SIP என்றால் என்ன? இதனால் என்ன பயன்? யாருக்கு ஏற்றது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலீடு பற்றி பேசபபடும் போதெல்லாம், மியூசசுவல் பண்ட் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்காமல் இருக்க முடியாது. ஏனெனில் அதன் நீண்ட கால பலன் நிச்சயம் நீங்கள் அறிந்திருக்கலாம்.

மியூச்சுவல் பண்ட் முதலீடு என வரும் போது, எஸ்ஐபி மூலமாக செய்யப்படும் முதலீடு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்.

ஏனெனில் மியூச்சுவல் பண்ட் முதலீடு சிக்கலானது என நினைப்பவர்கள் கூட, இவற்றில் முதலீடு செய்வதற்கான எளிய வழியாக, எஸ்ஐபி என கருதப்படுகிறது.

எஸ்ஐபி (sip) என்றால் என்ன?

எஸ்ஐபி (sip) என்றால் என்ன?

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்பதனையே சுருக்கமாக, எஸ்ஐபி என அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் மாதந்தோறும் அல்லது காலாண்டு என, குறிப்பிட்ட காலக்கெடுவில், தொடர்ந்து முதலீடு செய்ய இந்த முறை வழிவகுக்கிறது. மியூச்சுவல் பண்ட்கள் யூனிட்களாக வாங்கப்படுவதால், ஒவ்வொரு தவணைக்கும் ஏற்ற அளவு யூனிட்கள் வாங்கப்படும்.

இதன் அவசியம்?

இதன் அவசியம்?

எஸ்ஐபி முதலீடு என்பது ஒரு சீரான முதலீட்டிற்கு வழிவகுக்கும். மேலும் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கம் குறித்தெல்லாம் பதற்றம் அடையாமல் சீரான முதலீடு செய்ய வழிவகுக்கிறது. சாதாரணமாக நாம் மாதாமாதம் முதலீடு செய்வதாக இருந்தால், அதற்கான நேரம் கிடைக்காமல் தள்ளிப்போடும் வாய்ப்பும் இருக்கிறது. மேலும் சந்தை நிலைக்கு ஏற்பவும் தள்ளிப் போடலாம். ஆனால் எஸ்ஐபி முறையில் தொடர்ந்து சீராக முதலீடு செய்து கொண்டிருக்கலாம்.

 என்ன பயன்?

என்ன பயன்?

எஸ்ஐபி முதலீட்டின் மிகப்பெரிய சாதகம், சராசரி பலன் மூலம், நிறைந்த பலனை பெறுவதாகும். அதாவது, இந்த முறையில் ஒவ்வொரு தவணைக்கும் ஏற்ற யூனிட்கள் வாங்கப்படும். சந்தை ஏற்றத்தில் இருந்தால், குறைவான யூனிட்களும், இறக்கத்தில் இருந்தால், அதிக யூனிட்களும் கிடைக்கும். மொத்தத்தில் சராசரியாக பார்க்கும் போது, சற்று லாபம் உள்ளதாக இருக்கும். இதனையே நீண்டகால முதலீடாக செய்யும் போது, கூட்டு வட்டி முறையின் பலனையும் பெறலாம்.

எவ்வளவு தேவை

எவ்வளவு தேவை

எஸ்ஐபி-யில் முதலீடு செய்ய, பெரிய தொகை தேவையில்லை. மாதம் தோறும் முடிந்த தொகையை முதலீடு செய்யலாம். அது 500 ரூபாய் என்ற அளவில் கூட நீங்கள் துவங்க முடியும். இதுவும் தொடர் வைப்பு நிதி திட்ட முதலீடு போன்றது தான். ஆனால் பங்குச்சந்தை முதலீட்டின் பலனை பெறலாம். பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளன. ஆக அவற்றினை சரியான முதலீட்டாளர்கள் ஆலோசனையுடன் உங்கள் தேவைக்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.

யாருக்கு ஏற்றது இந்த எஸ்ஐபி திட்டம்?

யாருக்கு ஏற்றது இந்த எஸ்ஐபி திட்டம்?

எல்லா வகையான முதலீட்டாளர்களும் இதில் பங்கேற்கலாம். குறிப்பாக பங்குச்சந்தை முதலீடு என்பது மிக சிக்கலானவை என நினைப்பவர்கள், இந்த முறையில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பங்கேற்கலாம். சமபங்கு சார்ந்த திட்டங்கள் உள்ளிட்டவற்றை தேர்வு செய்யலாம். தேவை எனில் எப்போது வேண்டுமானாலும், முதலீட்டை அதிகரித்துக் கொள்ளலாம். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தொடரலாம். இலக்கை அடைந்தவுடன் உங்களது முதலீட்டினை எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is SIP? You know everything about SIP?

SIP investment.. An investor has the flexibility to choose the amount, duration and the interval of the SIP. They also have the option to change the amount, pause or stop investment.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X