சென்னை : இந்தியாவில் பருவமழை காலங்களில் நாம் தற்போது அதிகபட்சமாக வெள்ளப்பெருக்கு ,மழை நீர் தேங்குவது , நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இதுபோன்ற சூழல்களில் நமது வீடுகளுக்கும் வீட்டில் உள்ள பொருட்களுக்கும் பல்வேறு சேதங்கள் ஏற்படுகின்றன.
இது போன்ற சூழல்களில் தான் ஹோம் இன்சூரன்ஸ் எனப்படும் வீட்டு காப்பீடு திட்டங்கள் நமக்கு இன்றியமையாதவையாக மாறி உள்ளன.குறிப்பாக பருவ மழை காலங்களில் இவை மிகவும் உதவிகரமாக இருக்கும் என்கின்றனர் காப்பீட்டு துறை சார்ந்த நிபுணர்கள்.

உதாரணமாக வீட்டு காப்பீட்டு பாலிசிகள் வெள்ளப்பெருக்கு, புயல், நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் ஏற்படும் சேதங்களுக்கு நிகரான காப்பீட்டுத் தொகையை நமக்கு வழங்குகின்றன. வீட்டின் கட்டமைப்பு, வீட்டில் இருக்கும் நமக்கு சொந்தமான பொருட்கள் ஆகியவற்றை நாம் இழக்கும் போது அல்லது அவை சேதமடையும் போது அதனை ஈடுகட்ட தேவையான நிதி பாதுகாப்பினை வீட்டு காப்பீட்டு பாலிசிகள் வழங்குகின்றன. ஒரு விரிவான வீட்டு காப்பீடு திட்டத்தினை எடுத்துக் கொள்வதன் நன்மைகள் குறித்து நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம்.
வீட்டை சுற்றி மழை நீர் தேங்குவது ,வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் வீட்டின் கட்டமைப்புகளில் ஏற்படும் பாதிப்புகளை சீரமைப்பதற்கான நிதி உதவியை இந்த காப்பீடு திட்டங்கள் வழங்குகின்றன.
இதனை கொண்டு வீட்டின் சுவர்கள், மேற்கூரைகள், அடித்தளங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளை நாம் சரி செய்து கொள்ள முடியும். வீட்டினுள் இருக்கும் நமக்கு சொந்தமான பொருட்கள் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்டவற்றின் போது சேதம் அடைந்திருந்தால் அதற்கான நிதி பாதுகாப்பையும் இந்த காப்பீடு திட்டங்கள் வழங்குகின்றன.
வீட்டில் இருக்கும் பொருட்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்படுவது மின்னணு சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைவது உள்ளிட்டவற்றை ஈடு கட்டுவதற்கான காப்பீடு தொகை நமக்கு கிடைக்கும். குறிப்பாக நமது துணிமணிகள், நமது சமையலறையில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் அல்லது அந்த பொருளையே மாற்ற வேண்டும் என வைத்துக் கொண்டால் அதற்கு நீங்கள் இந்த காப்பீட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதற்காக நீங்கள் தனிப்பட்ட முறையில் செலவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.
உதாரணமாக நகை, விலை உயர்ந்த கலைப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிரான ஒரு நிதி ரீதியான பாதுகாப்பையும் இது வழங்குகிறது. வீட்டில் மழைக்காலங்களில் மின்னல் தாக்குவது ,இடி விழுந்து மின்சார சாதனங்கள் பாதிக்கப்படுவது போன்றவற்றிற்கு எதிராகவும் இதில் நமக்கு காப்பீடு கிடைக்கும். ஒருவேளை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு பொருட்கள் சேதமடைந்தாலோ அல்லது வீட்டிற்கு சேதம் அடைந்தாலோ வீட்டிற்கான காப்பீடு திட்டங்கள் அதற்கான தொகையை ஈடுகட்டிவிடும்.
சில சமயங்களில் வெள்ளப்பெருக்கு நீண்ட நாட்கள் இருக்கிறது, மீட்பு பணிகள் தாமதமாகிறது எனவே குறிப்பிட்ட காலம் உங்கள் வீட்டுக்கே திரும்ப வர முடியாது நீங்கள் தற்காலிகமாக வேறு இடத்தில் தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்றால் குறிப்பிட்ட இடத்தில் தங்குவதற்கு தேவையான வாடகை உள்ளிட்ட செலவுகளையும் இந்த காப்பீடு திட்டங்கள் மூலம் நாம் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
எனவே அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அல்லது நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் வீடு கட்டி இருப்பவர்கள் அல்லது வசிப்பவர்கள் இந்த வீட்டு காப்பீட்டு பாலிசிகளை எடுத்துக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Story Written by: Devika
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications