மல்டிபேக்கர்-ன்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன..? இதை எப்படி கண்டுபிடிப்பது..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்குச்சந்தை முதலீட்டாளர்களும், புதிதாகப் பங்குச்சந்தை முதலீட்டுக்கு வந்தவர்களும் அடிக்கடி கேட்கும் வார்த்தை மல்டிபேக்கர்.

 

பங்குச்சந்தை வர்த்தகத்தில் பல சொற்களுக்கு முழுமையான அர்த்தம் தெரியாமலேயே பலரும் பயன்படுத்திப் பார்த்து இருப்போம், இதில் முக்கியமான ஒரு வார்த்தை தான் இந்த மல்டிபேக்கர்.

பொதுவாக மல்டிபேக்கர் என்ற சொல் வரும் அனைத்து இடத்திலும் ஒரு நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்திருக்கும். இந்த வகையில் இன்று மல்டிபேக்கர் என்பதற்கான பொருளை முழுமையாகத் தெரிந்துகொள்ள உள்ளோம்.

மல்டிபேக்கர்

மல்டிபேக்கர்

 

மல்டிபேக்கர் பங்குகள் நீண்ட காலமாகப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்து வரும் நிலையில் இதற்கு முக்கியமான காரணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் 100 சதவிகிதம் முதல் 1000 சதவிகிதம் வரையிலான மகத்தான வருமானத்தை அளிப்பது தான்.

மல்டிபேக்கர் பங்குகள் என்றால் என்ன?

மல்டிபேக்கர் பங்குகள் என்றால் என்ன?

அசல் முதலீட்டில் அதிவேகமாகப் பல மடங்கு வருமானத்தை வழங்கும் ஒரு பங்கு தான் மல்டிபேக்கர் பங்கு என்று அழைக்கப்படுகிறது. மல்டிபேக்கர் என்ற சொல் பழம்பெரும் நிதி மேலாளர் பீட்டர் லிஞ்ச் தனது சிறந்த விற்பனையான புத்தகமான 'ஒன் அப் ஆன் வால் ஸ்ட்ரீட்' இல் உருவாக்கப்பட்டது.

100- 1000 சதவீத வளர்ச்சி
 

100- 1000 சதவீத வளர்ச்சி

அத்தகைய பங்குகள் வழங்கும் வருமானம் குறைந்தபட்சம் 100 சதவீதமாக இருக்க வேண்டும் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் 1000 சதவீதத்திற்கு மேல் செல்லலாம். 10 முதலீடு 20 ரூபாய் முதல் 100 வரையில் உயர்வது தான் மல்டிபேக்கர்.

ஏசியன் பெயிண்ட்ஸ்

ஏசியன் பெயிண்ட்ஸ்

எடுத்துக்காட்டாக, மார்ச் 2012 முதல் ஏப்ரல் 2022 வரை ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 9.6 மடங்கு அதாவது 860 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது மார்ச் 30, 2012 அன்று ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவன பங்குகளில் நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்திருந்தால் 2022 ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.96 லட்சமாக மாறியிருக்கும்.

ROCE மற்றும் ROE

ROCE மற்றும் ROE

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் பத்தாண்டுக் காலத்தில் முதலீட்டுக்கு வழங்கிய சராசரி வருமானம் (ROCE) 35 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதே காலத்தில் இந்த நிறுவனம் ஈக்விட்டி வருவாய் (ROE) 27 சதவீதமாக உள்ளது.

ஆய்வு

ஆய்வு

மல்டிபேக்கர்களாக மாறக்கூடிய நிறுவனங்களைக் கண்டறிய ஒருவர் பல காரணிகளைத் தேடி ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அவற்றில் சில உங்களுக்காகக் கணிசமான ப்ரோமோட்டார் ஹோல்டிங் வைத்திருப்பது, நேர்மையான உயர் நிர்வாக, திறமையான மூலதன ஒதுக்கீடு, அதிக மார்ஜின் உடன் வணிகம், ROCE>18 சதவீதம், ROE>15 சதவீதம், குறைந்த கடன் அல்லது கடன் இல்லாதது, நிகர லாபம் மற்றும் பணப்புழக்கத்தில் நிலையான அதிகரிப்பு, நிறுவன மதிப்பீடு ஆகியவை முக்கியமான காரணியாக உள்ளது.

போர்ட்போலியோ

போர்ட்போலியோ

முதலீட்டாளர்கள் தனிப்பட்ட பங்குகளைக் குறிவைத்து ஆய்வு செய்வதிற்குப் பதிலாக, 20-25 பங்குகளின் கலவையைக் கொண்ட ஒரு சாத்தியமான மல்டிபேக்கர் பங்கு போர்ட்போலியோவைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்துவதே இன்றைய காலகட்டத்திற்குச் சிறந்த அணுகுமுறையாக இருக்கும்.

உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் முதலீடு செய்த மல்டிபேக்கர் பங்குகளை கமெண்ட் பண்ணுங்க. முதலீடு செய்யாட்டி தொடர்ந்து தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பாலோ பண்ணுங்க.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is Multibagger Stock? how to determine a Multibagger Stock?

What is Multibagger Stock? how to determine a Multibagger Stock?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X