சென்னை: சேமிப்பு என்றதும் நாம் முதலில் தேர்ந்தெடுப்பது FD எனப்படும் Fixed Deposit தான். நம்மில் பலர் தங்கள் பணத்தை பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள ஆபத்துக்கள் இல்லாத முதலீடுகளில் முதலீடு செய்யவே விரும்புகிறோம். அதிலும் அதிகளவு மக்கள், குறிப்பாக நிலையான வைப்புத் தொகை எனப்படும் பிக்சட் டெபாசிட் திட்டங்களை தான் முதலில் தேர்ந்தெடுக்கின்றனர். பிக்சட் டெபாசிட்டைப் பயன்படுத்தி FD லேடரிங் முறையில் நிலையான வருமானத்தை உருவாக்க முடியும். அதன் விவரங்களை, இந்த பதிவில் பார்ப்போம்.
FD லேடரிங் என்றால் என்ன?: FD லேடரிங் என்பது உங்கள் முதலீட்டை வெவ்வேறு முதிர்வு தேதிகளுடன் பல FD திட்டத்தில் பிரித்து முதலீடு செய்வதை குறிக்கிறது. சான்றாக உங்களிடம் ரூ. 10 லட்சம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ரூ. 3 லட்சத்தை பிரித்து ஒரு வருட FD திட்டத்திலும், இன்னொரு ரூ. 3 லட்சத்தை 3 வருட FD திட்டத்திலும், மீதமுள்ள ரூ. 4 லட்சத்தை 5 வருட FD திட்டத்திலும், நீங்கள் முதலீடு செய்யலாம். இதன் மூலம் 1 வருட FD திட்டத்தின் தொகை முதிர்வு பெறும்போது, அதனை எடுத்து மீண்டும் இன்னொரு FD திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதுவே FD லேடரிங் முறை எனப்படுகிறது.

பிக்சட் டெபாசிட்கள் (FD) பல காலமாக ரிஸ்க் இல்லாத இந்திய நுகர்வோருக்கு விருப்பமான முதலீட்டுத் தேர்வாக இருக்கிறது. மாறுபட்ட காலங்கள் மற்றும் வட்டி விகிதங்களுடன், FD-யை பராமரிப்பது காலப்போக்கில் செல்வத்தை வளர்க்க உதவுகிறது.
பிக்சட் டெபாசிட் லேடரிங் என்பது ஒருவரின் பணப்புழக்கத்தை அதிகரித்து வருமானத்தை மேம்படுத்தும் ஒரு ஸ்ட்ராட்டர்ஜிக் (strategic) அணுகுமுறையாகும். ஒருவர் ஒரு FD-யில் தனது மொத்த தொகையையும் முதலீடு செய்வதற்குப் மாற்றாக, தங்கள் பணத்தை பல்வேறு தவணைக்காலங்களில் பல FDகளில் முதலீடு செய்யலாம்.. ஒவ்வொரு FD-இன் கணக்கும் வெவ்வேறு கால இடைவெளியில் முதிர்ச்சியடைந்து, நீங்கள் வருமானம் பெறலாம்.
பிக்சட் டெபாசிட் லேடரை செயல்படுத்தும் முறை: முதலில் முதலீட்டு தொகையாக எவ்வளவு பணத்தை போடப் போகிறோம் என்பதை முன்பாகவே முடிவு செய்ய வேண்டும். அதேபோல எத்தனை ஆண்டுகளுக்கு நீங்கள் FD திட்டத்தில் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பிக்சட் டெபாசிட்டுக்கும் அதற்கான முதிர்வு தேதிகளைத் தீர்மானிக்க வேண்டும். பிக்சட் டெபாசிட்டின் முதிர்வுக் காலங்களை அடிப்படையாக வைத்து முழு முதலீட்டையும் வெவ்வேறு FD க்களாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு பிக்சட் டெபாசிட் முதிர்ச்சியடையும் போதும், பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது வேறு ஒரு முதிர்வு காலத்துடன் மற்றொரு பிக்சட் டெபாசிட்டில் மீண்டும் முதலீடு செய்யலாம்.
நிதி இலக்குகள்(Financial goals) மற்றும் பணப்புழக்கத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நீண்ட காலத்துடன் கூடிய FD-களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வருமானத்தைப் பெறமுடியும். அதோடு மட்டுமல்லாமல் பிக்சட் டெபாசிட் லேடர் மூலம் FD வருமானத்தை அதிகரிக்கவும் முடியும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?



Click it and Unblock the Notifications