இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் மிக முக்கியமான நிதியியல் திட்டங்களில் ஒன்று தான் Buy Now Pay later திட்டம். ஈகாமர்ஸ் தளத்தில் மட்டுமே இருந்த இத்திட்டம் தற்போது அனைத்து பெரும் கடைகளிலும் அளிக்கப்பட்டு வருகிறது.
இது மட்டும் அல்லாமல் சில மாதங்கள் முன்பு வரையில் கிரெடிட் கார்டு இருந்தால் மட்டுமே Buy Now Pay later திட்டத்தில் பொருட்களை வாங்க முடியும், ஆனால் தற்போது எஸ்பிஐ உட்பட அனைத்து முன்னணி வங்கிகளும் டெபிட் கார்டு வாயிலாகவே இத்திட்ட சேவைகளை அளிக்கத் துவங்கியுள்ளது.
பண்டிகை காலம்
இந்தப் பண்டிகை காலத்தில் சாமானிய மக்கள் இன்னமும் முழுமையாகக் கொரோனா பிடியில் இருந்து மீளாத நிலையில் இந்த Buy Now Pay later திட்டம் மிகப்பெரிய அளவில் பயன்படும். ஆனால் இந்தத் திட்டத்தில் வாங்கிய கடனுக்குத் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன ஆகும் என்பதைத் தெரிந்துகொண்டு அதன் பின்பு பொருட்களை வாங்கிக்கொள்ளுங்கள்.
Buy Now Pay later திட்டம்
BNPL எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Buy Now Pay later திட்டம் ஒரு குறுகிய கால நிதியியல் சேவை திட்டம். இது பாயின்ட் ஆப் சேல்ஸ் அதாவது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு ஸ்வைப் செய்யும் இயந்திரத்தின் வாயிலாக விற்பனை நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களைக் கடனாகவும், ஈஎம்ஐ தொகையாகவும் நிமிடங்களில் மாற்றி அளிக்கப்படும் திட்டம்.
ரீடைல் வர்த்தகம்
இந்தச் சேவையைத் தற்போது ஈகாமர்ஸ் நிறுவனங்கள் முதல் ரீடைல் கடைகள் முதல் அனைத்து தளத்திலும் பயன்பாட்டுக்கு வந்துள்ள காரணத்தில், இத்திட்டத்தைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்து உள்ளது.
முன்பணம்
இத்திட்டத்தில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் முன்பணமாக உதாரணமாக 25 சதவீத தொகையைச் செலுத்த வேண்டும். மீத பணத்தை மாத தவணையாக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் கால அளவீட்டை அடிப்படையில் பிரித்து ஈஎம்ஐ ஆகச் செலுத்தப்பட வேண்டும்.
வட்டியுமில்லை, கட்டணமுமில்லை
இந்தியாவில் தற்போது பல நிறுவனங்கள் முன்பணம் கூட இல்லாமல் இந்த BNPL திட்டத்தை அளிக்கிறது. இதையும் தாண்டி இந்தத் திட்டத்தை அதிகப்படியானோர் பயன்படுத்த மிக முக்கியக் காரணம் கடனுக்கு வட்டியில்லை, எவ்விதமான கட்டணம் இல்லை. ஆனால் ஒன்று உண்டு தாமதக் கட்டணம்.
சந்தை வல்லுனர்கள்
Buy Now Pay later திட்டத்தில் மிகவும் கவர்ச்சிகரமாகத் திட்டமாக இருந்தாலும், சந்தை வல்லுனர்கள் இத்திட்டத்தை மிகவும் எச்சரிக்கையாகப் பயன்படுத்த வேண்டும் என எச்சரிக்கை செய்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் Buy Now Pay later திட்டத்தில் தவணையைச் செலுத்தத் தவறினால் அதிகப்படியான தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். இதேபோல் சில நிறுவனம் அபராதமும் விதிக்கிறது.
வட்டி உண்டு
இதேபோல் பல நிறுவனங்கள் நீண்ட கால Buy Now Pay later திட்டத்திற்கு வட்டி விகிதமும் விதிக்கிறது. உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் தற்போது அதிகப்படியாக 48 மாதம் வரையில் BNPL திட்டம் மூலம் கடன் அளிக்கப்படுகிறது. இதற்கு வட்டி விதிக்கப்படுகிறது, நீண்ட கால BNPL திட்டத்தைப் பர்சனல் லோன் ஆகவே நிறுவனங்கள் பார்க்கிறது.
சிபில் ஸ்கோர்
இவை அனைத்திற்கும் மேல் Buy Now Pay later திட்டத்தில் நீங்கள் செலுத்தும் தவணை பழக்கம் CIBIL ஸ்கோரை பாதிக்கும் என்பதால் சின்சியர் ஆகத் தவணைகளைச் செலுத்த வேண்டும் இல்லை எனில் சிபில் மதிப்பில் பெரிய பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications