சென்னை: நீங்கள் கடைக்கு சென்று பொருள் வாங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்கள், அப்போது கார்டை ஸ்வைப் செய்த பிறகு உங்களின் கிரெட்டிட்டில் போதிய பேலன்ஸ் இல்லை என வந்தால் என்ன செய்வது? இந்த பிரச்சினை வராமல் இருக்க உதவுவது தான் Credit Card Authorisation.
கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் அதனை மெர்சண்ட் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தும் போது Credit Card Authorisation செய்வது அவசியம். Credit Card Authorisation என்றால் என்ன ?அது ஏன் முக்கியம்? என்பது குறித்து நாம் இந்த கட்டுரையில் தெரிவித்துக் கொள்ளலாம்.

தற்போது பெரும்பாலானவர்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொருவருக்கும் அவர்களிடம் கிரெடிட் ஸ்கோர், வருமானம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஒரு மாதத்தில் குறிப்பிட்ட அளவிலான தொகையை பயன்படுத்தி கொள்ளலாம் என வரம்பு நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வரம்பை மீறிய தொகையை கிரெடிட் கார்டில் பயன்படுத்த முடியாது. எனவே நீங்கள் ஒரு வியாபாரியிடம் கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்யும் போது அதில் உரிய பேலன்ஸ் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தும் நடைமுறை தான் Credit Card Authorisation.
வியாபார நிறுவனங்கள் உங்களின் கிரெடிட் கார்டை சரிபார்க்கும் நடைமுறை தான் இது. இந்த கார்டில் போதிய அளவு நிதி இருக்கிறதா, இது போன்ற பரிவர்த்தனைகளுக்கு அதனை பயன்படுத்தலாமா என்பதை அறிந்து கொள்ள வியாபாரிகளுக்கு இந்த முறை உதவுகிறது.
பொதுவாக Credit Card Authorisation என்பது வியாபாரிகளுக்கும் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பான முறையில் பரிவர்த்தனைகள் நடைபெறுவதை உறுதி செய்வதற்கு மிகவும் முக்கியமானது.
இது எப்படி சாத்தியப்படுகிறது என்றால் முதலில் அந்த குறிப்பிட்ட கடையை சேர்ந்தவர்கள் அல்லது வியாபாரி உங்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்திற்கு பேமென்ட் பிராசசர் வழியாக ஒரு கோரிக்கையை அனுப்பி வைக்கும்.
இதனை அடுத்து அந்த கார்டினை வைத்திருக்கும் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது, கிரெடிட் லிமிட் எவ்வளவு இருக்கிறது, வேறு ஏதேனும் நிதி மோசடி நடக்கிறதா என்பது குறித்த விவரங்களை அது எடுத்து வழங்கும்.
கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியானது அந்த வியாபாரிக்கு அங்கீகாரத்திற்கான கோடினை வழங்கும். இந்த கோடினை பயன்படுத்தி வியாபார நிறுவனங்கள், உங்கள் கார்டில் போதிய பேலன்ஸ் இருக்கிறதா? இந்த பரிவர்த்தனை பாதுகாப்பானதா ? என்பன உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்தி பரிவர்த்தனையை ஏற்றுக் கொள்வார்கள்.
எனவே எப்போதும் உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் முன்பு போதிய தொகை அதில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், இல்லையெனில் வியாபார நிறுவனம் Credit Card Authorisation மூலம் அதனை தெரிந்து கொள்ளும்.


Click it and Unblock the Notifications