ஓவர்டிராப்ட் வசதி என்பது அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பலவற்றிலும் வழங்கப்படுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் வங்கி என்பது முக்கிய அம்சமாக உள்ளன. இது நிதி பரிவர்த்தனையில் பல சேவைகளை நமக்கு அளிக்கின்றன.
இதனால் பல நன்மைகளும் உள்ளன. இதில் உள்ள முக்கிய வசதிகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை.
அவசர தேவைக்கு என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு திடீரென அவசர தேவையாக பணம் தேவைப்படுகிறது. வங்கிக் கணக்கிலும் பணம் இல்லை. அந்த சமயத்தில் என்ன செய்வீர்கள். இந்த காலகட்டத்தில் பலரும் செய்வது தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து கடன் வாங்குவோம். அதுவும் கிடைக்காத பட்சத்தில் நம்மிடம் உள்ள தங்க நகையை அடகு வைப்போம்.
தனி நபர் கடன் or ஓவர் டிராப்ட் வசதி
இதே சம்பளதாரர்கள் எனில் தனி நபர் கடனை அணுகலாம். இன்றைய காலகட்டத்தில் வங்கிகளே உடனடியாக பர்சனல் லோன் கொடுக்கின்றன. எனினும் இந்த காலகட்டத்தில் நீங்கள் ஓவர்டிராப்ட் வசதியினையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் வட்டியும் குறைவு. விரைவில் பெறலாம். சொல்லப்போனால் தங்க கடனை போல் தான் இதுவும். நகைக்கடனில் நகையை பிணையமாக வைத்துக் கொண்டு கடன் கொடுப்பார்கள். ஓவர்டிராப்டில் உங்களிடம் உள்ள சேமிப்புகளை பிணையமாக வைத்துக் கொண்டு கடன் கொடுப்பார்கள்.
எப்படி பெறுவது?
பொதுவாக இந்த ஓவர்டிராப்ட் வசதியினை பெற வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். இன்றைய காலக்கட்டத்தில் ஆன்லைனிலேயே பெறலாம். இதில் செயல்பாட்டு கட்டணமும் சற்று குறைவாகவே இருக்கும். பல வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு முன் கூட்டியே இது குறித்து கூறியிருக்கலாம். சில வங்கிகள் தெரியப்படுத்தாமலும் கூட இருக்கலாம். ஆக இதுபோன்ற விஷயங்களை தெரிந்து கொண்டால், அவசர காலக்கட்டங்களில் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சொத்துக்களுக்கு எதிரான ஓவர்டிராப்ட்
வங்கிகள் வீடுகளை பிணையமாக வைத்தும் ஓவர்டிராப்ட் வசதியினை செய்து கொடுக்கின்றன. இதில் சொத்தின் மதிப்பில் 40 - 50% கிடைக்கிறது. இது வங்கி வங்கிக்கு மாறுபடும். இதில் உங்களது பரிவர்த்தனை மற்றும் கிரெடிட் ஸ்கோரினையும் வங்கிகள் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.
பிக்சட் டெபாசிட் மீதான ஓவர்டிராப்ட்
பொதுவாக பிக்சட் டெபாசிட் மீதான ஓவர் டிராப்டில் 75% வரையில் கடனாக பெறலாம். இந்த வகையான கடன்களுக்கு வங்கிகள் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தினை காட்டிலும் 2% வரையில் அதிகமாக விதிக்கின்றன. இதில் உங்களது பிக்சட் டெபாசிட் தொகையானது பிணையமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இன்சூரன்ஸ் பாலிக்கு எதிரான ஓவர்டிராப்ட்
இன்சூரன்ஸ் பாலிசிதாரர்கள் தங்களது இன்சூரன்ஸ் பாலிசிகளை பிணையமாக வைத்தும் ஓவர்டிராப்ட் வசதியினை பெற்றுக் கொள்ளலாம். இதில் உங்கள் பாலிசியின் சரண்டர் மதிப்பினை பொறுத்து இருக்கும்.
ஈக்விட்டிகளுக்கு எதிராக ஓவர்டிராப்ட்
இதனை பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். முதலீட்டுக்கு முதலீடாகவும், இந்த முதலீடும் ஒரு புறம் வளர்ச்சி கண்டு கொண்டிருக்கும். கடனை சரியாக நேரத்தில் செலுத்தி விடும்பட்சத்தில் லாபத்திற்கு லாபமும் கிடைக்கும். கடனும் கிடைக்கும்.
சம்பளத்தின் மீதான ஓவர்டிராப்ட்
இதில் பல வகையான ஓவர்டிராப்ட் வசதிகள் உள்ளன. இதில் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனையை பொறுத்து கிடைக்கும். இது உத்தரவாதம் மற்றும் உத்தரவாதமற்ற சூழ்நிலைகளில் கிடைக்கிறது.
மாத சம்பளதாரர் எனில் உங்களது சம்பளத்திற்கு எதிராக கிடைக்கும். இது உங்களது சம்பளத்தில் 2 - 3 மடங்கு கிடைக்கும். இது வங்கிக்கு வங்கி மாறுபடும். இது ஷார்ட் டெர்ம் லோன் எனலாம். இதனை உங்களது சம்பள கணக்கு உள்ள வங்கிகளில் பெறலாம்.
எது பெஸ்ட்?
இதுபோன்ற ஓவர்டிராப்ட் கடன்களுக்கு எஸ்பிஐ வங்கியானது உங்களது டெபாசிட் தொகைக்கு மேலாக 1% வட்டி விகிதம் மட்டுமே வசூலிக்கிறது. டெபாசிட்டில் 90% வரையில் கடனாக பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதி மூலம் குறைந்தபட்சம் 25000 ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வரையில் கடனாக பெற்றுக் கொள்ளலாம். இதில் செயல்பாட்டுக் கட்டணம் கிடையாது. ப்ரீ பேமெண்ட் கட்டணமும் கிடையாது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications