட்டு, குறிப்பிட்ட நேரம் கழித்து கொடுப்பார்கள். சில சமயங்களில் மதியம் கொடுத்தால், மாலை தருகின்றோம் என்பார்கள். அப்படியான அனுபவங்கள் பலருக்கும் இருக்கலாம்.

வாட்ஸ் அப் மூலம் வங்கி சேவை

வாட்ஸ் அப் மூலம் வங்கி சேவை

ஆனால் இன்று அப்படியில்லை, ஆன்லைன் வங்கி, போன் மூலம் வங்கி சேவை, தற்போது இன்னொரு படியாக வாட்ஸ் அப்பிலேயே பலவிதமான சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் எஸ்பிஐ வாட்ஸ் அப் சேவையில் என்னென்ன மாதிரியான வங்கி சேவையினை பெற முடியும்.

 வாட்ஸ் அப் எண் என்ன?

வாட்ஸ் அப் எண் என்ன?

அதிலும் வாட்ஸ் அப் மூலம் பெறும் பல சேவைகளுக்கு கட்டணம் இல்லை. அது இலவசம் என்பது இன்னொரு ஹைலைட்டான விஷயம்.

எஸ்பிஐ 9 வங்கி சேவைகளை வாட்ஸ் அப் மூலம் கொடுத்து வருகின்றது. இந்த சேவையை பெற நீங்கள் +919022690226 என்ற எண்ணுக்கு Hi என மெசேஜ் செய்து பெறலாம்.

 என்னென்ன சேவைகளை பெறலாம்?

என்னென்ன சேவைகளை பெறலாம்?

எஸ்பிஐ வாட்ஸ் அப் சேவையில்

1. மினி ஸ்டேட்மெண்ட்

2. அக்கவுண்ட் பேலன்ஸ்

3. பென்சன் ஸ்லீப்

4. கடன் குறித்தான விவரங்கள் - வட்டி விகிதம் உள்ளிட்ட விவரங்கள்

5. டெபாசிட் குறித்தான விவரங்கள் - வட்டி விகிதம் உள்ளிட்ட விவரங்கள்

6. NRI சேவைகள் (NRE, NRO Account) - முக்கிய அம்சங்கள் & வட்டி விகிதங்கள்

7. உடனடியாக இண்டா கணக்கினை தொடங்குதல் - முக்கிய அம்சங்கள், தகுதி/என்னென்ன தேவை உள்ளிட்ட விவரங்கள்

 

8. தொடர்புகள்/ குறைகளைத் தீர்ப்பதற்கான உதவி எண்கள்

9. முன் அங்கீகரிக்கப்பட்ட கடன்

எப்படி பதிவு செய்வது?

எப்படி பதிவு செய்வது?

எஸ்பிஐ-யின் இந்த வாட்ஸ் அப் சேவைக்காக நீங்கள் முதலில் பதிவு செய்ய வேண்டியிருக்கும்.

இந்த சேவையை பெற பதிவு செய்தல் அவசியமாகிறது. வாடிக்கையாளர்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து WAREG என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு உங்கள் (AC NO XXXX) கணக்கு எண்ணையும் டைப் செய்து 7208933148 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். அதன் பிறகு உங்களது வாட்ஸ் அப் சேவையினை பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sbi எஸ்பிஐ
English summary

What facilities can be availed in SBI whatsapp service?

What kind of banking services can be availed on SBI WhatsApp service? to avail this service you can text Hi to +919022690226
Story first published: Tuesday, January 10, 2023, 14:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X