Income Tax-ல் EEE என்றால் என்ன ?? உங்கள் முதலீட்டுக்கு EEE பாதுகாப்பு உள்ளதா..? உடனே செக் செய்யுங்க..!

இன்றைய இளைஞர்கள் ஆபத்து இல்லாத எதிர்காலத்திற்காகச் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகப்படியான அக்கறையைக் காட்டுகின்றனர்.

இதேபோல் விரைவாக ஓய்வுபெற விரும்புவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஓய்வுக் காலத்திற்குத் தேவையான மற்றும் கொண்டுள்ளனர்.

இதனால் தூக்கத்தில் கூட அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகப் பல பிரிவுகளிலும், திட்டங்களிலும் முதலீடு செய்து passive income பெறுவதில் ஆர்வமாக உள்ளனர்.

EEE நிறைய முக்கியம்

EEE நிறைய முக்கியம்


ஆனால் ஒரு முதலீட்டாளராக, உங்கள் வரிச் சுமையைக் குறைப்பது மட்டுமின்றி, முதிர்வுக் காலத்தில் பெரும் வருமானத்திற்கு முற்றிலும் வருமான வரி விலக்கு கிடைக்கும் வகையில் முதலீட்டு வாய்ப்புகளைத் தேட வேண்டும்.

அந்த வகையில் அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களும் EEE பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

முதல் படி

முதல் படி

நீங்கள் ஏற்கனவே செய்துள்ள முதலீடுகள் இந்த பிரிவில் வருகிறதா என்பதையும் செக் செய்ய முடியும்.

 Exempt Exempt Exempt என்பதன் சருக்கமே EEE

Exempt Exempt Exempt என்பதன் சருக்கமே EEE

உங்கள் வரிப் பணத்தைச் சேமிப்பதற்காக முதலீட்டுத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்.

 முதல் படி

முதல் படி

இந்த முதலீட்டில் முதல் படியில் நீங்கள் செய்யும் முதலீட்டுத் திட்டத்திற்கு, முதலீடு செய்யும் உங்கள் வருமான அல்லது சம்பள பணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்யுங்கள். இது தான் EEE-யில் முதல் E அதாவது Exempt

 2வது படி

2வது படி

நீங்கள் முதலீடு செய்த தொகைக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரி விலக்கு கிடைக்குமாயின் EEE-யில் இது இரண்டாவது E. நீங்கள் தேர்வு செய்யும் திட்டத்தின் மொத்த முதலீட்டுக் கால கட்டத்தில் திரட்டப்படும் முழு வட்டிக்கும் வரிவிலக்கு உண்டு என்பதை உறுதி செய்யுங்கள்.

3வது படி

3வது படி

நீங்கள் செய்த முதலீட்டு திட்டத்தின் முதிர்வு காலத்தில் பணத்தைத் திரும்பப்பெறும் போது திரட்டப்பட்ட வட்டி, அசல் தொகை உள்ளிட்ட மொத்த வருமானத்திற்கும் வரி விதிக்கப்படாது என்பது தான் EEE-யில் இது மூன்றாவது மற்றும் கடைசி E.

முதலீடு- லாபம் - முதிர்வு

முதலீடு- லாபம் - முதிர்வு

இது தான் EEE - Exempt Exempt Exempt வகை முதலீடு என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய திட்டத்தில் முதலீடு, வட்டி / வருமானம் மற்றும் முதிர்வு மீதான அனைத்திற்கும் வரி விலக்குகள் பெற முடியும். இத்தகைய திட்டத்தின் மூலம் வரி சுமையைப் பெரிய அளவில் குறைப்பது மட்டும் அல்லாமல் முதலீட்டின் லாபத்தை முழுமையாகப் பெற முடியும்.

 PPF

PPF

மத்திய அரசின் திட்டமாக விளங்கும் PPF ஆபத்து இல்லாத முதலீடாக உள்ளது இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வங்கி அல்லது தபால் நிலையத்தில் கணக்கைத் திறக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது, இத்திட்ட முதலீட்டுக்கு 15 வருட லாக்இன் காலம் உள்ளது. இந்த முதலீடு EEE பிரிவில் வருகிறது.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF)

பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF)


ஊழியர் வருங்கால வைப்பு நிதி அல்லது EPF என்பது மத்திய அரசால் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். இது EEE (விலக்கு- விலக்கு- விலக்கு) வரி வகையின் கீழ் வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+