இந்தியாவில் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. வழக்கத்தைவிட 45 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. வருமான வரி இணையதளத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு மாற்றங்களே கூடுதலாக கால அவகாசம் வழங்குவதற்கான காரணம் என வருமானவரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வருமான வரி கணக்கு தாக்கல்: வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கு இன்னும் நாட்கள் இருந்தாலும் முன்கூட்டியே கணக்கினை தாக்கல் செய்த விடுவது தான் நல்லது. ஏனெனில் இறுதி நாட்களில் வருமான வரி இணையதளத்தில் பலரும் கணக்கு தாக்கல் செய்ய முன்வருவார்கள் என்பதால் அந்த சமயத்தில் இணையதளமே முடங்கிப் போகக் கூடிய அபாயமும் ஏற்படுகிறது. பொதுவாக வருமான வரி கணக்கு செய்பவர்கள் இந்த முக்கியமான ஒரு படிவத்தை ஆய்வு செய்வது கட்டாயம். அது என்ன என்பது குறித்து தான் நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.

படிவம் 26ஏஎஸ் (Form 26AS ) என்றால் என்ன?: படிவம் 26ஏஎஸ் (Form 26AS ) இதனை ஆண்டு தகவல் அறிக்கை என அழைக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் உங்களுடைய அனைத்து விதமான நிதி நடவடிக்கைகளும் உள்ளடக்கிய ஒரு ஆவணம் ஆகும். இதில் அந்த நிதியாண்டில் உங்களின் டிடிஎஸ் பிடித்தம், டிசிஎஸ் உள்ளிட்ட அனைத்து வரி விவரங்களும் முழுமையாக இருக்கும். இந்த படிவத்தை டவுன்லோட் செய்து அதில் இருக்கும் தகவல்களும் உங்களுடைய வருமான வரி கணக்கும் ஒரே மாதிரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வது முக்கியம்.
முரண்பாடு இருந்தால் சிக்கல்: இந்த இரண்டு கணக்குகளிலும் ஏதேனும் முரண்பாடுகள் இருக்கிறது என்றால் உங்களுக்கு வரவேண்டிய ரீஃபண்ட் தொகை தாமதமாகலாம் அல்லது உங்களுக்கு அந்த ரீஃபண்ட் வராமலே கூட போகலாம். எனவே ஐடிஆர் தாக்கல் செய்யும் ,முன்பு படிவம் 26 ஏஎஸ்- ஐ முதலில் பதிவிறக்கம் செய்து அதில் இருக்கும் தகவல்களை முழுவதுமாக படிக்க வேண்டும், உங்கள் பெயரில் டிடிஎஸ் சரியாக டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.
எப்படி டவுன்லோடு செய்வது?: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது படிவம் 26ஏஎஸ்-இல் இருக்கும் வரி கணக்கும் நீங்கள் தாக்கல் செய்த கணக்கும் முரண்பாடாக இருந்தால் உங்களுக்கு மிஸ் மேட்ச் என்ற தகவல் திரையில் காண்பிக்கும் அவ்வாறு மிஸ் மேட்ச் என்ற தகவல் இருந்தால் நீங்கள் மீண்டும் ஒருமுறை சரிபார்த்து உங்களுடைய வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
படிவம் 26ASஐ எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம் . இதற்கு
1. முதலில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான 'e-filing' தளமான https://www.incometax.gov.in/iec/foportal/ -க்கு செல்ல வேண்டும்.
2. அதில் 'e-file ' என்பதை கிளிக் செய்து அதில் Income Tax Returns என்பதை தேர்ந்தெடுத்து 'View Form 26AS' என்பதை தேர்வு செய்ய வேண்டும்
3. அதில் 'Confirm' என்பதை கிளிக் செய்தால் TDS-CPC போர்ட்டலுக்கு செல்லும்
4. இதில் agree என்பதை கிளிக் செய்து Proceed என்பதை தேர்வு செய்ய வேண்டும்
5. இதன் பின்னர் Click 'View Tax Credit (Form 26AS)' என்பதை கிளிக் செய்ய வேண்டும்
6. அடுத்ததாக எந்த ஆண்டுக்கான படிவம் என்பதை தேர்வு செய்து 'View/Download' என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்
இவ்வாறு டவுன்லோடு செய்யப்பட்ட படிவம் பாஸ்வேர்டு புரோடெக்டடாக இருக்கும். எனவே நம் பான் அட்டையில் இருக்கும் பிறந்த தேதியை DDMMYYYY என்ற முறையில் உள்ளீடு செய்தால் படிவம் ஓபன் ஆகும். அதன் பின்னர் அதில் இருந்து அனைத்து தகவல்களையும் படித்து கணக்கினை தாக்கல் செய்யலாம்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications