வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) கணக்கீடு: ஒவ்வொரு மாத சம்பளக்காரர்களுக்கு தங்களுடைய சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை HRA பிரிவில் வழங்கப்படுகிறது. PAYSLIP-ஐ கவனமாக பார்த்து இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு இது தெரிந்திருக்கும், இதுவரையில் பார்த்தது இல்லை எனில் உடன் உங்கள் PAYSLIP-ஐ செக் பண்ணுங்க.
வாடகை வீட்டில் குடியிருக்கும் மாத சம்பளம் பெறும் ஊழியர்கள், ஒரு நிதியாண்டில் செலுத்தப்பட்ட வாடகைக்கு எதிராக HRA வரி விலக்கு கோர முடியும். சரி இதை யாரெல்லாம் பெற முடியாது என்பதையும் தெரித்துக்கொள்ள வேண்டும், மாத சம்பளம் பெறும் ஊழியர் வாடகை வீட்டில் வசிக்காமல் சொந்த வீட்டில் வசிப்பவராக இருந்தால் இந்த வசதி கிடைக்காது. மேலும் புதிய வருமான வரி விதிப்பை தேர்வு செய்வோருக்கும் இந்த வசதி இல்லை.

ஆனால் எது எப்படி இருந்தாலும் நீங்கள் பணியாற்றும் நிறுவனத்திடம் இருந்து அளிக்கப்படும் வீட்டு வாடகை கொடுப்பனவாக (HRA) பெறும் மொத்தத் தொகை அல்லது ஒரு வருடத்தில் நீங்கள் செலுத்தும் மொத்த வாடகையை எப்போதும் வருமான வரிச் சட்டத்தின் கீழ் முழுமையாக வரி விலக்கு பெற முடியாது. எப்படி என்பதை பார்க்கும் முன்பு இந்த HRA தொகையை எப்படி கணக்கிடுகிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
HRA பிரிவில் வரி விலக்கு பெற வேண்டும் எனில் வருமான வரி விதிகளின் கீழ், 3 பிரிவுகளில் குறைந்தபட்ச தொகை கருத்தல் கொள்ளப்படுகிறது.
1. கொடுக்கப்பட்ட உண்மையான HRA தொகை,
2. அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதத்திற்கு குறைவான தொகையை வாடகையாக தெலுத்தி இருந்தால்.
3. கொல்கத்தா, சென்னை, மும்பை மற்றும் டெல்லி ஆகிய 4 நகரங்களில் வாடகை வீட்டில் இருப்போருக்கு அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் வரையில் HRA பிரிவில் வரி விலக்கு பெற முட்டியும் அல்லது மேலே குறிப்பிட்டுள்ள 4 பெருநகரங்களைத் தவிர மற்ற நகரங்களில் வாடகை வீட்டில் இருந்தால் அடிப்படை சம்பளத்தில் 40 சதவீதம் மட்டுமே HRA பிரிவில் வரி விலக்கு கிடைக்கும்.
இதேபோல் ஒரு நிதியாண்டில் பணியாளர் வாடகை தொகையாக எதுவும் செலுத்தவில்லை என்றால், முழு HRA தொகைக்கும் வரி விதிக்கப்படும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
உதாரணம்: ரமேஷ் என்பவர் ஒரு வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் தொகையை வீட்டு வாடகையாக செலுத்துகிறார். இவருடைய வருடாந்திர HRA தொகை 2 லட்சம் ரூபாய், வருடாந்திர அடிப்படை சம்பளம் 4 லட்சம் ரூபாய்.
முதல் விதியின் கீழ் : மொத்த HRA தொகை - 2 லட்சம் ரூபாய்
இரண்டாவது விதியின் கீழ் : செலுத்திய வாடகை உடன் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதத்தை கழிக்க வேண்டும் - 100000 - 40000 = 60000 ரூபாய்
மூன்றாவது விதியின் கீழ் : கொல்கத்தா, சென்னை, மும்பை மற்றும் டெல்லி ஆகிய 4 நகரங்களில் வாடகை வீட்டில் இருந்தால் 2 லட்சம் ரூபாய், மற்ற நகரங்களில் இருந்து 1,60,000 ரூபாய்
இந்த 3ல் எது குறைவாக உள்ளதோ இதை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு மீதமுள்ள தொகைக்கு ரமேஷ்-ன் வருமான வரி பலகை அடிப்படையில் வரி செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications