சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்ற முடிவில் இருப்பவர்கள் அந்த நிலத்தை வாங்குவதற்கு முன்னர் குறிப்பிட்ட சில விஷயங்களை ஆய்வு செய்வது நல்லது. இல்லையென்றால் வேறு யாரேனும் ஒருவர் நிலத்தை உங்களுக்கு ஏமாற்றி விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
நிலம் வாங்கக்கூடியவர்கள் சொத்து வாங்க கூடியவர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகவே தமிழ்நாடு அரசு ஆன்லைன் வாயிலாகவே பட்டா சிட்டா உள்ளிட்டவற்றை தரவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளும் வசதியை வழங்கியிருக்கிறது. முதலில் பட்டா சிட்டா என்றால் என்ன இந்த ஆவணம் ஏன் முக்கியம் நிலம் வாங்குவதற்கு முன்னர் இதனை பற்றி தெரிந்து கொள்வது ஏன் கட்டாயம் என்பதை தெரிந்து கொள்ளலாம் .

ஒரு நிலத்திற்கு அரசு வழங்கக்கூடிய ஒரு சான்றிதழ் தான் பட்டா சிட்டா என வைத்துக்கொள்ளலாம் . நிலத்தின் உரிமையாளர் யார் , அந்த நிலம் எந்த வகையிலான நிலம், அதன் பரப்பளவு எவ்வளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இதில் அடங்கியிருக்கும். பட்டா என்பது ஒரு குறிப்பிட்ட நிலத்தின் உரிமையாளரின் பெயர் மற்றும் அந்த நிலம் தொடர்பான பிற தகவல்களை உள்ளடக்கியது . சிட்டா என்பது அந்த நிலத்தின் தன்மை அதாவது அது ஒரு விவசாய நிலமா, குடியிருப்பு பகுதியா என்பதை பற்றி தகவல்களை கொண்டிருக்கும் .
நீங்கள் ஆன்லைனில் இதனை ஈசியாக பார்த்துக் கொள்ளலாம் . ஒரு நிலத்திற்கான சட்டபூர்வ உரிமையை உறுதி செய்யக்கூடிய ஆவணம் தான் இது. ஒரு நிலத்தை வாங்கும் போது இந்த ஆவணம் கட்டாயம் தேவை. நிலம் வாங்குபவருக்கும் விற்பவருக்கும் சட்டபூர்வமான பாதுகாப்பை இவை வழங்குகின்றன .பட்டா , சிட்டா இல்லாத நிலத்தை ஒருபோதும் வாங்க கூடாது ஏனெனில் இந்த பட்டா சிட்டாவில் தான் உண்மையான உரிமையாளரின் விவரங்களே இடம்பெற்றிருக்கும்.
தமிழ்நாடு அரசு https://eservices.tn.gov.in/eservicesnew/home.html இணையதளம் வாயிலாகவே பட்டா சிட்டா பெரும் வசதியை அளித்திருக்கிறது. இதற்கு நீங்கள் எங்கும் சென்று அலைய வேண்டிய தேவையில்லை. உங்கள் வீட்டிலேயே லேப்டாப் அல்லது மொபைல் போன் வாயிலாகவே இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள் அங்கே நிலம் சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் காண்பிக்கும். அதில் பட்டா அல்லது சிட்டா விவரங்களை சரி பார்க்க என்பதை கிளிக் செய்து உங்களுடைய மாவட்டம் வட்டம் கிராமம் போன்ற தகவல்களையும் அந்த நிலத்திற்கான சர்வே எண் அல்லது பட்டா எண்ணையும் உள்ளிட வேண்டும் .
இதனை அடுத்து சில நிமிடங்களிலேயே உங்களுடைய பட்டா சிட்டாவை நீங்கள் pdf முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் நிலத்தின் உரிமையாளர் அதன் பரப்பளவு அது என்ன வகையான நிலம் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். எனவே ஒரு நிலம் வாங்குகிறீர்கள் என்றால் முதலில் அந்த நிலத்திற்கான பட்டா சிட்டா பதிவிறக்கம் செய்து அந்த நிலத்தின் உண்மையான உரிமையாளிடமிருந்து தான் அதனை வாங்குகிறீர்களா உங்களிடம் கூறிய நிலத்தின் அளவும் அதில் இடம்பெற்றிருக்கும் அளவும் ஒன்றுதானா என்பன உள்ளிட்டவற்றை சரி பார்த்துக் கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications