புதிதாக வேலை செல்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது அதுதான் CTC அதாவது Cost to Company. நீங்கள் ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு செல்கிறீர்கள் எனும் போது அந்த நிறுவனம் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்குகிறோம் என்பதை ஒரு விரிவான விளக்கத்துடன் கூடிய ஆவணமாக வழங்குவார்கள். அப்பொழுது உங்களுடைய சிடிசி இவ்வளவு எனக் கூறுவார்கள்.
பெரும்பாலான இளைஞர்கள் அப்பொழுது நமக்கு இவ்வளவு சம்பளத்தில் வேலை கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியுடன் இருப்பார்களே தவிர அந்த ஆவணத்தில் என்னென்ன குறிப்பிடப்பட்டு இருக்கிறது சிடிசி என்றால் என்ன நம் கையில் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பது குறித்து கவனிக்க மாட்டார்கள். ஆனால் அதைத்தான் நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும்.

உதாரணமாக ரவி மற்றும் ராமு என்ற இரண்டு பேர் முதுநிலை பட்டப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி செல்கிறார்கள்.இருவருக்குமே வேலையும் கிடைத்துவிடுகிறது, ரவிக்கு ஆண்டுக்கு 36 லட்சம் ரூபாய் சம்பளத்திலும் ராமூவிற்கு ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய் சம்பளத்திலும் வேலை கிடைக்கிறது. இதில் ரவிக்கு ராமுவை விட அதிகபட்ச சம்பளம் என நாம் நினைப்போம் ஆனால் உண்மையில் பார்க்கும்போது கையில் கிடைக்கும் சம்பளம் இருவருக்கும் கிட்டத்தட்ட ஒன்றாக தான் இருக்கிறது.
அதாவது ரவிக்கு வழங்கும் 36 லட்சம் ரூபாய் சம்பளம் என்பது சி.டி.சி, இதில் அவருக்கு வழங்கும் சம்பளம் மட்டும் இல்லாமல் நிறுவனம் சார்பாக அவருக்கு வழங்கக்கூடிய ஈபிஎஃப் பங்களிப்பு, ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மற்றும் உணவு உள்ளிட்டவற்றுக்கான அலொவென்ஸுகள் ஆகியவற்றை கொண்டதாக அது இருக்கும் . இதுவே ராமுக்கு வழங்கக்கூடிய 24 லட்சம் ரூபாய் சம்பளம் என்பது சம்பளமாகவே இருக்கும்.
எனவே தான் இருவரும் கையில் பெரும் பணம் என்பது கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கிறது. இதனால் தான் நாம் வேலைக்கு சேரும்போது வழங்கப்பட்டுள்ள ஆவணத்தில் நம்முடைய சம்பளம் சிடிசி என குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள் சிடிசி என்ற நடைமுறையை தான் பின்பற்றுகின்றன.
சிடியில் அடிப்படை ஊதியம் என்பது எவ்வளவு என குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த அடிப்படை ஊதியத்தை கணக்கீடு செய்து தான் அந்த நபருக்கான பிஎஃப் தொகை எவ்வளவு பிடித்தம் செய்வது மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவு எனப்படும் HRA வழங்குவது என்பன உள்ளிட்டவை தீர்மானிக்கப்படும். இந்த அடிப்படை ஊதியத்தை கணக்கீடு செய்து தான் பிற்காலத்தில் உங்களுக்கு வழங்க வேண்டிய கிராஜூவிட்டி கணக்கீடு செய்யப்படும்.
நிறுவனம் சார்பாக உங்களுடைய பிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை வரவு வைக்கப்படுகிறது, உங்களுடைய சம்பளத்தில் எவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்பட்டு உங்களுடைய பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது என்ற விவரங்கள் இதில் இடம் பெற்றிருக்கும். அதே போல டிராவல் மற்றும் பிற அலொவென்சுகள், டிடிஎஸ் எனப்படும் மூலத்தில் கழிக்கப்படும் வரி, உள்ளிட்ட அனைத்துமே இட்மபெற்றிருக்கும்.


Click it and Unblock the Notifications