Google Pay-ன் செம்ம அப்டேட்: குழந்தைகளுக்கு பாக்கெட் மணி கொடுப்பது இவ்வளவு ஈஸியா?

ஸ்மார்ட் பேரண்ட்ஸ்க்கு ஒரு சூப்பர் நியூஸ் வந்திருக்கு. உங்க குழந்தைங்ககிட்ட போன் இருக்கா? அவங்க அடிக்கடி ஸ்நாக்ஸ்க்கும், ஸ்டேஷனரிக்கும் உங்ககிட்ட காசு கேட்டு நிக்கிறாங்களா, சில்லறை இல்லையே. அப்புறம் தர்றேன் அப்படின்னு இனி நீங்க சொல்லவே முடியாது. ஏன்னா நம்ம எல்லாருடைய விருப்பமான ஆப்பான Google Pay, இப்போ அதிரடியா Pocket Money என்ற ஆப்சனை கொண்டு வந்திருக்கு.

இனி உங்க குழந்தைங்க அவங்களுக்கு பிடிச்சதை வாங்கிக்க நீங்க டிஜிட்டலாவே பாக்கெட் மணி தரலாம். அதுமட்டும் இல்லாம அவங்க தேவையில்லாம அதிகமா செலவு பண்ணிடக் கூடாதுன்னு நீங்க ஒரு செக் வைக்கவும் இதில் வசதி இருக்கு. கூகுள் பே-யின் இந்த தரமான அப்டேட் எப்படி வேலை செய்யுது? இதை வச்சு உங்க குழந்தைங்களோட செலவை எப்படி கண்ட்ரோல் பண்றது? வாங்க விரிவாக பார்க்கலாம்.

Google Pay-ன் செம்ம அப்டேட்: குழந்தைகளுக்கு பாக்கெட் மணி கொடுப்பது இவ்வளவு ஈஸியா?

கூகுள் பே - யில் பாக்கெட் மணி என்ற புதிய ஆப்ஷன் ஆனது தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள், வங்கிக் கணக்கு இல்லாத தனது குடும்ப உறுப்பினர்கள் அல்லது மற்றவர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை அனுமதிக்க முடியும்.

குழந்தைகள், முதியவர்கள் அல்லது பணியாளர்கள் போன்ற, மற்றவர்களை சார்ந்திருப்பவர்கள் எளிதாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்வதற்காக இந்த அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு பயனர் தனது வங்கிக் கணக்கை பயன்படுத்துவதற்கான அனுமதியை. குறிப்பிட்ட பண வரம்பு மற்றும் நிபந்தனைகளுடன் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வதன் மூலம் இது செயல்படுகிறது.

Also Read

கூகுள் பே பாக்கெட் மணி என்றால் என்ன?

பாக்கெட் மணி சர்க்கிள் என்பது UPI circle அமைப்பின் ஒரு பகுதியாகும். இது முதன்மை பயனர், தனது இரண்டாம் பயனர்களை சேர்க்க அனுமதிக்கிறது. இதில் முதன்மை பயனரின் வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருக்கும், அதே சமயம் இரண்டாம் நிலை பயனர்கள் அந்த கணக்கை பயன்படுத்தி பணப் பறிமாற்றங்களை செய்ய முடியும்.
இந்த முறையில் தனியாக பணத்தை பரிமாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக இரண்டாம் நிலை பயனர் ஒரு பரிவர்த்தனையை தொடங்கும்போது, முதன்மை பயனர் அமைத்துள்ள நிபந்தனையை பொறுத்து அது தானாகவே நடக்கும் அல்லது முதன்மை பயனரின் ஒப்புதலுக்கு பிறகு நடக்கும்.

ஒரு கூகுள் பே பயனாளர் ஐந்து இரண்டாம் நிலை பயனர்கள் வரை சேர்த்துக் கொள்ள முடியும். இது பல நபர்களின் சிறிய மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட செலவுகளை நிர்வகிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பாக்கெட் மணியில் இரண்டு விதமான பணம் செலுத்துவதற்கான முறைகள் உள்ளன.

Recommended For You

1. முழுமையான அதிகாரம் (Full Delegation): இதில் முதன்மை பயனர் மாதம் 15,000 வரை ஒரு குறிப்பிட்ட வரம்பை நிர்ணயிக்கலாம். இரண்டாம் நிலை பயனர் ஒவ்வொரு முறையும் அனுமதி கேட்க தேவையில்லை. அந்த வரம்பிற்குள் சுதந்திரமாக பணம் செலுத்தலாம்.

2. பகுதி அதிகாரம் (Partial Delegation): இதில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அனுமதி அவசியம். இரண்டாம் நிலை பயனர் பணம் செலுத்த முற்படும்போது, முதன்மை பயனர் அதை தனது போனில் உறுதி செய்த பின்னரே பணம் பரிமாற்றம் செய்யப்படும்.

ஆக முதன்மை பயனர் எவ்வளவு கட்டுப்பாடு வைத்திருக்க விரும்புகிறார் என்பதை பொறுத்து இதில் ஏதேனும் ஒன்றை மாற்றிக்கொள்ளலாம்.

You May Also Like

கூகுள் பே-யில் பாக்கெட் மணியை செட் செய்வது எப்படி?

1. முதலில் கூகுள் பே ஆப்பை திறந்து, புரொபைல் மெனுவில் உள்ள UPI Circle பகுதிக்கு செல்ல வேண்டும்.

2. அங்கே Set up Pocket Money என்பதை தேர்ந்தெடுத்து, நீங்கள் சேர்க்க விரும்பும் நபரின் காண்டாக்ட் நம்பரை தேர்வு செய்யவும். அந்த நபரிடமும் கூகுள் பே ஆப் இருக்க வேண்டும்.

3. முதன்மை பயனர், இரண்டாம் நிலை பயனரின் UPI Circle QR குறியீட்டை ஸ்கேன் செய்து, மேலே சொன்ன இரண்டு முறைகளில் முழு அதிகாரம் அல்லது அனுமதி முறை ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. முழு அதிகார முறையை தேர்வு செய்தால், மாதாந்திர செலவு வரம்பை நிர்ணயிக்க வேண்டும். மேலும் பாதுகாப்புக்காக அந்த நபரின் உறவுமுறை மற்றும் அரசு அடையாள அட்டை விவரங்களை வழங்க வேண்டும்.

5. இறுதியாக அழைப்பு அனுப்பப்பட்டு, முதன்மை பயனர் தனது UPI PIN-ஐ உள்ளிட்டு உறுதி செய்ய வேண்டும்.

பணம் செலுத்துவது எப்படி?

மேற்கண்டவாறு செட் அப் செய்து முடித்த பிறகு, இரண்டாம் நிலை பயனர் நேரடியாக கடைகளில் QR கோடு ஸ்கேன் செய்தோ அல்லது போன் நம்பர் மூலம் பணம் செலுத்தலாம். ஆன்லைன் தளங்களிலும் கூகுள் பே மூலம் பணம் செலுத்த முடியும். அதில் முழு அதிகாரம் கொடுக்கப்பட்ட நபர் பணம் உடனடியாக செலுத்திக் கொள்ளலாம். அனுமதி முறையில் முதன்மை பயனருக்கு நோட்டிபிகேஷன் வரும், அவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை ஓகே செய்ய வேண்டும். இருவருமே தங்களது ட்ரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியில் (Transaction History) செலவுகளை பார்த்துக்கொள்ளலாம்.

தற்போது QR கோடு, போன் நம்பர், UPI ID மற்றும் ஆன்லைன் பேமெண்ட்களுக்கு மட்டுமே இந்த வசதி உள்ளது. பில் பேமெண்ட் மற்றும் மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும் புதிதாக ஒருவரை சேர்த்தவுடன் முதல் 24 மணி நேரத்திற்கு Cooldown Period இருக்கும். அந்த நேரத்தில் மட்டும் பரிவர்த்தனை வரம்புகள் குறைவாக இருக்கும், அதன் பிறகு முழு வரம்பை பயன்படுத்தலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+