நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி உலகையே நம்முடைய ஸ்மார்ட் போனுக்குள் கொண்டு வந்து விட்டன. தற்போது ஸ்மார்ட் போன் வாயிலாக நாம் பல்வேறு வேலைகளை மிக எளிமையாக முடித்துக் கொள்ள முடிகிறது .
வங்கி சேவை பெறுவது தொடங்கி அரசின் சேவைகளை பெறுவது வரை என அனைத்துமே நம்முடைய ஸ்மார்ட் ஃபோனுக்குள்ளேயே வந்து விட்டன. குறிப்பாக நம்முடைய அடையாள அட்டைகளான ஆதார் ,ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை ,பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை நாம் எங்கு சென்றாலும் கையில் கொண்டு செல்ல வேண்டிய தேவை கிடையாது. இவை அனைத்தையும் நாம் எளிதாக டிஜி லாக்கர் போன்ற செயலிகள் வாயிலாக நம்முடைய ஃபோனிலேயே அணுக முடிகிறது.

மத்திய அரசின் டிஜிலாக்கர் திட்டத்தைப் போலவே தமிழ்நாடு அரசு இ பெட்டகம் என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இ பெட்டகம் என்றால் என்ன , இது எப்படி செயல்படுகிறது என்பதை நாம் தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் தான் தமிழ்நாடு அரசு இ பெட்டகம் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தது. கிட்டத்தட்ட இது மத்திய அரசின் டிஜி லாக்கர் திட்டத்தை போல தான் செயல்படும். இ பெட்டகம் செயலி வாயிலாக நாம் நம்முடைய 10 மற்றும் 12ஆம் வகுப்பு கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண்கள், உள்ளிட்ட கல்வி சான்றிதழ்கள் ஆவணங்களை எங்கிருந்தாலும் அணுகலாம், பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்படுத்தலாம்.
11 ஆம் வகுப்பு ,12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், உயர்கல்வி, பட்டய படிப்பு சான்றிதழ்கள், மதிப்பெண் ஆவணங்கள் ஆகியவை இ பெட்டகம் வாயிலாக நாம் எளிதாக டவுன்லோடு செய்து கொள்ள முடியும். இது மட்டுமில்லாமல் ஜாதி சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள் ,வருமானச் சான்றிதழ் ,முதல் பட்டதாரி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களையும் இ பெட்டகம் செயலி வாயிலாக சேமித்து வைத்து உலகின் எந்த பகுதியில் இருந்து எடுத்து பயன்படுத்தலாம்.
இதற்காக இ பெட்டகம் செயலியை பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் https://www.epettagam.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும் . அதில் நம்முடைய ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். இதனை அடுத்து நம் ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அதை உள்ளீடு செய்தால் இ பெட்டகத்தை பயன்படுத்த முடியும்.
2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு படிப்பை முடித்த மாணவர்களின் சான்றிதழ்கள் மட்டுமே இதில் பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது . எனவே மழை வெள்ளம் வந்துவிட்டது அதில் என்னுடைய சான்றிதழ் காணாமல் போய்விட்டன அல்லது பயணம் செய்யும் போது தவறவிட்டு விட்டேன் இனி கல்லூரி சேர்வது எப்படி மேற்படிப்புக்கு செல்வது எப்படி அரசின் நலத்திட்டங்களை பெறுவது எப்படி என யாரும் புலம்ப தேவையில்லை.
இந்த ஒரு செயலி இருந்தால் போதும் மக்கள் தங்களுடைய கல்வி சார்ந்த ஆவணங்களை வேலை வாய்ப்பு ,உயர்கல்வி நிறுவனங்கள் ,அரசு அலுவலகங்கள் , வங்கிகள் மற்றும் பிற சரிபார்ப்பு பணிகளுக்காக பாதுகாப்பான மற்றும் காகிதம் இல்லாத முறையில் டிஜிட்டல் வடிவத்தில் பகிர முடியும். போகும் இடத்திற்கெல்லாம் இவற்றை கொண்டு செல்ல வேண்டும் தேவையும் பாதுகாத்து பத்திரமாக வைத்திருக்க வேண்டிய தேவையும் இனி இல்லை.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications