GDP vs GNP – ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளவிட எது முக்கியம்?

டெல்லி: ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மதிப்பிடுவதற்கு பெரும்பாலும் ஜிடிபி என்ற பதத்தை பயன்படுத்துகிறோம். ஜிடிபி என்றால் என்ன? ஜிடிபி-க்கும் ஜிஎன்பி-க்கும் உள்ள வித்தியாசம் என்ன? இவற்றை அறிந்து கொள்வது ஏன் அவசியம் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஜிஎன்பி எனப்படும் மொத்த தேசிய உற்பத்தி ஆகிய இரண்டும் ஒரு நாட்டின் பொருளாதார செயல்திறன் மற்றும் அளவை மதிப்பீடு செய்வதற்கு பயன்படுத்தப்படும் முக்கிய அளவுகோல்கள் ஆகும்.

GDP vs GNP – ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளவிட எது முக்கியம்?


முதன்முதலாக ஜிடிபி என்ற பதமானது பொருளாதார அறிஞர் சைமன் கஷ்னெட்ஸால் 1934 ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் பொருளாதார அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது உருவாக்கப்பட்டது. ஒரு நாட்டின் பொருளாதார செயல்திறனை ஆய்வு செய்வதற்கான தன்னுடைய கருத்தாக்கத்தில் அவர் ஜிடிபி என்ற பதத்தை முன் வைத்தார்.

தற்போது உலகம் முழுவதும் ஜிடிபி என்பது ஒரு நாட்டின் பொருளாதார மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

அதே வேலையில் ஜிஎன்பி என்பது முதன் முதலில் 1939 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிஞர் காலின் கிளார்க் எழுதிய நேஷனல் இன்கம் அண்ட் அவுட்லைன் என்ற புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டது. ஒரு நாட்டின் மொத்த பொருளாதார மதிப்பீட்டை குறிப்பாக அந்த நாட்டின் குடிமக்கள் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் சம்பாதிக்கும் பணத்தை மதிப்பீடு செய்வதற்காக இந்த பதத்தை அவர் கொண்டு வந்தார்.

ஜிடிபி என்றால் என்ன?: மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பொதுவாக ஒரு வருடம் அல்லது ஒரு காலாண்டில் ஒரு நாட்டிற்குள் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பை அளவிடுகிறது.

உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நபர்களின் தேசியத்தை பொருத்தாமல் அந்த உற்பத்தியின் மதிப்பை இது கருத்தில் கொள்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நுகர்வு, முதலீடு, அரசாங்க செலவு மற்றும் நிகர ஏற்றுமதிகள் ஆகியவை அடங்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஒரு நாட்டின் புவியியல் எல்லைக்குள் நடைபெறும் பொருளாதார நடவடிக்கைகளை பிரதிபலிக்கிறது.

மொத்த தேசிய உற்பத்தி என்றால் என்ன: ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லது நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பு மொத்த தேசிய உற்பத்தி என அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நாட்டின் குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் சம்பாதித்த வருமானமும் இதில் அடங்கும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டில் இருந்து வரும் வருமானம் சேர்க்கப்பட்டு நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினரின் வருமானம் கழிக்கப்பட்டு இது கணக்கிடப்படுகிறது.

ஜிடிபி மற்றும் ஜிஎன்பி ஆகியவற்றுக்கு இடையிலான முக்கிய வேறுபாடு வெளிநாட்டில் சம்பாதித்த வருமானத்தை கணக்கிடுவதில் உள்ளது. ஜிடிபி ஒரு நாட்டின் எல்லைக்குள் நடக்கும் பொருளாதார செயல்பாடுகளை மட்டுமே குறிக்கிறது, ஆனால் ஜிஎன்பி ஒரு நாட்டின் குடிமக்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ உருவாக்கிய வருமானத்தை குறிக்கிறது.

உதாரணமாக A என்ற நாட்டில் பல பன்னாட்டு நிறுவனங்கள் அல்லது வெளிநாடுகளில் பணிபுரியும் குடிமக்கள் அதிகமாக இருந்தால் அதன் ஜிஎன்பி என்பது ஜிடிபி-யை விட அதிகமாக இருக்கலாம். உதாரணமாக அது 800 மில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 850 பில்லியன் டாலர் மொத்த தேசிய உற்பத்தியும் கொண்டிருக்கலாம்.

சுருக்கமாக ஜிடிபி ஒரு நாட்டின் எல்லைக்குள் மொத்த பொருளாதார உற்பத்தியை அளவிடுகிறது அதே நேரத்தில் ஜிஎன்பி குடிமக்கள் மற்றும் வணிகங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சம்பாதிக்கும் வருமானத்தை அடக்கியது.


Story written by: devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+