ஆதார் கார்டு என்பது இந்திய குடிமக்களுக்கு அத்தியாவசியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. இது பல்வேறு காரணங்களுக்காக உங்களுக்கு ஆதார் கார்டு தேவைப்படலாம். வங்கியில் பரிவர்த்தனைகள் செய்வதற்கு, வங்கி கணக்கு தொடங்குவதற்கு மற்றும் அரசாங்க சலுகைகளை பெறுவதற்கு என அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இருப்பினும் எல்லா நேரங்களிலும் ஆதார் கார்டை எடுத்துச் சொல்ல முடியாது என்பதால் அதற்கு பதிலாக நீங்கள் ஆதார் விர்ச்சுவல் ஐடியைப் பயன்படுத்தலாம். இது எங்கு பயன்படுத்தப்படுகிறது? இந்த விர்ச்சுவல் ஐடியை தெரிந்து கொள்வது எப்படி? என்ற விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஆதார் விர்ச்சுவல் ஐடி என்றால் என்ன?: ஆதார் விர்ச்சுவல் ஐடி என்பது ஆதார் அட்டையுடன் தொடர்புடைய 16 இலக்க எண்ணாகும். உண்மையான ஆதார் நம்பருக்குப் பதிலாக இந்த விர்ச்சுவல் ஐடியைப் பல்வேறு விஷயங்களுக்காகப் பயன்படுத்தலாம். ஆதார் கார்டை வைத்திருப்பவர்கள் பல்வேறு பணிகளுக்கு விர்ச்சுவல் ஐடியைப் பயன்படுத்தலாம்.

ஆதார் விர்ச்சுவல் ஐடியின் பயன்கள்:
1. வங்கிக் கணக்கைத் திறப்பதற்கு பயன்படுத்தலாம்.
2. அரசு சேவைகளுக்கு விண்ணப்பிக்க பயன்படுத்தலாம்.
3. E-KYC செயல்முறைக்கு பயன்படுத்தலாம்.
4. ஆதார் பிவிசி கார்டு அல்லது இ-ஆதார் டவுன்லோட் செய்வதற்கு பயன்படுத்தலாம்.
5. அரசாங்க மானியங்களைப் பெறுவதற்கு விர்ச்சுவல் ஐடியைப் பயன்படுத்தலாம்.
6. உடனடியாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல்
7. புதிய காப்பீட்டு பாலிசி வாங்குவது
ஆதார் விர்ச்சுவல் ஐடியை எவ்வாறு உருவாக்குவது?:
ஸ்டெப் 1: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்யவும். இந்தி அல்லது ஆங்கிலம் என உங்களுக்கு தெரிந்த மொழியைப் பபயன்படுத்தலாம். அந்தப் பக்கத்தின் கீழே உள்ள ஆதார் சேவைகளின் கீழ் "Virtual ID (VID) Generator" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: உங்கள் ஆதார் கார்டு நம்பர் மற்றும் கேப்ட்சா குறியீட்டை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 4: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும். அந்த OTP விவரங்களை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 5: தற்போது உங்கள் விர்ச்சுவல் ஐடி திரையில் தோன்றும், மேலும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு விர்ச்சுவல் ஐடி அனுப்பப்படும்.
SMS மூலம் விர்ச்சுவல் ஐடியை பெறுவது எப்படி?: SMS வழியாக விர்ச்சுவல் ஐடியை உங்கள் மொபைல் நம்பருக்கு பெற முடியும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து "RVID [ஆதார் நம்பரின் கடைசி 4 இலக்கங்கள்]" என்ற வடிவில் 1947 என்ற நம்பருக்கு மெசேஜ் அனுப்பவும். உதாரணமாக, கடைசி நான்கு இலக்கங்கள் 4565 ஆக இருந்தால், "RVID 4565" என்று அனுப்பவும்.


Click it and Unblock the Notifications