திடீரென பணத் தேவை ஏற்பட்டு விட்டதா? நீங்கள் ஏற்கனவே வாங்கிய கடனிலேயே டாப் அப் செய்து கொள்ளலாம். அதாவது கூடுதலாக கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் செயல்படும் வங்கிகள் இந்த லோன் டாப் அப் வசதியை தருகின்றன. இவ்வாறு டாப் அப் செய்யும் நடைமுறை எளிதானதாகவும், குறுகிய காலத்திலேயே கடன் தொகையை பெற்று தருவதாகவும் இருக்கும்.
வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் வாகன கடன்களை நாம் டாப் அப் செய்யலாம். வீட்டினை சீரமைப்பது,கல்வி கட்டணம் ,மருத்துவ செலவு உள்ளிட்ட நிதி தேவைகளுக்காக லோன் டாப் அப் செய்து கொள்ள முடியும்.

இதற்கு நீங்கள் ஏற்கனவே வாங்கி இருக்கக்கூடிய கடனை சரியான வகையில் திருப்பி செலுத்தி இருந்தால் வங்கிகள் எந்த தயக்கமும் இன்றி உங்களுக்கு கூடுதலான தொகையை கடனாக வழங்கும் . உங்களது கிரெடிட் ஸ்கோர், உங்களது வருமானம் உள்ளிட்ட காரணிகளை வங்கிகள் கவனத்தில் கொண்டுதான் கடனை டாப் அப் செய்ய முடியுமா இல்லையா என்பதை தீர்மானம் செய்யும்.
எவ்வளவு தொகை டாப் அப்பாக பெற முடியும் என்பதை வங்கிகளே முடிவு செய்யும். நடப்பில் உள்ள கடனை நீங்கள் எவ்வாறு செலுத்தி இருக்கிறீர்கள் என்பதை கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுகிறது.
வட்டி விகிதங்களை பொறுத்தவரை ஏற்கனவே நீங்கள் வாங்கியுள்ள கடனுக்கான வட்டியை விட டாப் அப்பிற்கான வட்டி விகிதம் சற்று கூடுதலாகவே இருக்கும். ஆனால் தனிநபர் கடன்களுடன் ஒப்பிடும்போது இது குறைவானதாக இருக்கும் என வங்கி சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே வீட்டு கடன் வாங்கி இருந்தீர்கள் என்றால் உங்களது வீட்டினை புனரமைப்பு செய்வதற்கு டாப் அப் பெற்றுக் கொள்ள முடியும் அல்லது கூடுதலாக ஒரு அறையை கட்டுவது போன்ற விஷயங்களுக்காக உங்களுக்கு டாப் அப் கிடைக்கும்.
மருத்துவ செலவு, கல்வி செலவு போன்றவற்றுக்கு தனிநபர் கடனில் டாப் அப் செய்து கொள்ளலாம். பொதுவாக உங்களது கிரெடிட் ஸ்கோர் 750 க்கும் அதிகமாக இருந்தால் வங்கிகள் தாராளமாக உங்களுக்கு லோன் டாப் அப் செய்வார்கள்.
இது போல லோன் டாப் பெறும்போது அதனை திரும்ப செலுத்தும் காலம், கூடுதல் வட்டி விகிதம், உங்களுடைய தற்போதைய வருமானம் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். லோன் டாப் அப் செய்த பின்னர், கூடுதல் இஎம்ஐ செலுத்த வேண்டி இருக்கும் இது உங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Story written by: Devika
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications