பொதுவாக எஸ்ஐபி முதலீடு செய்பவர்களுக்கு முதலீட்டு நிபுணர்கள் கூறக்கூடிய ஒரு முக்கியமான அறிவுரை ஸ்டேப்அப் எஸ்ஐபி. அதாவது ஒவ்வொரு ஆண்டும் உங்களுடைய எஸ்ஐபி தொகையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம்.
தற்போது இந்தியாவில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் எனப்படும் எஸ்ஐபி முறையில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது என்பது அதிகரித்துள்ளது. இவ்வாறு நாம் எஸ்ஐபி மூலம் செய்யக்கூடிய முதலீடு, குறைந்த முதலீடு தொகையில் நீண்ட காலத்தில் நமக்கு அதிக லாபம் தருபவையாக இருக்கின்றன. நாம் 100 ரூபாயில் இருந்து இந்த எஸ்ஐபி முதலீடுகளை தொடங்கி விட முடியும் என்பது தான் இதன் சிறப்பு சரி.

ஒரு நபர் 2025 ஆம் ஆண்டில் 100 ரூபாயிலிருந்து எஸ்ஐபி முதலீட்டை தொடங்குகிறார் என வைத்துக் கொண்டால் அடுத்த ஆண்டில் அந்த 100 ரூபாயை 150 ரூபாய் அல்லது 200 ரூபாயாக உயர்த்த வேண்டும். இவ்வாறு உங்களுடைய முதலீட்டை ஆண்டுதோறும் நீங்கள் அதிகரிக்கும் போது உங்களுக்கு கிடைக்கக்கூடிய லாபமும் அதிகரிக்கும். இதைத்தான் ஸ்டெப் அப் எஸ்ஐபி என்று அழைக்கிறார்கள்.
நீங்கள் செய்யக்கூடிய எஸ்ஐபி முதலீட்டை அடுத்த ஆண்டில் 10% அல்லது 20% வரை உயர்த்தலாம் என கூறுகின்றனர். உதாரணமாக மாதந்தோறும் 5,000 ரூபாய் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அடுத்த ஆண்டின் இதை 6 ஆயிரம் ரூபாய் என 20% உயர்த்தி முதலீடு செய்ய வேண்டும். இது உங்களுக்கு நீண்டகால நோக்கில் ஒரு நிதி சார்ந்த ஒழுக்கத்தை தருகிறது என்பதோடு மட்டுமில்லாமல் உங்களுடைய செல்வத்தை பெருமளவில் வளர்ச்சி அடைய செய்யும் என சொல்லலாம்.
ஒரு நபர் மாதம் தோறும் 5000 ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறார். ஆண்டுக்கு அவருடைய முதலீடு 12 சதவீத லாபம் தருகிறது. 10 ஆண்டுகளில் அவர் முதலீடு செய்த தொகை 6 லட்சம் ரூபாயாகவும் அவருக்கு திரும்ப கிடைக்கக்கூடிய தொகை 11.61 லட்சம் ரூபாயாகவும் இருக்கும்.
இதுவே அவர் ஆண்டுக்கு 20 சதவீதம் என தன்னுடைய எஸ்ஐபி தொகையை ஸ்டெப் அப் செய்திருந்தால் 10 ஆண்டுகளில் அவர் செய்த முதலீட்டுத் தொகை 15.57 லட்சம் ரூபாய் ஆகும், அவருக்கு திரும்ப கிடைக்கக்கூடிய தொகை 25.30 லட்சம் ரூபாயாக. எனவே ஆண்டுதோறும் உங்களுடைய எஸ்ஐபி தொகையை நீங்கள் ஸ்டெப் அப் செய்யும்போது சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல நீங்கள் எதிர்பார்க்காக தொகை கிடைத்துவிடும்.
Story Written By: Devika


Click it and Unblock the Notifications